Search This Blog

Monday 24 October 2011

கொஞ்சம் கேளுங்கள் !!!

1. எதையும் செய்யத் துவங்கும் பொது நீ என்ன கூறுவாய்?

எதையும் செய்யத்துவங்கும்போது நான் பிஸ்மில்லாஹ் அல்லாஹ்வின் திருநாமத்தால் என்று கூறி ஆரம்பிப்பேன்.

2. எதையேனும் செய்ய நாடினால் நீ என்ன கூறுவாய்?

நான் இன்ஷா அல்லாஹ்- அல்லாஹ் நாடினால் என்று கூறுவேன்.

3. எதையும் பாராட்டும் போது?

மாஷா அல்லாஹ்- எல்லாம் அல்லாஹ்வின் நாட்டமே என்று புகழுவேன்.

4. பிறர் எதையும் புகழும் போது நீ என்ன கூறுவாய்?

சுப்ஹானல்லாஹ் -அல்லாஹ் மிகத் தூய் மையானவன்என்று கூறுவேன்.

5. இன்பத்திலும் துன்பத்திலும் நீ யாரை அழைப்பாய் ?

நான் யாஅல்லாஹ் -அல்லாஹ்வே என்று இறைவனைமட்டும் அழைப்பேன்.

6. பிறருக்கு நீ எவ்வாறு நன்றி கூறுவாய்?

ஜஸாகல்லாஹ் -அல்லாஹ் நற்கூலி கொடுப்பானாக என்று கூறுவேன்.

7. தும்மினால் நீ என்ன கூறுவாய் ?

தும்மினால் நான் அல்ஹம்துலில்லாஹ்- எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுவேன்.

8. பிறர் தும்மி அவர் அல்லாஹ்வைப் புகழுந்தால் நீ என்ன கூறுவாய் ?

யர்ஹமுகல்லாஹ் -அல்லாஹ் அருள் பாவிப்பானாக என்று அவருக்காக பிராத்திப்பேன்.

9. நாம் தும்மி நமக்காக பிறர் துஆச் செய்தால் நீ என்ன கூறுவாய் ?

யஹ்தீகு முல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலகும்.அல்லாஹ் உம்மை நேர்வழிப் படுத்தி உமது எல்லா செயல்களையும் சீர்படுத்துவானாக என்று கூறுவேன்.

10. நீ செய்த தவறை நினைத்து வருந்தும் போது என்ன கூறுவாய் ?

அஸ்தஃபிருல்லாஹ் -அல்லாஹ் பிழை பொறுப்பானாக என்று கூறுவேன்.

11. நாம் சத்தியம் செய்தால் எவ்வாறு கூறவேண்டும் ?

வல்லாஹி பில்லாஹ் -அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று கூறவேண்டும்.

12. யார் மீதும் அன்பு பாராட்டும் போது நீ எவ்வாறு கூறுவாய் ?

லிஹூப்பில்லாஹ் -அல்லாஹ்வின் அன்பிற்காக என்று கூறுவேன்.

13. பிறரிடமிருந்து விடை பெறும் போது எவ்வாறு நாம் கூறவேண்டும் ?

ஃபீஅமானில்லாஹ்- அல்லாஹ்வின் அடைக்கலத்தில் என்று கூறி விடைபெறுவேன்.

14. நமக்கு ஏதும் பிரட்சினைகள் ஏற்பட்டால் நாம் என்ன கூறவேண்டும் ?

தவக்கல்த்து அலல்லாஹ் -அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தேன்.

15. நாம் விரும்பியது நடந்தால் என்ன கூறவேண்டும் ?

ஃபதபாரகல்லாஹ் -அல்லாஹ் உயர்வானவன் என்று கூறவேண்டும்.

16. நாம் விரும்பாத ஒன்று நடந்து விட்டால் என்ன கூறவேண்டும் ?

நஊதுபில்லாஹ் - அல்லாஹ்விடம் காவல் தேடுகிறோம் என்று கூறவேண்டும்.

17. திடுக்கிடக் கூடிய அளவில் ஏதேனையும் நீ அறியும் போது என்ன கூறுவாய் ?

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

நாம் அல்லாஹ்விடமே வந்தோம் மேலும் அவனிடமே திரும்புபவர்களாக உள்ளோம் என்று கூறுவேன்.

18. தூக்கத்திலிருந்து விழித்துக் கூறப்படுபவை ?

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஃதமா அமாதனா வஇலைஹின் னுஷூர்.

பொருள்: நம்மை மரணிக்கச் செய்த பின் நமக்கு உயிர் கொடுத்தவனாகிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக.

19. ஆடை அணிகிற போது (கூறப் படும்) துஆ?

அல்ஹம்து லில்லாஹில் லதீ கஸானீ ஹாதா(ஸ்ஸவ்ப) வரஜகனீஹி மின் ஃகைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வதின்.

பொருள்: இந்த ஆடையானதை அவனுடைய உதவியொடு என்னிடமிருந்து எவ்வித பிரயாசை மற்றும் எவ்வித சக்தியுமின்றி எனக்கு அணிவித்து, அதனைஎனக்கு அளித்தவனுமாகிய அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும் உரித்தாகுக.

20. புத்தாடை அணியும் போது (கூறப்படும்) துஆ ?

அல்லாஹூம்ம லகல் ஹம்து அன்த கஸவ்தனீஹி அஸ்அலுக மின் கைரிஹி

வகைரி மாஸூனிஅ லஹூ வ அஊதுபிக மின் ஷர்ரிஹி வஷர்ரி மா ஸூனி அலஹூ.


பொருள் : யாஅல்லாஹ் புகழ் அனைத்தும் உனக்கே உரியது, நீதான் எனக்கு அதை அணிவித்தாய், அதன் நன்மை மற்றும் எதற்காக அதை தயார் செய்யப்பட்டதோ அதன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன் இன்னும் அதன்தீமை மற்றும் எதற்காக அதைத்தயார் செய்யப்பட்டதோ அந்தத் தீமையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாக்கத் தேடுகிறேன்.

21. தன்னுடைய ஆடையை அவர் கலையும் போது அவர் கூறவேண்டியது?

பிஸ்மில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வின் பெயரால்...

22. கழிவறையில் நுழைகின்ற போது துஆ?

(பிஸ்மில்லாஹி) அல்லாஹூம்ம இன்னீ அஊது பிக மினல் குபதி வல் கபாயிதி
பொருள் : (அல்லாஹ்வின் பெயரால) பிரவேசிக்கறேன் யாஅல்லாஹ் ஆண் ஷைத்தான் பெண் ஷைத்தான்களி(ன்தீமையி)லிருந்து உன்னைக் கொண்டு நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்.

23. வுளுச் செய்யுமுன் கூறப்பட வேண்டியது?

பிஸ்மில்லாஹி

24. வுளுவை முடித்துக் கொண்ட பின் கூறப்பட வேண்டியது?

அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹூ வஹ்தஹூ லாஷரீக லஹூ வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ

பொருள் : வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு எவரும், எதுவும்) இல்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணையில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன் இன்னும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அவனுடைய (உரிய) அடியார் மற்றும் அவனுடைய தூதர் எனசாட்சி கூறுகிறென்.

25. வீட்டிலிருந்து புறப்படும்போது நாம் என்ன கூறவேண்டும்?

பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி வலா ஹவ்ல வலா குவ்த இல்லாபில்லாஹி.

பொருள் : அல்லாஹ்வின் பெயரால் (புறப்படுகிறேன், என் காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) அல்லாஹ்வின் மீது நம்பிக்கைவைத்து விட்டேன் மேலும், அல்லாஹ்வைக் கொண்டல்லாது (பாவத்திலிருந்து) திரும்புதலும்.(நன்மை யானவற்றைச் செய்வதற்கு) சக்தியுமில்லை.

26. வீட்டினுள் நுழையும்போது நாம் என்ன கூறவேண்டும்?

பிஸ்மில்லாஹி வலஜ்னா,வபிஸ்மில்லாஹி கரஜ்னா, வஅலா ரப்பினாதவக்கல்னா.

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் நுழைந்தோம் அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே புறப்படுவோம் நம்முடைய இரட்சகனின் மீது (நம்முடைய காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.

27. பாங்கின் போது கூறப்படுபவை?

ஹய்ய அலஸ்ஸலாதி மற்றும் ஹய்ய அலல் ஃபலாஹி என்பது நீங்கலாக பாங்கு

கூறுபவர் போன்றே (செவியேற்பவரான) அவர் கூறுவார். (இவ்விரு வார்த்தைகளை செவியேற்கின்றபோது) லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹி என்று அவர் கூறுவார்.

28. காலை மற்றும் மாலையில் கூறப்படுபவை?

அல்ஹம்துலில்லாஹி வஹ்தஹூ, வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா மன்லா நபிய்ய பஃதஸூ.

பொருள் : புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே அவன் தனித்தவன்(அல்லாஹ்வின்) அருளும், சாந்தியும் அவர்களுக்கு பின் நபியில்லையே அத்தகையவர்களின் மீது உண்டாவதாக.

29. தூக்கத்தில் திடுக்கம் மற்றும் பயங்கரத்தால் பாதிக்கப்பட்டவருக்கு துஆ?

அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹி வஇகாபிஹி, வஷர்ரி இபாதிஹி, வமின்ஹமஜாத்திஷ் ஷையாத்தீனி, வஅன்யஹ்ளுருன்.

பொருள் : அல்லாஹ்வின் பரிபூரணமான வாக்குகளைக் கொண்டு - அவனின் கோபம், அவனின் தண்டனை அவனுடைய அடியார்களின் தீமை ஆகியவற்றிலிருந்தும் இன்னும் ஷைத்தான்களின் தூண்டுதல்கள் மற்றும் அவர்கள் என்னிடம் ஆஜராகுவதிலிருந்தும் நான் காவல் தேடுகிறேன்.

30. தொழுகை மற்றும் ஓதலில் (ஷைத்தானின்) ஊசலாட்ட(த்தை நீக்க) துஆ?

அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்று கூறி உம்முடைய இடப்பக்கம் மூன்று முறை துப்புவீராக.

31. நோயாளருக்காக (அவரை நலம் விசாரிக்கையில் ) ஓதும் துஆ?

லா பஃஸ தஹூருன் இன்ஷா அல்லாஹ்.

பொருள்: எந்தக் குற்றமும் இல்லை, அல்லாஹ் நாடினால் (இந்நோயினால் உங்களுக்கு பாவம்) பரிசுத்தமாகும்.

32. காற்று வீசுகின்ற போது ஓதும் துஆ?

அல்லாஹூம்ம இன்னீ அஸ் அலுக கைரஹாஈ வ அஊது பிக மின்ஷர்ரிஹா.

பொருள்: யாஅல்லாஹ் நிச்சயமாக அ(க் காற்றான)தன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன் அதன் தீமையிலிருந்தும் உன்னைக் கொண்டு நான் காவல் தேடுகிறேன்.

33. இடி இடிக்கின்ற போது ஓதும் துஆ?

ஸூப்ஹானல்லதீ யுஸப் பிஹூர் ரஃது பிஹம்திஹி, வல்மலாயிகத்து மின் கீஃபதிஹி.

பொருள் : அவன் தூயவன், அவன் எத்தகையவனென்றால் அவனின் புகழைக் கொண்டு இடி துதிக்கிறது. மற்றும் மலக்குகள் அவனின் பயத்தால் துதிக்கின்றனர்.

34. நோன்பு திறந்தபின் ...

தஹபழ் ழமஉ, வப்தல்லதில் உருக்கு, வதபத்தல் அஜ்ரு இன்ஷாஅல்லாஹ்.

பொருள் : தாகம் தனிந்தது, நரம்புகளும் நனைந்து விட்டன, அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைக்கும்.

35. உணவுக்கு முன்னர் துஆ?

உங்களில் ஒருவர் உணவு உண்டால் (1) பிஸ்மில்லாஹ் என்று கூறவும் அதன் ஆரம்பத்தில் கூற அவர் மறந்து விட்டால் (2)பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி என அவர் கூறவும்.

பொருள் : (1) அல்லாஞ்வின் பெயரால் (உண்கிறேன்). (2) அதன் தொடக்கம் அதன் முடிவு ஆகியவற்றில் பிஸ்மில்லாஹ்.

36. உணவை உண்டு முடித்தபின் துஆ?

அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனீ ஹாதா வரஜகனீஹி, மின் ஃகைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வத்தின்.

பொருள்: என்னிலிருந்துள்ள முயற்சி மற்றும் என்பலமின்றி எனக்கு இதை உண்ணக் கொடுத்து அதை வழங்கவும் செய்தவனாகிய அல்லாஹ்விற்கே புகழனைத்தும் உரித்தாகுக.

37. உணவளித் தவருக்காக விருந்தாளியின் துஆ

அல்லாஹூம்ம பாரிக் லஹூம் ஃபீமா ரஜக்தஹூம், வஃக் ஃபிர்லஹூம் வர்ஹம் ஹூம்.

பொருள் : யாஅல்லாஹ் அவர்களுக்கு நீ வழங்கியவற்றில் அவர்களுக்கு நீ பரகத்துச் செய்வாயாக, அவர்களுக்கு நீ பாவம் பொருத்தருளவும் செய்வாயாக, அவர்களுக்கு நீ அருளும் செய்வாயாக,

38. நோன்பாளர் - அவரை எவராவது ஏசினால் அவர் கூற வேண்டியது?

இன்னீ ஸாயிமுன் இன்னீ ஸாயிமுன்.

பொருள் : நிச்சயமாக நான் நோன்பாளன், நிச்சயமாக நான் நோன்பாளன்.

39. கோபம் நீங்கதுஆ?

அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.

பொருள் : எறியப்பட்ட ஷைத்தானி(ன்தீமையி)லிருந்து அல்லாஹ்வைக் கொண்டு காவல் தேடுகிறேன்.

40. இணை வைப்பதிலிருந்து பயந்ததற்கு துஆ?

அல்லாஹூம்ம இன்னீ அஊது பிக அன் உஷ்ரிக பிக வஅன அஃலமு,

வஅஸ்தஃக்ஃபிருக லிமா லா அஃலமு.


பொருள்: யாஅல்லாஹ் நிச்சயமாக நான், அறிந்து கொண்டே உனக்கு இணைவைப்பதிலிருந்து உன்னைக் கொண்டு நான் காவல் தேடுகிறேன், நான் அறியாதவற்றுக்காக உன்னிடம் பாவம் பொருத்தருளவும் தேடுகிறேன்.

41. அல்லாஹ் உமக்கு பறகத்துச் செய்வானாக என்று கூறியவருக்கு துஆ?

வ ஃபீக பாரகல்லாஹ்.

பொருள் : அல்லாஹ் உம்மிலும் பரகத்துச் செய்வானாக.

42. பிரயாணத்தில் செல்லுகையில் தக்பீர் மற்றும் தஸ்பீஹ் கூறுதல்?

நாங்கள் (மேட்டுப்பகுதியில்) ஏறுகின்ற போது (அல்லாஹூஅக்பர் எனத்) தக்பீர் கூறுவோராக, (பள்ளத்தில்) இறங்குகின்ற போது(ஸூப்ஹானல்லாஹ் எனக் கூறி) தஸ்பீஹ் செய்பவர்களாகவும் இருந்தோம் என ஜாபிர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

44. திடுக்கத்தின் போது கூறப்படுவது?

லாயிலாஹ இல்லல்லாஹூ

பொருள் :வணங்கப்படுபவன் அல்லாஹ்வையின்றி (வேறு) இல்லை.

45. அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான நாவிற்கு மிக சுலபமான மறுமையில் தராசு தட்டில் மிக கனமான இரு வார்த்தைகள்?

சுபுஹானல்லாஹி வபிஹம்திஹி சுபுஹானல்லாஹில் அளீம்.

பொருள் : பரிசுத்தமானவன் அல்லாஹ் புகழுக்குரியவன், மிகத் தூய்மையானவன் மகத்துவமிக்கவனாவான்

Sunday 23 October 2011

Gaddafi


ஏர் ஜனாசா (JANASA AIR LINES)

அஸ்ஸலாமு அலைக்கும் ...

என் இனிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே !

நம்மை தூக்கிக்கொண்டு பறப்பதற்காக ஜனாசா ஏர் லைன்ஸ் தயாராக உள்ளது!

பயணிகளே

கவனமாக தயாராகுங்கள் !!!

ஏறும் இடம் (Departure ) : துணியா !

இறங்கும் இடம் (Arrival) : கபர்ஸ்தான் !!.

புறப்படும் நேரம் :நம்மை படைத்த
எல்லாம் வல்லாஹ் அல்லாஹ் மட்டுமேஅறிந்தவன்.

கவலைபடவேண்டாம் பயண நேரமும் தேதியும் மாற்றத்திற்கு உள்ளாகாது !.

விமானமும் கேன்சல் ஆகா சான்சே இல்லை!?.

Destination Air போர்ட் :

டெர்மினல் 01 சொர்க்கம் ! /

டெர்மினல் 02 நரகம்!?.

இது ஒரு ட்ரான்சிட் AIR LINE ?

இந்த அதிநவீன ஏர் லயன்சின் திட்டங்களும் விபரங்களும் உலகில் எங்கும் கிடைக்காது ஆனால்??

புனித திருக்குரான் மற்றும்
நபிகளார் முகமது சல்லல்லாஹுவசல்லாம்
அவர்களின் வாழ்வின் நடைமுறையில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

இந்த அதிநவீன எரோபிளேனின் பெயர்
பிரிட்டிஷ் அல்லது
கல்ப் அல்லது
எமிரேட்ஸ் அல்லது
ஏர் இந்திய கிடையாது.

ஆனால் இதன் பெயரோ ஏர் ஜனாசா !.

இந்த விமானத்தின் கேப்டன் மலக்குல் மவுத் !!!.

இதனில் உட்காரும் இருக்கை இல்லை,
வசதியாக அவரவர்களின் அமல்களுக்கு (செய்த நன்மைகளுக்கு ஏற்ப ) படுத்துக்கொண்டு மட்டும்தான் பயணிக்கலாம் !

இதில் ரவுண்டு ட்ரிப் கிடையாது ஒன் வே ட்ரிப் மட்டும்தான் !!!.?.

இதில் கண்டிப்பாக உங்கள் உடமைகளை எடுத்து கொண்டு பயணிக்க இயலாது !, ஆனால் நமது அமல்களை எத்துனை கிலோவாக இருந்தாலும் அனுமதி கிடைக்கும் !!.

அதற்காக ஏர்போர்ட் டாக்ஸ் கட்ட வேண்டிய பிரச்னை இல்லை மகிழ்ச்சிதானே ! ?.

இதிலே செல்வதற்கு கோட் சூட் தேவை இல்லை ஒரு ஆறு முழ வெள்ளை துணி போதும் ? காசு மிச்சம்தானே !!!.

இதில் நீங்கள் பயணிக்க விசாவிற்கோ மற்றும் ஏர் டிக்கெட் எடுபதற்கோ சிரமபடதேவை இல்லை!!!! ??? காசும் விரயம் இல்லை!?.

உங்களுடை விசாவும் பயண சீட்டும் நீங்கள் உங்கள்
தாயின் வயிற்றில் இருக்கும்போதே தயாராக விட்டது. !!!.
மேலும் மகிழ்ச்சிதானே?!

ஆம் உங்கள் சீட் உறுதிசெய்யப்பட்டு விட்டது(confirmed )!.

ரீ கன்பாம் செய்யும் பிரச்னை இருக்காது !!!.

ஆனால் உங்களுடைய சரியான பாஸ் போர்டை வைத்துகொள்ள மறந்தும் இருந்து விடாதீர்கள் ?

உங்களுக்கு பாஸ்போர்ட் செக்கிங் உண்டு !!!.

பாஸ் போர்ட் செக்கரின் பெயர் முன்கர் மற்றும் நகீர் !!!!!!! ???.

வேறு இந்தியன் or அமெரிக்கன் or பிரிட்டிஷ் or எந்தவிதவிதமான பாஸ்போர்ட்டும் செல்லுபடியாகாது ???.

ஆனால் ஒரே ஒரு பாஸ் போர்ட் தான் செல்லு படியாகும் !!!.
ஆம் அந்த பாஸ் போர்டின் பெயர் மவுத் !!!!!!.

அதிலே எல்லாருக்கும் ECR கட்டாயம் ஸ்டாம்ப் உண்டு.

எமிக்ரேசன் கிளியரன்சுக்கு மூன்று கேள்விகளை நமது பாஸ்போர்ட் எமிக்ரேசன் ஆபிசர் மதிற்பிக்குரிய
முன்கர் மற்றும் நகீர் அவர்கள் கேட்பார்கள்.
அதை சரியாக கூறிவிட்டால் உங்கள் ட்ரான்சிட்
லவுஞ்சில் சுகமாக ஓய்வு எடுக்கலாம் எந்த விதமான தொல்லையும் இருக்காது!!!.

ஆனால் சரியாக கூறாவிட்டால் உங்களுக்கு தொல்லை ஆரம்பம் ஆகிவிடும் உங்களின் ட்ரான்சிட் லவுன்ச் நரக லவுன்ச் ஆகிவிடும்???.

உஷார் !
உஷார் !
உஷார் !
உஷார் !
அந்த மூன்று கேள்விகள் !.

1.உன்னுடைய இறைவன் யார் ?
விடை அல்லாஹ் !!!!!!.

2.உன்னுடைய மார்க்கம் எது ?
விடை இஸ்லாம் !!!!!!!!.

3.உன்னுடைய நபி யார் ?
விடை முகமது சல்லல்லாஹுவசல்லாம்

மறந்தும் இறந்து விடாதீர்கள்
?பதிலை சொல்ல நல்ல அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்)
அவர்கள் காட்டித்தந்த வழியில் முஸ்லிமாக வாழ்ந்து மட்டுமே பதிலலிக்க முடியும்.
சுகமான பயணத்திற்கு தயாராக இருப்போம்.
இன்ஷா அல்லாஹ் !.

வஸ்ஸலாம்

நம்முடைய ஏர் ஜனாசா !. பயணம் நல்ல பயணமாக அமய துவா செய்யும்,

எங்கள் இறைவா ! உன்மீது ஈமான் கொண்டவர்களை
நல்லோருடன் வாழ வைப்பாயாக !
நல்லோருடன் சேர்பாயக"
"யா முகல்லி புள் குளூப் ஃசபித் கல்பி அலா தீனுக்க"

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்குமறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Saturday 22 October 2011

பாங்கின் அர்த்தம்


அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :
முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :
முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
ஹய்ய அலஸ் ஸலா(த்), ஹய்ய அலஸ் ஸலா(த்) :
தொழுகையின் பக்கம் வாருங்கள், தொழுகையின் பக்கம் வாருங்கள
ஹய்ய அலல் ஃபலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் :
வெற்றியின் பக்கம், வாருங்கள், வெற்றியின் பக்கம் வாருங்கள்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
லா இலாஹ இல்லல்லாஹ் :
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவனில்லை

Monday 10 October 2011

வெப்கேமிரா வைத்திருக்கின்றீர்களா? எச்சரிக்கையாக இருங்கள்!!!!!!!!!

வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?

எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.
தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள். யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை? எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை?
பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்?
அது எப்படி சாத்தியமாயிற்று?

புனேயில் உள்ள Asian School of Cyber Law வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுஆம் அவளது அறையில் உள்ள வெப்கேமிராதான் அவளை படம்பிடித்திருக்கின்றது.
செய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒரு ஓரத்தில் அப்பாவியாய் அமர்ந்திருந்திருக்கிறது அந்த வெப்கேமிரா. ஆம் நம்புங்கள்; அவள் அறையில் உடைமாற்றுவதையும் அவளின் அந்தரங்கங்களையும் படம்பிடித்தது அந்த வெப்கேமிராதான்.

மீடியாத்துறையில் பணிபுரிகின்ற அந்தப் பெண்ணின் பெயர் அனி ஜோலகர் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனது ப்ராஜக்ட்டுக்காக சில படங்களை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்திருக்கின்றாள். ஆனால் அவளுக்குத் தெரியாமலையே கணிப்பொறியில் ட்ரோஜன்என்கிற வைரஸ் / புரோகிராம் வந்து அமர்ந்து கொண்டது
அந்த ட்ரோஜன் என்கிற புரொகிராமின் மூலம் அவளது கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள வெப்கேமிராவை ரிமொட் முறையில் இயக்கி அவளது அந்தரங்களை படம்பிடித்து அவற்றை ஆபாச இணையதளத்திற்கு விற்றுக் கொண்டிருந்திருக்கின்றான் எவனோ ஒருவன். உலகத்தின் இன்னொரு மூலையில் தனது நிர்வாணப்படங்களும் அந்தரங்கங்களும் திரைப்படமாக்கப்படுகின்றதை அறிந்து அதிர்ச்சியானாள் அனி ஜோலகர்.

இணையத் தொடர்புடன் உள்ள அந்த கணிப்பொறியின் வெப்கேமிராவை பெரும்பாலும் அவள் ஆன் செய்தே வைத்திருக்கின்றாள். இணையத்தில் உலவிவிட்டு அணைக்காமல் அப்படியே இருந்துவிட்டதுதான்; அவள் செய்த தவறு. கணிப்பொறி இடப்பெயர்ச்சி இல்லாமல்தானே அமர்ந்திருக்கின்றது அதுவென்ன செய்திட முடியும் என்று நீங்கள் சாதாரணமாய் இருந்துவிடமுடியாது.
புரிந்து கொள்ளுங்கள் அது நம்மை நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றது வெப்கேமிரா மூலம்.
கொஞ்ச நேரம் கழித்து உபயோகிக்கத்தானே போகின்றோம் அதற்குள் எதற்கு இணையத்தொடர்பை துண்டிக்கவேண்டும் என்று அலட்சியப்படுத்தினால் நம் அந்தரங்கங்கள் உலகத்தின் பார்வைக்கு வந்துவிடும்.
‘தங்களது அறையினில் வெப்கேமிராவை வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாய் இருக்கவேண்டும். அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத் தொடர்பு அவசியம் இல்லையெனில் அதன் இணைப்பையும் வெப்கேமிராவின் இணைப்பையும் துண்டித்துவிடுங்கள். இந்த விழிப்புணர்வினை தங்களுக்கு தெரிந்தவரையிலும் மக்களுக்கு தெரியப்படுத்தினால்தான் அவர்கள் விழிப்புணர்வு அடைவார்கள்’-
ரோகஸ் நாக்பால், ப்ரசிடண்ட் ஆப் ஆசியன் ஸ்கூல் ஆப் சைபர் லா
‘தேவையில்லாமல் வெப்கேமிராவை ஆன் செய்து வைத்திருப்பது அல்லது அதன் தேவைகள் இல்லாவிட்டாலும் அதனை கணிப்பொறியுடன் இணைத்து வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் நிறையபேர் சமூக சூழலுக்குப் பயந்து அதனை புகார் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது.’-
விஜய் முகி – கணிணித்துறை வல்லுனர்
இணையத்தில் இருந்து படங்களோ அல்லது வேறு சில பைல்களோ டவுண்லோடு செய்யும்பொழுது ட்ரேஜன் ஹார்ஸ் (Trojan Horse ) என்கிற வைரஸ் அல்லது வேறு ஏதேனும் வைரஸ் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்குத் தேவையான ஆன்டி வைரஸ் புரொகிராம்களை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.
அது மட்டுமல்ல தேவையில்லாத அல்லது கவர்ச்சியான விளம்பரங்களுடன் வருகின்ற மின்னஞ்சல்களையும் தவிர்த்து விடுங்கள். ஆகவே நண்பர்களே கணிப்பொறி உபயோகிக்காத நேரங்களில் அதனை அணைத்துவிடுங்கள். தங்களது அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத்தொடர்பும் வெப்கேமிரா தொடர்பும் துண்டிக்கப்பட்டிருகின்றதா என்று தயவுசெய்து ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
இணையத்தில் உலவும்பொழுது மட்டும் இணையத்தொடர்பினை இணைத்துவிட்டு மற்றநேரங்களில் அந்த தொடர்பினை கணிப்பொறியிலிருந்து எடுத்துவிடுங்கள். அதுபோலவே வெப்கேமிராவும். யாருடனும் அவசியம் என்றால் மட்டும் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவற்றை கணிப்பொறியுடன் இணைக்காமலேயே வைத்திருங்கள். இல்லையென்றால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். அந்த நபர் உங்களுக்கு பக்கத்து அறையில் அல்லது பக்கத்து கண்டத்தில் கூட இருக்கலாம்.

My Blog List