Search This Blog

Thursday, 6 September 2012

சூரியக் குளியல்

சூரிய மருத்துவம் சூரியக் குளியலால் நிகழ்த்தப்பட வேண்டும். விடியற்காலை செவ்விள ஞாயிறே இதற்கு ஏற்றது. காலை 9 மணிக்குமேல் இது ஏற்றத்தக்கதல்ல. உள்ளுடைகளுடன் மட்டும் உடலின் முன் பகுதியிலும், பின் பகுதியிலும் வெய்யில் படும்படு 5 நிமிடத்திலிருந்து 1 மணி நேரம் வரை இருக்கவும். விடியற்காலை சூரியனின் சாய்ந்த ஒளிக்கதிரில் புறஊதா கதிர்கள் உண்டு, இவை உடலுக்கு சக்தி தருபவை. விட்டமின் டி இதில் நிறைய உண்டு. இந்த விட்டமின் பற்றாக்குறையால் குழந்தைகளுக்கு வரும் ரிக்கெட்ஸ், எலும்பு சம்பந்தமான நோய்கள் சூரியக் குளியலால் குணமாகும். சூரிய ஒளியின் இரசாயனக் கதிர்கள் இரத்தச் சிவப்பு அணுக்களின் உற்பத்தியைப் பெருக்குகின்றன. சோகை நோய்க்கு சூரியக் குளியல் மாமருந்து. முடி கொட்டுபவர்கள் அதனை நிறுத்த சூரியக் குளியல் செய்யுங்கள். முடி செழித்து வளர கதிரொளி உதவும். கதிரொளி தோலின் வேலையைச் செம்மையாக்குகிறது. தோல் நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய்கிருமிகளை அழிக்கிறது. தோல் நோய்த் தொல்லைகள் மறைய சூரிய குளியல் மிகவும் உதவும். எல்லாவிதமான கண் நோய் கோளாறுகளுக்கும் கண்ணை மூடிக்கொண்டு சூரியனைப் பார்க்க வேண்டும். விழியை பக்க வாட்டிலும், மேலும், கீழும் நகர்த்த வேண்டும். சூரியக்குளியலின்போது மயக்கம் வருவோர் நரம்பு வியாதி உள்ளோர், இரத்தச் சிதைவுள்ளவர்கள் இம்மருத்துவம் செய்யக்கூடாது.

பேரிச்சம் பழம்

சிறியவர் முதல் பெரியவர் வரை அன்றாடம் உணவு உண்டபின் ஒரு வேளையாவது 2 அல்லது 3 பேரிச்சம்பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். உடலின் மேலுள்ள தோல் வழவழப்பாகும். கண் சம்பந்தமான கோளாறுகள் வராது. இருந்தாலும் குணமாகும். எந்த வகையான தொற்று நோயும் அணுகாது. சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானமாகும். தாது விருத்தியும், போக சக்தி குறையுடையவர்கள் பேரிச்சம்பழத்தைத் தேனில் ஊறவைத்து நாள்தோறும் சில துண்டுகளைச் சாப்பிட்டு பால் அருந்தினால் நல்ல குணம் தெரியும். இருமல், கபம் போன்ற கோளாறுகளுக்குப் பேரிச்சம்பழத்தைப் பாலில் வேகவைத்து உண்டால் நல்ல பலனுண்டு.

கொய்யா

விலை மலிவான பழங்களிலும் நிறைய சத்தும், மருத்துவக் குணங்களும் உண்டு. விதை நீக்கப்பட்ட கொய்யா இதயத்துக்கு வலுவூட்டும் சக்தியுடையது. மலச்சிக்கலை நீக்கும் மகத்தான பழம் கொய்யா. விக்கல் வந்தால் கொய்யாபழம் உண்ணுங்கள் விக்கல் உடனே நிற்கும். இதில் வைட்டமின் 'சி' மிகுதியாக உள்ளது. இதைத்தவிர 'ஏ', 'பி', வைட்டமின்களும் உள்ளன. ஒரு அவுன்சு பழத்தில் 1 கிராம் புரதம், 1 கிராம் கொழுப்புச் சத்து, 3 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்து, 4.1 கிராம் கார்போஹைட்ரேட், 0.3 கிராம் இரும்புச் சத்தும் உள்ளது. கொய்ய பிஞ்சிற்கு பேதியை நிறுத்தும் குணம் உண்டு. கொய்யா இலையைக் கஷாயம் வைத்துப் பருகினால் வாந்தியும், பேதியும் நிற்கும். இந்த இலையை வாயிலிட்டு நன்கு மென்று வாய் கொப்பளித்தால் பல்வலி குறையும். கடும் பல்வலிக்கு இப்படி அடிக்கடி செய்தால் பலன் கிடைக்கும். கொய்யா இலை கொழுந்தை உண்டால் நன்றா பசி எடுக்கும். குடல் வலுப்பெறும். அஜீரணத் தொல்லைகளுக்கு இலைக் கொழுந்தைப் பறித்து கழுவிச் சுத்தம் செய்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குணம் தெரியும். கொய்யாப்பழத்தை சாப்பிடும்போது அதனை தோல் நீக்கிச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் தோன்றும். மேலும் தோலோடு சாப்பிட்டால்தான் அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெறமுடியும்.

முள்ளங்கி

சிவப்பு, வெள்ளை என இரண்டு வகையான முள்ளங்கி இருக்குது. இதில் வெள்ளை முள்ளங்கி மருந்தாகவும், உணவாகவும் சாப்பிட ஏற்றது. சிவப்பு முள்ளங்கி கொஞ்சம் சுவையாக இருக்கும், அவ்வளவு தான்!
முள்ளங்கியைப் பொறுத்தவரை, கிழங்கு, இலை, விதை மூன்றுமே மருத்துவக் குணமுள்ளவை. சமைக்கும்போதும், சாப்பிடும்போதும் முள்ளங்கியில இருந்து வெளியாகும் வாசனை சிலருக்குப் பிடிக்காது.

சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும். கந்தகமும், பொஸ்பரசும் இதில் அதிகமாக இருக்குறது தான் அதுக்கு காரணம். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி.

பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும். இட்லி வேகவைப்பது மாதிரி முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்.

குழந்தைகள் குடிக்க மறுத்தால், கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுக்கலாம். இப்படிச் செய்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் இருக்காது.

சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.

முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும். இருந்தாலும், இதை அடிக்கடி சாப்பிட்டா வயிற்றில் பொருமல், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். எனவே, அளவாக சாப்பிடுவது நல்லது.

இளநீர்

கோடையில் உடல் சூட்டைத் தனித்துக்கொள்வதற்கு உன்னத பானம் இளநீர் ஆகும். இளநீர் மனித குலத்திற்கு இயற்கை அளித்த மாபெரும் பரிசு. சுத்தமான, சவையான, சத்தான பானம் இது. இளநீரின் கலோரி அளவு 17.4/100 ஆகும்.

குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக்கள் இளநீரில் உள்ளன. இளநீரிலுள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் தேங்காய் முதிர்ச்சியடையும்போது சுக்ரோஸாக மாறிவிடுகிறது.

இளநீரில் பொட்டாஸியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேல் காணப்படுவது பொட்டாஸியம். இளநீரில் புரதச்சத்து குறைவாகவே உள்ளது. இருப்பினும் இப்புரதச் சத்தின் தரப் பாலில் உள்ள புரதச்சத்தை விட உயர்வானது.

இளநீர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்தாகும். உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரி செய்ய இளநீர் குடிப்பது நல்லது. வளர்ச்சியை அதிகரிக்கும்.

ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன. உடல் சூட்டை இளநீர் தணிக்கிறது. வேர்க்குரு, வேனற்கட்டி, அம்மை, தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புக்களைக் குணப்படுத்த இளநீரை உடம்பின் மீது பூசிக்கொள்ளலாம்.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானமாகும். ஊட்டச்சத்துக் குறைபாடுகளை சரி செய்கிறது. முதியர்களுக்கு இளநீர் சிறந்த டானிக் ஆகும்.

சிறுநீர்ப் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது. சிறுநீர்க் கற்களைக் கரைக்க உதவுகிறது. சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது

இளநீர் மிக சுத்தமானது. சிவப்பு இரத்த அணுக்களை அழிக்காது. இதனால்தான் இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. இளநீர் மருந்துகளை உடனடியாக உட்கிரகிக்க உதவுகிறது. இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருளை அகற்றவும் இளநீர் உதவுகிறது

My Blog List