Search This Blog

Tuesday, 28 August 2012

மின் விளக்கு

அமெரிக்க பாடசாலை ஒன்றில் எட்டரை வயது சிறுவனை "இவன் அடி முட்டாள். பாடசாலையில் இருந்தால் மற்ற மாணவர்களையும் கெடுத்து விடுவான். இனி இவனுக்கு பாடசாலையில் அனுமதி இல்லை." என்று ஒர் கடிதம் எழுதி அந்த சிறுவனின் சட்டைப்பையில் வைத்து ஆசிரியர்களால் விரட்டப்பட்டவர்.

...
தாயார் கவலை கொண்டாலும், தைரியமாக வீட்டில் வைத்து பாடங்களை கற்று கொடுத்தார். தாயின் கல்வியிலே வளர்ந்த சிறுவன்.., பின்னாளில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.


இன்றும், அக்டோபர் 21ம் தேதி இரவு 9:59க்கு வீதி பயண விளக்குகளை தவிர, மிகுதி மின்சார விளக்குகள் அனைத்தையும் அணைத்து ஓரு நிமிடம்அமெரிக்காவை இருளாக்கி விட்டு, பின்னர் மீண்டும் ஒளிர விட்டு... தொலைக்காட்சி, வானொலியில் அறிவிப்பார்கள் இப்படி.., "எடிசன் பிறந்திருக்கா விட்டால் உலகம் இப்படி தான் இருளாக இருந்து இருக்கும்" என்று..!"


மேலே கூறிய அந்த முட்டாள் சிறுவன் தான் பின்னாளில் "விஞ்ஞானிகளின் தந்தை" என போற்றப்படும் "தாமஸ் அல்வா எடிசன்" ஆவார்.

இப்பொழுது சொல்லுங்கள்..! அந்த ஆசிரியர் கூறியது போல் எடிசன் முட்டாளா..? ஆகவே, யாரும் இங்கு முட்டாள் இல்லை.. நீங்களும் அடுத்தவர் அபிப்பிராயத்தில் வாழ்வதை விட்டு விடுங்கள். உங்களை நீங்களே நிர்ணயப்படுத்துங்கள். உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வைரம் இருக்கிறது. அதை பட்டை தீட்டுங்கள்......


நன்றி

Monday, 27 August 2012

முக்கனிகளில் ஒன்று பலா!





முக்கனியில் ஒன்று
இந்த பலா.

பெண்ணின் இதழை விட
சுவை இந்த பலா.

மூளைக்கும் ,உடலுக்கும்
பலம் சேர்க்கும் பலா .

ரத்தத்தை விருத்தி
செய்யும் இந்த பலா .

முள்ளாயிருந்தாலும்
சுவை தரும் பலா .

எதிர்ப்பு சக்தி தரும்
பழமாய் வலம் வரும்
இந்த பலா!

பழத்தில் பலா,
இது ஒரு நிலா.

நீர்க்கடுப்பு பிரச்சனை


[ பொதுவாக, சிறுநீரகம், சிறுநீர்ப்பை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால் நிறைய தண்ணிர், இளநீர், வாழைத்தண்டு, ஜூஸ், மோர், பார்லி மற்றும் ஜவ்வரிசி கஞ்சி போன்றவற்றைச் சாப்பிடுங்கள்.] சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் மற்றும் வலியுடன் அசௌகரியமான உணர்வு ஏற்படுவதுதான் நீர்கக்டுப்பு. சிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று அல்லது புண் இருப்பது, தண்ணிர் அதிகம் குடிக்காமல் இருப்பது.... போன்ற காரணங்களால் நீர்க்கடுப்பு ஏற்படலாம். இது பச்சிளம் குழந்தைகளில் இருந்து முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக் கூடிய பிரச்னைதான். நாம் உண்ணும் உணவை செரிப்பதற்கும், நம் உடலில் உள்ள கழிவுகளை அவ்வப்போது சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதற்கும் தண்ணிர் தேவை. போதுமான அளவு தண்ணிர் குடிக்கமால் இருக்கும்போது, சிறுநீராக பிரிந்து வரும் நீரின் அடர்த்தி அதிகமாகி நீர்க்கடுப்பு (Strangury) ஏற்படுகிறது. இதற்கு ஒரே தீர்வு நிறைய தண்ணிர் குடிப்பதுதான். சில சமயம் நீர்க்கடுப்பு, சர்க்கரை நோயின் வெளிப்பாடாகக்கூட இருக்கலாம். அதனால் நிறைய தண்ணிர் குடித்தும் நீர்க்கடுப்பு அடிக்கடி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
பொதுவாக சிறுநீர் வருகிற மாதிரி தோன்றியதுமே சிறுநீர் கழித்து விட வேண்டும். மணிக்கணக்கில் அளவுக்கு அதிகமாக அடக்கி வைக்கக் கூடாது. அப்படி அடக்கி வைப்பதால் சிறுநீர்ப்பை விரிவடைந்து அந்தப் பையில் கண்ணுக்குத் தெரியாத சின்னச் சின்ன விரிசல்கள் ஏற்பட்டு, அங்கிருக்கும் கிருமிகள் அந்த விரிசல்கள் மூலமாக ரத்தத்தில கலந்துவிடும் அபாயம் இருக்கிறது. எனவே, எப்போதும் சிறுநீரை அடக்கி வைக்கவே வைக்காதீர்கள். இதைத்தான் அந்தக் காலத்திலேயே பெரியவர்கள்''ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்காதே'' என்று சொன்னார்கள். சிலருக்கு நீர்க்கடுப்பு போலவே நீர் எரிச்சலும் இருக்கும். பொதுவாக அனைவருக்கும் சிறுநீர்ப்பாதை வழவழவென்று இருக்கும். உடலில் போதுமான நீர் இருக்கும்போது அந்தப் பாதையில் சிறுநீர் எளிதாக பயணித்து வெளியே வந்து விடும்.
ஆனால், தண்ணிர் அதிகம் குடிக்காமல் இருக்கும்போது சிறுநீரின் அடர்த்தி அதிகமாகி, அதிலுள்ள கழிவுகளும் படிமங்களும் அந்தப் பாதையை அரிப்பதுடன் அங்கேயே தங்கியும் விடும். இப்படி தங்கும் படிமங்களும் கழிவுகளும் கிருமிகள் அங்கே தாக்குவதற்கு வசதியாக அமைந்து விடுவதுடன் அங்கிருக்கும் நரம்புகளைத் தூண்டி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலை ஏற்படுத்தும். இதற்கு மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ளுதல் அவசியம்.
சிறுநீர் கழித்த பிறகு பிறப்புறுப்பை சரியாக சுத்தம் செய்யாவிட்டால், நுண்கிருமிகளால் தொற்று ஏற்பட்டு விடும். இதை சிறுநீர்த் தொற்று (யூரினரி இன்ஃபெக்ஷன்) என்பார்கள். எனவே எப்போது சிறுநீர் கழித்தாலும் நன்றாக சுத்தம் செய்வது நல்லது.திருமணமான தம்பதிகளுக்கு தாம்பத்திய உறவின் காரணமாக நீர்க்கடுப்பு ஏற்படலாம். பொதுவாக மலக்குடலில் இருந்து மலம் வெளியேறும் இடத்தில் எப்போதும் சில கிருமிகள் இருக்கும். தாம்பத்திய உறவின் போது, சிலருக்கு அந்தக் கிருமிகளில் சில சிறுநீர்ப் பாதைக்குள் சென்று விட வாய்ப்பு இருப்பதால், உறவு முடிந்ததும் பெண்கள் கண்டிப்பாக பிறப்புறுப்பை தண்ணிரால் சுத்தம் செய்வதோடு சிறுநீரும் கழிப்பது நல்லது.
சிலருக்கு பேசிக் கொண்டிருக்கும்போதோ அல்லது இருமும்போதோ தானாகவே சிறுநீர் வெளிவந்து விடும். சிறுநீர்ப்பையின் வாயை திறந்து மூடும் தசைகள் பலமிழந்து போவதால்தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. உடல் பருமன், பிறப்புறுப்பு இறங்குதல் உள்ளிட்ட சில காரணங்களால் இப்படி நேரலாம். சிறுநீர்ப் பையின் தசைகள் இயல்பு நிலைக்கு வருவதற்கான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலமும் சர்ஜரி மூலமும் இதை குணப்படுத்தி விடலாம்.
பொதுவாக, சுகப் பிரசவத்தைச் சந்திக்கும் பெண்களில் சிலருக்கும் இந்தப் பிரச்னை ஏற்படக் கூடும். குழந்தைப் பிறப்பின்போது விரிவடையும் சிறுநீர்ப்பையின் வாய்ப்பகுதி, மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பாததுதான் இதற்குக் காரணம். இவர்கள் பிரசவம் முடிந்ததும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி அடிவயிற்று தசைகளை பலப்படுத்துவது போன்ற சில பிரத்யேக உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் இதைச் சரிசெய்து விடலாம்.
பொதுவாக, சிறுநீரகம், சிறுநீர்ப்பை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால் நிறைய தண்ணிர், இளநீர், வாழைத்தண்டு, ஜூஸ், மோர், பார்லி மற்றும் ஜவ்வரிசி கஞ்சி போன்றவற்றைச் சாப்பிடுங்கள். இவையெல்லாம் அருமையான நம் பாட்டி வைத்தியமுறை சிறுநீர் பெருக்கிகள், பிறகு இதுபோன்ற எந்தப் பிரச்சினையும் உங்களை அண்டவே அண்டாது.''

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்


மூளை
  • 1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
    காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
    brain
    2. மிக அதிகமாகச் சாப்பிடுவது
    இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

    3. புகை பிடித்தல்
    மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

    4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
    நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

    5. மாசு நிறைந்த காற்று
    மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும்.

    6. தூக்கமின்மை
    நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

    7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
    தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

    8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
    உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

    9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
    மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

    10. பேசாமல் இருப்பது
    அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

    மனிதனின் குணம்

    Photo: இயன்றவன் சாதிக்கின்றான்...

இயலாதவன் போதிக்கின்றான்...


புரிந்தவன் சிந்திக்கின்றான்...

புரியாதவன் விவாதிக்கின்றான்...


முடிந்தவன் வெற்றியடைகின்றான்..

முடியாதவன் புலம்பி தவிக்கிறான்..


பாவி ஏமாற்றுகின்றான்..

அப்பாவி ஏமாறுகின்றான்..


அரக்க குணமுள்ளவன்

அநியாயம் செய்கின்றான்..


பாவம்...

இரக்க குணமுள்ளவன்

அனைத்தையும் சுமக்கின்றான்.






-மு.மன்சூர் அலி....இயன்றவன் சாதிக்கின்றான்...

    இயலாதவன் போதிக்கின்றான்...


    புரிந்தவன் சிந்திக்கின்றான்...

    புரியாதவன் விவாதிக்கின்றான்...


    முடிந்தவன் வெற்றியடைகின்றான்..

    முடியாதவன் புலம்பி தவிக்கிறான்..


    பாவி ஏமாற்றுகின்றான்..

    அப்பாவி ஏமாறுகின்றான்..


    அரக்க குணமுள்ளவன்

    அநியாயம் செய்கின்றான்..


    பாவம்...

    இரக்க குணமுள்ளவன்

    அனைத்தையும் சுமக்கின்றான்.

    ஜனாஸா தொழுகை

    ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது என்று நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்....


    முதல் தக்பீர் கூறிய பின் அல்ஹம்து அத்தியாயத்தை (சூரத்துல் ஃபாத்தியா) ஓத வேண்டும்.


    இரண்டாம் தக்பீர் கூறிய பின் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும் ”அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.


    மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்கு பின்....

    இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும், மறுமை நன்மைக்காகவும் துஆச் செய்ய வேண்டும். ஜனாஸா தொழுகையின் போது நபி(ஸல்) அவர்கள் பல்வேறு துஆக்களை கேட்டுள்ளார்கள். அவற்றில் இயன்றதை நாம் ஓதிக் கொள்ளலாம்.

    அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் ஃகைரன் மின் தாரிஹி வஅஹ்லன் ஃகைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் ஃகைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ர் வமின் அதாபின்னார் அறிவிப்பவர் அவ்ஃப் பின் மாலிக்(ரலி) நூல்- புஹாரி.

    பொருள்: இறைவா..!

    இவரை மன்னித்து அருள் புரிவாயாக..!

    இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..!

    இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!

    இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக..!

    பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக..!

    அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக..!

    கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!



    Sunday, 26 August 2012

    பாங்கு டைம் டேபிள்


    நமது சில சகோதரர்கள் -குரான் ஓதமட்டார்கள் ஆனால் ஆயத்து குர்ஸ் பலகை வேண்டி வீட்டில் மாட்டிக்கொள்வார்கள் ,தொழமாட்டார்கள் ஆனால் பாங்கு சொன்னால் ஓடிப்போய் ரேடியோவை பூட்டுவார்கள் ,கந்தூரி ,மௌலுது ,27ம் கிழமை மாடு அறுக்கும் நிகழ்ச்சி என்றால் அதற்கு மிகவும் கஷ்டப்படுவார்கள் அது மட்டுமல்ல அன்றைக்கு அமீர் சாப்பில இருந்து ஒரு குறுப்புக்கே தொழுகை இருக்காது தொழுகை நடைபெறும் அவர்கள் கடும் பிசியாக வீடி அடிச்சிக்கி இருப்பார்கள் இப்படியானவர்கள் இஸ்லாம் என்றால் என்ன அது எப்படியான சட்டம் என்பதை தேடி படிக்கவும் மாட்டார்கள் படித்தவர்கள் உண்மையை சொன்னால் அவர்களை குழப்பாவாதிகள் என்று ஓதிக்கியும் விடுவார்கள் ** இவர்களுக்கு தெரிந்த இஸ்லாம் ( மய்யதின் ஆண்டவர் மெயின் போடர் ,கோழி மோதினார் தண்ணி பருக்கி அறுக்கனும் அப்பத்தான் சாப்புடுவார்கள் ,இப்ப கொஞ்சம் பரவாயில்ல கோழிக்கடை வந்ததால அது கொஞ்சம் கொரஞ்சுத்து (பாவம் மோதினுக்குத்தான் பொழப்பு போச்சி) அடுத்தது துனியாவில உள்ள ஷிர்க் ,பிதஆ கஞ்சா சாராயம் எண்டு ஒருவர் செஞ்சிக்கிட்டே இருப்பார் திடீர் எண்டு ஒரு வெள்ளிக்கிழம ராவு இல்லலாட்டி நோம்பு 27ம் கிழம மகுத்தாப்போனா இருக்கவன் சொல்றது 'சா நல்ல மகுத்து இப்புடி ஒரு மகுத்து ஆருக்கும் கிடைக்குமா என்று அவன இவர்கள் சொர்க்கவாதி ஆக்கிவிர்றது (அவன்ர சிர்று அல்லாக்குத்தான் தெரியும் ) இவர்கள் முடிவு செய்து விடுவார்கள், காலையில இஸ்லாமிய கீதம் எண்டு ஒரு நாசமாப்போன பாட்டு அத சுபகில போட்டா முப்பது துசுவையும் முழுசா ஒதினதுக்கு சமன் *வெள்ளிக்கிழம ஜும்மாக்கு மட்டும் சேவெடுத்து சென்ட் அடிச்சி ஒரு கைலேஞ்சும் தலையில கட்டிக்கு வந்து பள்ளிக்குள்ளயும் வாரதில்லை ஜும் ஆ முடியும் வரைக்கும் மரத்துக்கு கீழ பேசிக்கிட்டே நிக்கிற இகாமத் சொல்றப்போ ஓடி வார என்னமோ யுத்தக்கு போற மாதிரி அது முடின்ஞ்சி ஊட்ட போய் அந்த கைலேஞ்ச கலட்டி எறிஞ்சா இனி அடுத்த வெள்ளிக்கிழம தான் அந்த கைலேஞ்சிக்கு வேல *சுபஹுக்கு பாங்கு சொன்னா வேலைக்கு போற லுஹருக்கு பாங்கு சொன்னா வேலைய முடிக்கிற அசருக்கு பாங்கு சொன்னா கடைத்தெருவு போடியார் சந்திப்பு மகரிப்பு பாங்கு சொன்னா நாளக்கி வேலக்கி போற சாமான் வேண்றது அதோட ஒரு கஞ்சா சுறுட்டு அப்பத்தான் இசாவுக்கு நல்லா சாப்பிடலாம் இப்படி பாங்கு சிலருக்கு வாழ்க்கை டைம் டேபிள் *************

    My Blog List