Search This Blog

Sunday 21 September 2014

பாசிப் பயறின் பயன்கள்

பாசிப்பயறில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளன. புரதம், கார்போஹைட்ரேட்டுடன், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.
கர்ப்ப காலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயறைக் கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்குச் சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளரிளம் பருவத்தினருக்கும் பாசிப்பயறு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வயிற்றுக் கோளாறு இருப்பவர்கள் பாசிப்பயறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம். சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயறு ஊற வைத்த தண்ணீரை அருந்தக் கொடுக்கலாம். அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப் பயறு சிறந்த மருந்துப் பொருளாக விளங்குகிறது.
மணத்தக்காளி கீரையோடு பாசிப்பயறையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசனவாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.
பாசிப்பயறை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பயறை வல்லாரைக் கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

My Blog List