Search This Blog

Thursday 6 September 2012

கொய்யா

விலை மலிவான பழங்களிலும் நிறைய சத்தும், மருத்துவக் குணங்களும் உண்டு. விதை நீக்கப்பட்ட கொய்யா இதயத்துக்கு வலுவூட்டும் சக்தியுடையது. மலச்சிக்கலை நீக்கும் மகத்தான பழம் கொய்யா. விக்கல் வந்தால் கொய்யாபழம் உண்ணுங்கள் விக்கல் உடனே நிற்கும். இதில் வைட்டமின் 'சி' மிகுதியாக உள்ளது. இதைத்தவிர 'ஏ', 'பி', வைட்டமின்களும் உள்ளன. ஒரு அவுன்சு பழத்தில் 1 கிராம் புரதம், 1 கிராம் கொழுப்புச் சத்து, 3 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்து, 4.1 கிராம் கார்போஹைட்ரேட், 0.3 கிராம் இரும்புச் சத்தும் உள்ளது. கொய்ய பிஞ்சிற்கு பேதியை நிறுத்தும் குணம் உண்டு. கொய்யா இலையைக் கஷாயம் வைத்துப் பருகினால் வாந்தியும், பேதியும் நிற்கும். இந்த இலையை வாயிலிட்டு நன்கு மென்று வாய் கொப்பளித்தால் பல்வலி குறையும். கடும் பல்வலிக்கு இப்படி அடிக்கடி செய்தால் பலன் கிடைக்கும். கொய்யா இலை கொழுந்தை உண்டால் நன்றா பசி எடுக்கும். குடல் வலுப்பெறும். அஜீரணத் தொல்லைகளுக்கு இலைக் கொழுந்தைப் பறித்து கழுவிச் சுத்தம் செய்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குணம் தெரியும். கொய்யாப்பழத்தை சாப்பிடும்போது அதனை தோல் நீக்கிச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் தோன்றும். மேலும் தோலோடு சாப்பிட்டால்தான் அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெறமுடியும்.

No comments:

Post a Comment

My Blog List