Search This Blog

Wednesday 31 August 2011

வையுங்கள் முற்றுப் புள்ளி!

ஓரத்தில் நின்றுகொண்டு
ஓயாமல் தர்க்கம் செய்யும்
வீரத்திற்கு வையுங்கள் முற்றுப் புள்ளி!
கருத்து வேறுபாடென்னும்
கறையான்கள் வந்துங்கள்
புரிந்துணர்வை சீரழிக்கும்! மிகவும்
புத்தியுடன் நடந்துகொள்ளுங்கள்!

Tuesday 30 August 2011

இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள்

இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள்
உலக இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்.
இன்ஷா அல்லாஹ் உலகம் அமைதி பெறட்டும்

Monday 29 August 2011

Thursday 25 August 2011

ஒரு இந்து சகோதரன் இஸ்லாத்தை பற்றி..



- - - - - - - - - -

ஒரு நாள் வரும்
அன்று
நீ குளிக்க மாட்டாய்....
உன்னை குளிப்பாட்டுவார்கள்...
நீ உடை அணிய மாட்டாய் !
உனக்கு அணுவிக்கப்படும்.
நீ பள்ளிவாசல் போ க மாட்டாய் !
உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள்.
நீ தொழ மாட்டாய் !
உன்னை வைத்து தொழப்படும்.
நீ அல்லா்ஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் !
உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள்.
அன்று உன்னை தனியாக விட்டு விட்டு
உன் உறவினர்கள்
அனைவரும் சென்று விடுவார்கள்.
அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள். .
அது தான்
மௌவுத் (மரணம் ).....

Wednesday 24 August 2011

15 Benefits of Ayatul Kursi

*1. Our Holy prophet (SAW) has said: whoever recites the first 4 ayats
of Surae Baqarah, then Ayatul Kursi and then the last 3 ayats of Surae Baqarah will not be inflicted with any kind of difficulty in his wealth or himself, Shaitaan will not come near him and he will not forget the Qur'an.

*2. Imam Ali (AS) was told by our Holy Prophet: Qur'an is a great word, and Surae Baqarah is the leader of the Qur'an and Ayatul Kursi is the leader of Surae Baqarah. In Ayatul Kursi there are 50 words and for each word there are 50 blessings and good in it.

*3. One who recites Ayatul Kursi every morning will be in the protection, safety of Allah until the night.

*4. If one ties this to ones wealth or chidren, they will be safe from Shaitaan.

*5. Our Holy Prophet (SAWW) has said: These things increase ones memory; sweets, meat of an animal near the neck, Adas(Lentils), cold bread
and recitation of Ayatul Kursi.

*6. For those of our dear ones who have passed away, recitation of Ayatul Kursi and giving it as Hadiya to them, gives them light (noor) in the
grave.

*7. Frequent recitation makes ones own death easy.

*8. When leaving home, if one recites it once, the Almighty has one group of Angels to come and protect you. If recited twice, 2 groups of
Angels are assigned to do this. If recited 3 times Allah tells the Angels not to worry as the Almighty himself takes care of him.

*9. The Holy Prophet (saw) has said: If one recites Ayatul Kursi before going to sleep, Allah will send an Angel to come and look after you and protect you till the morning. His home, family and also neighbours will remain in safety until morning.

*10. When one is alone in the home, recitation of Ayatul Kursi and asking Allah to help will make you remain calm and you will not fear.

*11. The Holy Prophet has said: When leaving home,if one recites Ayatul Kursi the Allah will send 70,000 Angels to do Istighfaar for him until he returns home, and upon his return Poverty will be removed from him.

*12. If one recites this after doing Wudhoo, the 5th Imam (AS) has said: Allah will give him a reward of 40 years of Ibadaat, his position will be raised in the Heavens 40 times (levels) and will marry him to 40 Horains.

*13. One who recites it after every prayer, thier salaat will be accepted, they will remain in the safety of the Almighty and He will protect
them.

*14. Allah (SWT) told P.Musa (AS): If one recites it after every salaat, the Almighty will make his heart a thankful one(Shakireen), will give him a
reward of the prophets, and his deeds will be like those of the truthful(Siddiqeen) and nothing except death will stop will stop him from
going into heaven.

*15. To increase light or vision (noor) in the eyes, recite Surae Alhamd once, then Ayatul Kursi and then once the following dua:- "U-eedhu nora
basaree binuril lahi alladhi la yutfaa", "I seek refuge for the light of my eyes by the light of Allah(SWT), which does not become extinguished".

f b friends1.wmv

sorgame enralum.wmv

2


ரமழான்

பதினொரு திங்கள் பகலில் பருகி பழகி
ஒரேயொரு திங்கள் அனைத்தையும் விலகி

முன்பு எண்ணம்போல் உண்டோம் !
பசித்தது புசித்தோம் !
இனி பசித்தாலும் புசியோம் !
மனதை கட்டிப்போடும் சுயகட்டுப்பாடு.

உண்ணலும் பருகலும் நிறுத்திய நோன்பு. மறந்து
உண்டினும் பருகினும் நிறைவேறும் நோன்பு.

கிறக்கத்தைக் களையும்
உறக்கத்தையும்
இரக்கமுள்ளவன்
வணக்கமாக்கினான் !
நாம் விழிக்க வேண்டும் என்பதற்கே !
விழி கொண்டு
வழி கண்டால்
"வலீ" யாகலாம் !

உறக்கம் ஏன் வணக்கம் ?
வீண் கதை, வெட்டிப்பேச்சு, பொய்
புறங்களை புறந்தள்ளிய
சிறு இறப்பு அது மிகச்சிறப்பு !

உள்புறம் காலியானால் நோன்பு'.
அது எல்லா
'புறங்'களை விட்டும் காலியானால் மாண்பு

இறை மறுப்பாரும் ரமழானில் இரை நிரப்பார்.
ஆம் இரை நிரப்ப மறுப்பார்.

வெள்ளித்திரை, விட்டால் சின்னத்திரை,
முடித்தால்தான் நித்திரை.

தெரிந்தது ரமழான் பிறை !
திறந்தது ஃபுர்கான் மறை !
அதுவா முறை ?
ஆண்டுக்கு ஒருமுறை
மட்டுமா திருமறை ?
நீக்கவே இக்குறை
நித்தமும் ஒருமுறை
எடுப்போம் இறைமறை.

ரமழானைத் தொடர்ந்தும்..
மறை நோக்கும்
நம்மை, இறை நோக்கும்.

விளக்கமின்றி விளக்கு ஒன்றே விடியல் என்று
வீழ்ந்து போகும் விட்டில்களல்ல நாம் !

தொழுகை - நாம் இறையுடன் பேசும் சாதனம்.
குர்ஆன் - இறைவனே நம்முடன் பேசும் நூதனம்.

விழி திறக்க விண்மீன்கள்
விழித்திருக்கும் வேளைகளில்...

கரை எட்டும் கண்மீன்கள்
கரையட்டும் கண்ணீர் குளங்களில்...

நோன்புக்கு அலங்காரம் வீண் வாய்க்குப் பூட்டு
அதை கண்ணுக்கும் காதுக்கும் போட்டு
அனுபவித்தால் வெளி நோன்பு
அனுபவத்தில் ஒளி நோன்பு.

ஆறுடன் ஐந்து (ஆறைந்து முப்பது-ரமழான்)
கடலில் முத்துக்கள்.
அடுத்துள்ள ஆறையும் தாண்டின்,
ஓராண்டு நோன்பு.
இரையில்லா பட்டினி
இறையில்லம் நிரம்பும் ! ரமழானாம் !

இரையுள்ள வயிறு
இறையில்லம் பட்டினி ஆம்
அது ஏனைய மாதங்கள்.

ஐந்து வயது, கடமையில்லா பருவத்திலும்
உணவில்லா இறையின்பம் துன்பத்தில் இன்பம்
எங்ஙனம் உணர்ந்தது?

பெருநாள், நல்ல திருநாள், தொடரும் மறுநாள்
உணவுண்ட இரை இன்பத்தில்
திளைத்து மூழ்கிருக்க
உணவூட்டுவாரின்றி
முன்பு போல பசி
பட்டினியால் வாடும்
இறையில்லங்கள்.
இந்நிலை முன்னர். இனி
அந்நிலை தொடராது.
ரமழானில் தொழுதோர்
காணாமல் போனோர் பட்டியலில் வாரா.

நாங்கள் இறைவனுக்காகவே
ரமழானில் தொழுது வணங்கி
நோன்பு நோற்று சுற்றிடும் வெற்றிடம் கொண்ட
வயிற்றிடம் கற்றிடும் பாடம் எம்மிடம்.
ரமழானுக்காகவே களம் இறங்கியவர்
இதோ ரமழான் முடிந்தது.
களத்திலிருந்து கழன்று கொள்க!
யார் என்றுமுள்ள இறைவனுக்காக களம் இறங்கினாரோ
எத்தனை ரமழான் சென்றாலும்
அந்த இறைவன் என்றும் இருக்கிறான்.
அவர் தைரியமாக முன்னோக்கிச் செல்லட்டும்!
மறவோம் இந்த பாலர் பாடம்.

இனவாத சக்திகளுக்கு முன்னால்..

உலகம் ஒழுக்கரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் யுத்தம் காரணமாகவும் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில் சில மதகுருமார்களும், அரசியல்வாதிகளும், இனவாதிகளும் தங்களது சுயநலத்திற்காக குரோதம். பொறாமை காரணமாக சில தீய சக்திகளுடன் இணைந்து துண்டுப் பிரசுரங்களினூடாகவும், இணையம் போன்ற தொடர்பு சாதனங்களினூடாகவும் குறிப்பாக முஸ்லிம்களுக்தெதிராக இனவெறிளையும் துவேஷத்தையும் வளர்க்கின்ற வேலையை அண்மைக்காலமாக மேற்கொண்டுள்ளார்கள்.

இக்கட்டான இச்சமயத்தில் இனவாதத்திற்குத் துணைபோகத் கூடிய நடவடிக்கைகளை முஸ்லிம்கள் தவிர்த்துக்கொள்ளுவது மட்டுமல்லாது, இத்தகைய இனவெறியர்களின் விஷக் கருத்துக்களை அகற்றுவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொண்டு இனங்களுக்கிடையேயான விரிசல் நிலையையும் குரோத மனப்பான்மையையும் இல்லாதொழித்து சமூகங்களுக்கிடையே அன்பையும் இனக்கத்தையும் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த அனைத்து வழிகளிலும் உழைப்பது தவிர்க்க முடியாத கடமையாகிறது. அவற்றை சற்று சீர்த்துக்கிப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முஸ்லிம்கள் ஒரு கொள்கையை ஏற்ற சமூகத்தினர். எப்போதும் நடுநிலையாக நடந்தகொள்ள வேண்டியது அவசியமாகும். நமது சிந்தனை, செயற்பாடுகளில் நடுநிலை பேண வேண்டும் என்பதை பின்வரும் அல்குர்ஆன் வசனம் கூறுகிறது.

....உங்களை நடுநிலை சமூதாயமாக்கினோம். (அல்குர்ஆன் 2:143)

இனவாத கருத்துக்கள் திட்டமிட்டு பரப்பப்படும் இச்சூழலில் நாமும் சிந்தனைக் குழப்பத்தில் சிக்கி நிதானமிழத்தல் அறிவுடைமையாகாது. எப்போதும் தூரநோக்குடனும், சிந்தனைத் தெளிவுடனும் பிரச்சினைகளை அணுகுதல் அவசியம். இஸ்லாத்தின் வழிகாட்டலில் நிதானமாக ஆக்கபூர்வமாக சிந்திக்க வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமையென்ற வகையில் நாம் தவறு செய்கின்ற அல்லது நமது சிந்தனைக்கு வராத சில விஷயங்களை அலசலாம்.

"ஒருவர் தன் சமுதாயத்தை நேசிப்பது இனவாதமாகுமா?" என்று நபியவர்களிடம் தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் "இல்லை, தனது சமுதாயம் புரியும் கொடுமைகளுக்குத் துணைபோவதுதான் இனவாதம் ஆகும்" என்றார்கள். (நூல்: மிஸ்காத்).

ஆயினும் இந்த நபிமொழிக் கருத்துக்கு மாற்றமாக, தனது இனத்தின் மீதான பற்று இனவெறியாக மாறும்போது கண்டிப்பாக அது தடுக்கப்பட வேண்டும். இனவெறி என்பது தானும் தனது சமூகமும் மட்டும் வாழ, ஏனைய சமூகங்களை இல்லாதொழிக்கவும், அவற்றுக்குக் குழிபறிக்கவும் முற்படும் நிலைப்பாடே!.

இனப்பிரச்சினை காரணமாக எண்ணற்ற கலவரங்கள் நடந்துமுடிந்துவிட்டன. உதாரணமாக நமக்கு மறக்கமுடியாத பம்பாய், குஜராத், போன்றவை. இனி நடப்பதற்கு நாட்களும் குறிக்கப்பட்டிருக்கலாம். இத்தருணத்தில் நாமும் நம் பங்குக்கு சிக்கலை உண்டாக்காமல் எச்சரிக்கையாகவும், சிந்தனைத் தெளிவோடும், தூரநோக்கோடும் முஸ்லிம் என்ற வகையில் நல்ல முன்மாதிரியாகவும் செயலாற்ற கடமைப்பட்டுள்ளோம். இதற்காக சில விஷயங்களைக் கருத்திற்கொள்ள வேண்டும்.

1. ஒவ்வொருவரும் வேற்று மதத்தவர் உட்பட, அனைவரோடும் நீதமாக நடக்க வேண்டும். எத்தரப்பில் சத்தியம், உண்மை நீதி இருக்கிறதோ அத்தரப்பிற்கு குரல் கொடுகப்பவர்களாக முஸ்லிம்கள் இருக்க வேண்டும். மாற்றமாக, தான் சார்ந்துள்ள சமூகம் அசத்தியத்திலும், அநீதியிலும், அத்துமீறலிலும் இருக்கும் பட்சத்திலும் என் சமூகத்தின் பக்கம்தான் இருப்பேன் என்ற எண்ணம் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். இதனைப் பின்வரும் அல்குர்ஆன வசனம் எடுத்துக் காட்டுகிறது.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகிவிடுங்கள்!. ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை, நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்!. அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 5:8)

மேலும் அநீதி இழைப்பவர் முஸ்லிமல்லாதவராக இருப்பினும், அவரது பிரார்த்தனைக்கும், அல்லாஹ்வுக்குமிடையே எந்தவித திரையும் கிடையாது. ஆதலால் முஸ்லிம் என்பதனால அநீதி இழைக்கும் போது, அது அனுமதிக்கப்பட்டது எனும் நினைப்பில் இருத்தலாகாது. கண்டிப்பாக அநீதி இழைக்கப்பட்டவனின் பக்கம் அல்லாஹ் இருப்பதோடு. அநீதி இழைத்தவர்களுக்கு எதிராகவும் இருப்பான் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

2. நாம் முஸ்லிம்கள் என்ற வகையில் எங்களது சொல்லாலும் நடத்தைகளாலும் இஸ்லாத்திற்கு நற்சான்று பகர வேண்டும். நமது வியாபாரம், கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் ஏனைய அனைத்து சமூக விவகாரங்களிலும் சிறந்த முன்மாதிரியாக வாழ கடமைப்பட்டுள்ளோம்.

3. நன்மையான விடயங்களுக்கு ஒத்துழைப்பதுடன், தீமையான, அநீதியான விடயங்களுக்கு எதிராகவும் செயலாற்ற வேண்டும். மாற்று மதத்தவர் நம்மீது வரம்புமீறி முறைகேடாக நடந்தாலும் நாம் அவர்களோடு முறையாக நடந்துகொள்ள வேண்டுமென்பதே இஸ்லாத்தின் நிலைபாடு ஆகும். ஏனெனில், தீமையை தீமையால் இல்லாதொழிக்க முடியாது. தீமையை நன்மையாலும், நன்மையான வழிமுறைகளாலுமே திருத்தவும், இல்லாதொழிக்கவும் முடியும் என்பதையே இஸ்லாம் போதிக்கிறது. இதனை அல்குர்ஆன் பின்வருமாறு தெளிவுபடுத்துகிறது:

புனித பள்ளியை விட்டும் உங்களைத் தடுத்த சமுதாயத்தார் மீதுள்ள பகைமை, வரம்பு மீறுவதற்கு உங்களைத் தூண்ட வேண்டாம். நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!. அல்லாஹ்வை அஞ்சுங்கள்!. அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் 5:2)

ஒருவர் முஸ்லிமாக இருப்பினும்கூட, நன்மையான விடயங்களில் மாத்திரமே உதவ வேண்டும். தீமைகளுக்குத் துணைபோகக்கூடாது. தனது இனத்திற்கும், குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் அநீதியிலும், அத்துமீறலிலும் தீமையான விஷயங்களிலும் துணை போவதே இனவாதமாகும் என்பதை ஏற்கனவே ஹதீஸ் ஒன்றின் மூலம் பார்த்தோம்.

4. மாற்று மதத்தவராயினும், அவர்களது வழிபாட்டுத்தலங்களையும், அவர்களையும் மதிக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் போதனை. இதற்கு நபி முஹம்மது(ஸல்) அவர்களது வாழ்விலே நடந்த ஒரு சம்பவம் சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளது.

ஒரு முறை யூத ஜனாஸா (மரணித்த உடல்) ஒன்று பாதைவழியே கொண்டு செல்லப்பட்டபோது நபியவர்கள் எழுந்து நின்றார்கள். இது குறித்து ஸஹாபிகள் வியப்பாகக் கேட்கவே, "இதுவும் ஒரு மனித ஆத்மா அல்லவா?" எனக் கூறினார்கள்.

அதேபோல, கலீபா உமர்(ரலி) அவர்கள் பைத்துல் முகத்தஸை (ஃபலஸ்தீனில் உள்ள புனித பள்ளி) மீட்டபோது அதன் சாவியை ஒப்படைப்பதற்கென பாதிரிமாரின் அழைப்பிற்கிணங்க செல்லும் வழியில் தொழுகைக்கு நேரமானது. எதிர்ப்பட்ட கிறிஸ்துவ தேவாலயத்தில் தொழுமாறு கலீபாவிடம் வேண்டப்பட்ட போது அதனை கலீபா மறுத்துவிட்டார்கள். மற்றுமொரு முறை உமர்(ரலி) அவர்கள், வீடு வீடாக யாசகம் கேட்டுக்கொண்டிருந்த ஒரு யூத கிழவரைக் கண்டு அவருக்க இறக்கும்வரை பைத்துல்மாலிருந்து (பொதுக் கருவூலம்) உதவி நிதி வழங்கிட ஏற்பாடு செய்தார்கள்.

5. நாட்டுப் பற்றுள்ளவர்களாகவும், அதன் அபிவிருத்திக்கும், முன்னேற்றத்திற்கும் உதவுபவர்களாக வாழ்வது காலத்தின் தேவையாகும். இது இஸ்லாத்தின் அடிப்படையில், இஸ்லாத்திற்கு சான்று பகர்வதாக அமைய வேண்டும். மாறாக பயனற்றவர்களாக ஏனையோருக்கு தொல்லை தருபவர்களாக வாழ்வதை இஸ்லாம் ஒருபோதும் விரும்புவதில்லை.

மேற்கூறப்பட்ட மிக முக்கியமான விஷயங்களோடு கால, சூழ்நிலை, சமூக மாற்றங்களை கவனத்திற்கொண்டு அவதானமாக நடந்து கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். அத்துடன் நம்மிடத்தில் காணப்படுகின்ற சில விஷயங்களைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

1. தீமையான சமூக விரோதச் செயல்களுக்கு முஸ்லிம்கள் துணைபோகாதிருக்க வேண்டும். போதைவஸ்து வியாபாரம், வட்டி, மதுபான கடைகள் இவைகளை முஸ்லிம்களே நடத்துவது கவலைக்குறியது.

2. ஆடம்பர, வீண்விரயங்களை திருமணம் போன்ற வைபவங்களில் முற்றாக தவிர்த்தல், வீடு வாகனங்கள் போன்றவற்றை தேவைக்கேற்ற அளவு மட்டும் அமைத்துக் கொள்ளல்.

3. வறுமை, பிணி போன்ற கஷ்டங்களினால் அல்லலுறுவோர் எந்த மதத்தவராயினும் அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் உதவுவதை இஸ்லாம் மிகவும் வரவேற்கிறது.

4. தவறான விஷயங்களுக்கு பிற மத்தவர்களைக் காட்டி, அவற்றைத் திருத்த முனைவதை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.

5. பிற சமூகத்தவரது மத உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும். அவர்களது மத உணர்வுகளைப் புண்படுத்தும் செயல்களை முற்றாகத் தவிர்க்க வேண்டும். மார்க்க விஷயமாயின் சமூகச் சூழலைக் கருத்திற் கொண்டு சமயோசிதமாகச் செயற்பட வேண்டும்.

6. இனப்பற்றை வெளிப்படுத்துதற்காக பட்டாசு கொளுத்துதல், பந்தயம் கட்டுதல் போன்றவற்றை முற்றாகத் தவிர்ந்து கொள்வது இன்றியமையாததாகும். (உதாரணம் கிரிகெட்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் பட்டாசு வெடிப்பது).

அனைத்து விஷயங்களிலும் நடுநிலையான சிந்தனையும், செயற்பாடும் மிகமிக அவசியமானது. நடுநிலையாக அமைகின்ற போது ஒரு தீமையை அதன் வரையறைக்குள் வைத்து நோக்க முடிகின்றது. ஒரு சமூகத்தில் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு செய்யும் செயலை, முழு சமூகத்தின்மீதும் சாட்டி விடுகின்ற நிலையை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. ஏனெனில் நிரபராதிகளும் குற்றவாளிகளாக்கப்படும் அநியாயத்தைச் செய்துவிடும் நிலைமை ஏற்படுகிறது.

ஆகையால் இனவாதிகளுக்குள் சிலரே இந்த சமூகத்திற்கெதிராகச் செயற்படுகின்றனர். அவர்களை இனங்கண்டு தடுத்து நிறுத்த முயலவேண்டும். இதனை எதிர்க்கின்ற சமூகத்தின் மேல் நடுநிலையான மதகுருமார், அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை, எழுத்துமூலம் விவாதங்கள், கலந்துரையாடல்கள், சமூக நல்லிணக்க மாநாடுகள் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே ஒளிமயமான ஓர் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள முடியும்.

சிரிப்பு

"சிரிப்பு" என்பது சிநேகத்திற்கான முதல் தூது. இறுக்கமான சூழ்நிலையை இணக்கமாக்க உதவுவது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பகிரங்க அடையாளமே சிரிப்பு. சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் தான். ஆரோக்கியத்திற்கான பல்வேறு சுவைகளில் "நகைச்சுவை"யும் ஒன்று. "நிச்சயமாக அவனே (மனிதனை) சிரிக்க வைக்கிறான்". (அல்-குர்ஆன் 53:43).

நோய் நிவாரணி
சிரித்து மகிழ்வோடு இருப்பதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது என்பது ஜப்பான் பல்கலைக்கழக சமீபத்திய ஆய்வு. மேலும் இது இரத்த அழுத்தத்தை குறைத்து நரம்பு மண்டலத்திற்கு புத்துயிர் அளித்து தசை பிடிப்புகளை தளர்த்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் இருதயத்தையும் பலப்படுத்துகிறது என்பது நிபுணர்களின் கூற்று.

சிரிப்பும் அதற்கான வாய்ப்பும்
ஒரு மனிதன் தனியாக இருப்பதை விட பலருடன் கலந்து இருக்கும் போது வாய் விட்டு சிரிப்பதற்கு முப்பது மடங்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு குழந்தை ஒரு நாளில் சராசரியாக 300 முறை சிரிக்கிறதாம். (இனி மேல் வாழ்வில் சிரிக்கவே முடியாது என்பதனாலோ என்னவோ?) வளர்ந்த மனிதனும் கூட ஒரு நாளில் சராசரியாக 17 முறை சிரிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நகைப்பென்னும் உடற்பயிற்சி
100 முறை சிரித்தால் அது 15 நிமிடங்கள் வேகமாக சைக்கிள் ஓட்டுவதற்கு சமம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். (நன்றி: தினமணிக்கதிர் 20.7.2003).

புண்படுத்துவதும் பண்படுத்துவதும்
பிறரைப் புண்படுத்திச் சிரித்து மகிழும் போக்கை (Caustic Humour) இஸ்லாம் முழுமையாக தடை செய்யும் அதே நேரம் எவர் மனதையும் நோகடிக்காத பண்பான ஆரோக்கியமான நகைச்சுவையை (Compassionate Humour) இஸ்லாம் வரவேற்கிறது.
 
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் ஏறிச்செல்ல ஒரு வாகனம் கேட்டார். அதற்கு நபியவர்கள் உம்மை ஒட்டகத்தின் குட்டியின் மீது ஏற்றிவிடுகிறேன் என்றார்கள். அதற்கு அம்மனிதர் இறைதூதர் அவர்களே! ஒட்டகக்குட்டியை வைத்து நான் என்ன செய்வது? என்று கேட்டதற்க்கு எந்த ஒட்டகமும் தாய் ஒட்டகத்தின் குட்டித்தானே என்றார்கள் (புன்னகை பூக்க).
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: அபூதாவூத், திர்மிதி).

மார்க்கம் தரும் வரப்பிரசாதம்
உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பதும் தர்மமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி), ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (திர்மிதி 2022, 2037).
 
இவ்வாறு கூறும் உன்னத மார்க்கம் உலகில் இஸ்லாத்தை தவிர வேறெதுவும் இல்லை.

கண்ணியப் பார்வை
சிரிக்க காசு கேட்கும் சிடுமூஞ்சியாகவும் இல்லாமல், எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் இளிச்சவாயனாகவும் இல்லாமல் நடுநிலையோடு சிரிப்பதையே (புன்னகை) மார்க்கம் வலியுறுத்துகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு போதும் ஒரேயடியாக தமது உள் நாக்குத் தெரியும் அளவுக்கு சிரிக்க நான் கண்டதில்லை. அவர்கள் (பெரும்பாலும்) புன்னகை புரிபவர்களாகவே இருந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி

அத்தி பூத்தாற்ப்போல்
வெகு அரிதாக உள் நாக்கு, கடவாய்ப் பல் தெரியும் அளவுக்கு நபி (ஸல்) அவர்கள் சிரித்தும் உள்ளார்கள். ஒரு கிராமவாசி தன் நெஞ்சில் அடித்தவராக நபி (ஸல்) அவர்களிடம் வந்து நான் ரமலான் நோன்பு வைத்திருக்கும் போது என் மனைவியிடம் உடலுறவு கொண்டுவிட்டேன் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஓர் அடிமையை விடுதலை செய் அல்லது தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வை அல்லது 60 ஏழைகளுக்கு உணவளி என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! இவை எதற்கும் நான் சக்தி பெற மாட்டேன் என்று கூறினார். 15 ஸாவு அளவுள்ள பேரித்தம் பழம் கொண்டு வந்து இவரிடம் கொடுங்கள் என தோழர்களிடம் சொன்னார்கள். அவ்விதம் கொடுக்கப்பட்டது. இவற்றை தர்மம் செய்துவிடு என்றார்கள். இறைத்தூதர் அவர்களே! என்னை விடவும் தேவையுடையோர் யாருமேயில்லையே என்றார் அப்போது தான் நபி (ஸல்) அவர்கள் கடவாய் பற்கள் தெரியும் அளவுக்கு சிரித்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), புகாரி, முஅத்தா

புன்னகையாய் எதிர்கொள்ளல்
பிரச்சனைகளை ஏன் போர்க்களத்தை கூட புன் சிரிப்புடன் தான் எதிர்கொள்வார்கள் நபி (ஸல்) அவர்கள் (ஆதாரம்: புகாரி)

அறிஞர்கள் தரப்புச் சிரிப்பு
அழகின் சிரிப்பு என்றான் பாரதிதாசன்.
துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... என்றான் வள்ளுவநேசன்.
சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே... என்றான் கண்ணதாசன்.
சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவா மனித ஜாதி... என்றான் பொதுவுடைமை கவிஞன்.
வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போச்சு... என்றான் தமிழ் மூதறிஞன்.

இறைவனின் சிரிப்பு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்து சிரிக்கிறான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிடுகின்றார். இருவருமே சொர்க்கத்தில் நுழைகின்றார்கள் (எப்படி) முதலாமவர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு கொல்லப்படுகின்றார். பிறகு (அவரைக்) கொன்றவர் பாவமன்னிப்புக் கோர அதை ஏற்று அவரை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். பிறகு அவரும் அறப்போரில் (கொல்லப்பட்டு) உயிர் தியாகியாகி விடுகின்றார். (ஆதாரம்: புகாரி எண் 2826).

உஹது போரில் ஸயீத் பின் ஆஸ் (ரலி) அவர்களின் மகன் அஃபான் என்பார் எதிரிகளின் அணியில் இருந்தார். போரில் நுஃபான் பின் கவ்கல் (ரலி) என்ற முஸ்லிமை அவர் கொலை செய்து விட்டார். இவர் பிறகு இஸ்லாத்தில் இணைந்தார். பின்பு அறப்போரில் கொல்லப்பட்டு உயிர்த் தியாகியாகி விட்டார்.
 

ஆட்சியாளர்கள் சிந்திக்கட்டும்

அன்று முதல் இன்று வரை பொதுமக்களது பணத்தை சுருட்டுதல், அரசியல் சாசனத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி சிறுபான்மையினரின் உரிமைகளில் கைவைத்தல், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டு மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதித்தல் இன்னும் உங்கள் பாதங்களுக்குச் செருப்பாக இருந்து தொண்டாற்றுவோம் என்று போலி வார்த்தைகளைக் கூறி ஓட்டுக்களுக்காக மக்களை ஓட்டாண்டியாக்குதல் என்று ஆட்சியாளர்களாலும் அதிகார வர்க்கத்தினாலும் பொதுமக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அன்று ஹர்ஷத் மேத்தா என்றால் இன்று டெல்கி என்று ஆட்கள்தான் மாறுகிறார்களே தவிர மோசடிக் கலாச்சாரம் ஒழிந்தபாடில்லை.

தனி மனிதர்கள் தமது மூளையைப் பயன்படுத்தி மோசடி செய்கிறார்கள் என்றால் ஆட்சியதிகாரம் படைத்தவர்கள் தமது அதிகாரம் மற்றும் செல்வாக்கினைப் பயன்படுத்தி ஏமாற்றுகிறார்கள்.

மக்களிடம் நாம் இதுபற்றி பேசினால் இவங்களை எல்லாம் திருத்தவே முடியாது, என்று சாதாரணமாகப் பேசிக்கொள்ளும் அளவுக்கு ஏமாற்றுதல், மோசடி செய்தல் என்பன மக்கள் மத்தியில் பழகிப்போன ஒன்றாக மாறிவிட்டது.

ஹர்ஷத் மேத்தா என்ற பங்குச் சந்தை முகவர் 6000 கோடிக்கு மேல் வங்கிப்பணத்தை மோசடி செய்தார் என்றதும் அது மக்கள் மத்தியில் மிகப்பெரும் செய்தியாகப் பேசப்பட்டு தூக்குத்தண்டனை கிடைத்துவிடும் என்றுகூட சிலர் நினைத்தனர். ஆனால் இன்றுவரை அவர் அரசாங்க செலவில் சிறையில் பாதுகாப்பாக உள்ளார். ஆக மோசடி என்பது தொடர்ந்து நடைபெற்றாலும் அது அடுத்த சில நாட்களுக்குள் டீக்கடைகளில் பேசிக்கொள்ளும் ஒரு செய்தி என்ற அளவிலேயே நின்றுவிடுகிறது. இதற்கு மக்கள் மத்தியில் எந்தவிதமான எதிர் விளைவுகளும் ஏற்படுவதில்லை. எந்த அளவிற்கு அவர்கள் பழகிப் போய்விட்டார்கள் என்பதைக் கண்டுகொள்ள கடந்த சில ஆண்டுகளாய் நடந்துவரும் ஊழல் மற்றும் மோசடிகளை சற்று உற்று நோக்குவோம்.

குறுக்கு வழியில் சம்பாதித்து கோடீஸ்வரராக வேண்டும் என ஆசைப்படுபவர்கள் உடனே ஆரம்பிக்கும் தொழில் பைனான்ஸ் கம்பெனிதான். கடந்த சில ஆண்டுகளில் இந்த ஃபைனான்ஸ் கம்பெனிகளால் ஏமாற்றப்பட்டவர்கள் ஏராளம். கடந்த 1996 லிருந்து 2000ம் வரை நிதி நிறுவனங்கள் மோசடி செய்த பணம் மட்டும் 1800 கோடி ரூபாய். கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் தங்கள் முதலீடுகளை இழந்தனர். குறிப்பாக பல முதியோர்கள் தங்கள் பிள்ளைகளின் மேல் நம்பிக்கை இழந்து தங்கள் சொத்துகள் மற்றும் ஓய்வூதியம் (Pசழஎனைநவெ குரனெ) களை போலியான வட்டி மாயையில் சிக்கி தங்கள் எதிர்காலத்தையே இழந்தனர். எத்தனையோ பேர் தங்கள் எதிர்கால திட்டங்கள் மற்றும் பெண்மக்களின் திருமணச்செலவுக்காக வைத்திருந்த நகைகளையும், பணங்களையும் இழந்து நிற்கின்றனர். இந்த இழப்பை தாங்கமுடியாமல் 30 பேர் தற்கொலை செய்து கொண்டனர். பார்ப்பதற்கு நம்பிக்கையான வசதியான அலுவலகங்கள், கவர்ச்சியான ஹை-டெக் விளம்பரங்கள், மங்களகரமான பெயர்கள் இதுதான் மக்களை வீழ்த்தும் சூட்சுமம். ஸ்நேகம், அனுபவ், சுதர்சன் சிட் பண்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் சுருட்டிய பணம் மட்டும் 1000 கோடிக்குமேல் கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த தொடர் மோசடிகளில் பாடம் கற்று மக்கள் விழிப்புணர்வு அடைந்துவிட்டார்களா? என்றால் இல்லை. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள்.

தமிழ்நாடு காவல்துறை தலைமை வெயியிட்டுள்ள அறிக்கையின் படி 2000 முதல் 2004 வரை 1748 கோடியே 43 லட்சம் இந்திய ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ளன. இது குறித்து கிட்டத்தட்ட 1000 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சமீபகாலமாக பத்திரிக்கைகளில் எழுதப்பட்டுவரும் போலிமுத்திரைத்தாள் மோசடியில் மட்டும் 38,000 கோடி ரூபாய் கர்நாடகம், தமிழ்நாடு குஜராத், மற்றும் மஹாராஹ்டிர மாநிலங்களில் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சி.பி.ஐ கைதுசெய்துள்ள பிரதான குற்றவாளிகள் அப்துல் கரீம் டேல்கி மற்றும் சென்னை மாநகர முன்னாள் டி.ஐ.ஜி முகம்மது அலி போன்றவர்களும் இத்தகைய மாபாதக மோசடிகளில் ஈடுபட்டிருப்பதுதான் வேதனையான செய்தி. இதுசம்பந்தமாக பலரிடம் நடத்திய சோதனையில் 162 கோடிமதிப்புள்ள போலி முத்திரைத்தாள்கள் கைப்பற்றப்பட்டு நிஜாமுதீன் என்பவரையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர். மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டிய முஸ்லிம்கள் இத்தகைய மாபாதக செயல்களை செய்யத் துணிந்ததேன்??

இப்படி மக்களை ஏமாற்றுவோர் ஒருபுறம் ஏமாற்றிக்கொண்டிருக்க அரசாங்கம் என்ன செய்துகொண்டிருக்கிறது? காவல்துறையினர் ஏன் இவர்களை அலட்சியமாக விட்டார்கள்? என்று அப்பாவி பொதுமக்கள் கேள்வி எழுப்பலாம்! காரணம் இப்படி மோசடியில் சிக்கிக்கொண்டவர்கள் எளிதில் ஜாமீனில் வெளிவந்து விடுகின்றர். பின் நல்ல(?) வழக்கறிஞர்களை வைத்து காலாகாலமாக வழக்குகளை நடத்திக்கொண்டிருக்கின்றனர். மற்றொரு காரணம் ஆமை வேகத்தில் நடைபோடும் நீதித்துறை. உதாரணமாக ஆர்.பி ஃபைனான்ஸ் என்ற நிறுவனம் 2000ம் ஆண்டு ஜுலை மாதம் ஒரு லட்சம் பேரிடம் சுமார் 180 கோடி ரூபாயை மோசடி செய்ததாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும் விசாரணை தொடங்கியது 2004ம் வருடம்தான். வழக்குகளை விசாரிக்காமல் 4 ஆண்டுகள் வழக்கு நிலுவையில் இருந்தது. அப்படியே வழக்குகள் விசாரிக்கப்பட்டாலும் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி குற்றவாளிகள் பெரும் தண்டனைகளிலிருந்து தப்பிவிடுகின்றனர்.

2000 மற்றும் 2001ம் ஆண்டுகளில் பல கோடி ரூபாய் சுருட்டி மாட்டிக்கொண்ட போலிமுத்திரைத்தாள் வழக்கும் கூட இந்த நிலையில்தான் உள்ளது. இன்றுவரை வழக்குகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சில ஆண்டுகளுக்குமுன் எல்வின் பேங்கர்ஸ் என்ற நிறுவனம் 27 லட்சம் மோசடி செய்தது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எல்வின் ஏசுதாஸ், அந்தோணி, அற்புதம், டேவிட் ராஜா மற்றும் செல்வி என்ற ஐந்து பேர் கைது செய்யப்பட்டு வெற்றிகரமாக தீர்ப்பும் வழங்கப்பட்டது. தண்டனை என்ன தெரியுமா? 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை (அதாவது பாதுகாப்பான இடம் மற்றும் உணவு, உடை வசதிகள் இலவசம்) மற்றும் குற்றவாளிகள் ஒவ்வொறுவருக்கும் தலா 27,000 ரூபாய் அபராதம் இதில் இன்னும் ஓர் வேடிக்கை என்னவென்றால் இதே நபர்கள் மீது 97 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக இன்னும் ஓர் வழக்கு நாகர்கோவில் மாஜிஸ்திரேட்டில் நிலுவையிலுள்ளது. இதுதான் இந்தியாவின் யதார்த்த நிலைமை.

இப்படி ஏற்படும் மோசடிக்காரர்களை குளிர்விடச்செய்த இத்தகைய இலேசான தண்டனைகளும் ஒர் முக்கியக் காரணம். மோசடி செய்யப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவோம். குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவோம் என்று அரசியல் தலைவர்களும், அதிகார வர்க்கத்தினரும் பாராளுமன்றத்தில் கர்சித்துக் கொண்டிருப்பது ஒருபுறம் இருந்தாலும் நாட்டை ஆளுவோரான இவர்கள் நேர்மையாக நடந்து கொண்டார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. எதிர்கட்சிகள் ஆளும் கட்சியினரை ஊழல் குற்றம் சாட்டுவது பின் எதிர்கட்சி ஆட்சியில் அமர்ந்ததும் மீண்டும் அவர்களே அந்தத் தவறைச் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது.

இத்தகைய ஊழல் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான்கள் யார் என்று வெளிநாட்டு நிறுவனம் ஒன்று நடத்திய உலகளாவிய தரவரிசையின்படி இந்தியாவிற்கு 3ஆவது இடம் கிடைத்திருக்கிறது.

இது சம்மந்தமாக தினமணி இதழில் சகோதரர் சுகதேவ் எழுதிய ஊழல் உலகம் என்ற கட்டுரையின் சிலவரிகளை மேற்கோளிடுவது பொருத்தமாக இருக்கும்.
ஷ… டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் என்ற சர்வதேச ஊழல் மதிப்பீட்டு அமைப்பு கூறுகிறது.

ஐக்கிய நாடுகள் சபை டிசம்பர் 9-ம் தேதியை ஊழல் எதிர்ப்புத்தினமாக கடைப்பிடிக்கிறது. இ;ந்த தினத்தை ஒட்டி மேற்கண்ட அமைப்பு ஊழலில் உலக நாடுகளின் தரவரிசையை ஆராய்ந்து ஓர் அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறது.

உலக அளவில் அரசியல் கட்சிகள்தான் அதிக அளவில் ஊழல் புரிகின்றன என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ள அந்த அமைப்பு, இந்த வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது.

மொத்தம் 62 நாடுகளில் பல்வேறு தரப்பைச் சேர்ந்த 50,000 பேரிடம் திரட்டப்பட்ட விவரங்களின் அடிப்படையில் ஊழல் மிகுந்துள்ள நாடுகளை அந்த அமைப்பு வரிசைப்படுத்தியிருக்கிறது. இதில் ஈகுவேட்டர், அர்ஜெண்டினா ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக ஊழல் நிறைந்த அரசியல் கட்சிகளைக் கொண்ட நாடாக இந்தியா இடம் பெற்றிருக்கிறது. பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் 1 முதல் 5 புள்ளிகள் வரையிலான மதிப்பீட்டு முறையை அது கடைபிடித்திருக்கிறது. அதாவது ஒரு புள்ளிக்கு நெருக்கமாக இருந்தால் ஊழல் குறைவு ஒரு புள்ளியிலிருந்து இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்து புள்ளியை நோக்கிச் செல்லச் செல்ல ஊழல் அதிகம் என்று பொருள்.
அரசியல் கட்சிகள் ஊழலில் இந்தியா 4.6 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. பரிபூரண ஊழலுக்கு இந்தியா நெருக்கமாக வந்துவிட்டது. அதாவது ஐந்து புள்ளி என்பது தொட்டுவிடும் தூரம்தான்!

உலக அளவில் அரசியல் கட்சிகளுக்கு அடுத்து ஊழல் நிறைந்த துறைகளின் வரிசையில் நாடாளுமன்றம், காவல் மற்றும் நீதித் துறைகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்தியாவின் ஊழல் படிநிலையும் கிட்டத்தட்ட இதே வரிசையில் தொடர்கிறது. ஒரு சின்ன மாற்றம் மூன்றாவது இடத்திற்குப்பதிலாகக் காவல்துறை நான்காவது இடத்துக்கு அதாவது நீதித் துறைக்குப் பின்னால் வருகிறது. இந்த இறக்கத்தில் காவல்துறையை சற்றே பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

அரசியல் கட்சிகளிலிருந்து மத அமைப்புகள் வரை 15 துறைகள் அல்லது பிரிவுகள் இந்த ஊழல் பட்டியலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் புள்ளிகள் பெரும்பாலும் மூன்றுக்கும் நான்குக்கும் மேலாகத்தான் இருக்கின்றன. மீடியாவும் இந்தப் பட்டியலுக்கு விதிவிலக்கல்ல. மீடியாவில் இந்தியாவின் ஊழல் 2.7 புள்ளிகள். அதாவது இந்திய ஊடகங்களிலும் கணிசமாக ஊழல் நிறைந்திருக்கிறது என்று அர்த்தம். 2 புள்ளிகளுக்குக் குறைவாக இந்தியா பெற்றிருக்கும் ஒரே துறை ராணுவம் மட்டுமே. கெடுபிடிகள் அதிகம் இருந்தால்தான் நியாயம் ஓரளவுக்கேனும் காப்பாற்றப்படும் போலும். மத அமைப்புகளின் ஊழல் கணக்கு 2.7 புள்ளி தன்னார்வ சேவை அமைப்புகள் என்ற பெயரில் புற்றீசல் போல பெருகியிருக்கும் என்.ஜி.ஓக்கள் வட்டாரத்தில்கூட ஊழலுக்குக் குறைவில்லை. 2.7 புள்ளி. நல்ல சேவை!.

டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் நடத்திய இந்த ஊழல் கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 45 சதவிகிதம் பேர் அடுத்த மூன்றாண்டுகளில் ஊழல் இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் என்று கவலையுடன் தெரிவித்திருக்கிறார்கள்.

அரசியல் கட்சிகளின் ஊழலைப் பொறுத்தவரையில் வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள் என்று எந்தப் பாரபட்சமும் இல்லை. வளம் நிறைந்த நாடுகளான அமெரிக்காவும் பிரிட்டனும்கூட அரசியல் கட்சிகளின் ஊழலில் நான்கு புள்ளிகளுக்கு நெருக்கமாக இருக்கின்றன. இந்த விஷயத்தில் இரண்டு புள்ளிகளுக்குக் குறைவாக அதாவது அரசியல் கட்சிகளின் ஊழல் மிகக் குறைவாக இருக்கும் ஒரே நாடு சிங்கப்பூர் மட்டுமே. அங்கே சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படுகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மற்றபடி ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால் வளர்ச்சி பெற்ற நாடுகளைவிட வளரும் நாடுகளிலேயே ஊழல் அதிகம். வறுமை, கல்வியறிவின்மை, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் ஏற்கனவே திணறிக் கொண்டிருக்கும் இந்த நாடுகளின் வளர்ச்சிக்கு ஊழல் மிகப் பெரும் தடையாக இருக்கிறது.

அரசியல் கட்சிகள்தான் ஊழலின் பயிற்சி; களமாக இருப்பதாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இங்கே ஆளாளுக்குத் தனிக்கட்சி திட்டத்துடன் வலம் வருவதற்கான காரணம் இப்போது புரிகிறது. விவரமான பார்ட்டிகள்!
லஞ்சம் கொடுத்தாவது காரியத்தை முடிப்பவர்களைத்தான் சாமர்த்தியசாலி, திறமைசாலி என்றெல்லாம் பட்டம் சூட்டி இந்தச் சமூகம் கொண்டாடுகிறது. நேர்மையான வழியில் சென்று காரியத்தைச் சாதிக்க முடியாமல் போனால் சமூகக் கண்ணோட்டத்தில் அந்த மனிதன் தோற்றுப் போனவனாக ஆகிவிடுகிறான். பெரும்பாலானோர் தோற்க விரும்புவதில்லை.

சட்ட விரோதமாகக் குவித்த பணத்தில் குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்களாகிக் கூச்சமில்லாமல் பலர் வலம் வருகிறார்கள். பொதுமதிப்பீட்டில் அவர்கள் ஜெயித்துக் காட்டியவர்கள்! அவர்களிடையே குறைந்தபட்சம் குற்ற உணர்வைக் கூட ஏற்படுத்த இயலாத சரித்திர சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
(நன்றி : தினமணி, டிசம்பர் 12, 2004)

எனவே ஆட்சியாளர்களும், அதிகாரவர்க்கத்தினரும் சிந்திக்கட்டும். மறுமையை நம்பியிருக்கின்ற முஸ்லிம்கள் இத்தகைய மாபாதகச் செயல்களிலிருந்து முற்றாக விலகிக் கொள்ள வேண்டும்.

எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
(அல்-குர்ஆன், 3:161)

மேலும் ஆட்சியாளர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு அடியானுக்கு அல்லாஹ் ஆட்சி அதிகாரத்தை கொடுத்திருக்கிறான் அவன் அவர்களது நலனை காக்கவில்லை என்றால் அவர் சுவனத்தின் வாடையைக் கூட நுகரமாட்டார். (ஆதாரம் : புகாரி)

எனவே பொதுமக்கள் சிந்திக்கட்டும். அவர்கள் சுருட்டிக்கொண்டே செல்லட்டும் என்று மக்கள் தங்களது வாயில் பூட்டுக்களிட்டவாறு இருந்துவிடக்கூடாது. தலைவர்களை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக உரிமை கொடுக்கப்பட்டுள்ள நாம் ஆட்டு மந்தைகளாக இருந்து விடாமல் தேர்தல் களங்களில் நமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். மோசடி செய்பவர்கள் உடனுக்குடன் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்று மக்களும், அரசும் உறுதியுடன் இருக்க வேண்டும்.

ஊழல் செய்யும் ஆட்சியாளர்களை பாரபட்சமின்றி பதவியிலிருந்து அப்புறப்படுத்திட வாக்குகளை அழிக்காது முறையாகப் பயன்படுத்தவேண்டும். தலைவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவதை விட்டொழிப்போம். சினிமாவில் காணும் இந்தியன் தாத்தாவை நிஜவாழ்வில் தேடி கால் தளர்ந்து களைப்படைவதை விட்டுவிட்டு ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் மற்றும் மோசடிப் பேர்வளிகளுக்கு எதிராய் ஜனநாயக முறையில் போராடுவோம். இது மக்கள் பணத்தை சுருண்டுவோருக்கு பாடமாக அமையட்டும். இன்ஷாஅல்லாஹ்.

ஷைத்தானின் பயோ டேட்டா


பெயர்
இப்லீஸ்
புனைப் பெயர்
ஏமாற்றுக்காரன்
கொள்கை
பெரும்பான்மை மானிடரை நரகத்தில் சேர்ப்பது
முன் அனுபவம்
ஆதி பிதா ஆதம்(அலை) அவர்களை வழிகெடுத்தது
பதவி
அகில உலக ஷைத்தான்களின் தலைவன்
போக்குவரத்து வசதி
இரத்த நாளங்களிலெல்லாம் ஓடுவது
போர் முறை
தடுக்கப்பட்டதில் தான் "THRILL" எனக் காட்டுவது
(தவறான பயன்படுத்தலின் மூலம்) நவீன ஆயுதங்கள்
DISH. CAMARA-CELL PHONE. INTERNET. CHATTING. DATING. BROWSING. ETC
பிடித்த ஆட்டம்
மனதுக்குள் ஊசலாட்டம், முகஸ்துதி ஆட்டம்
தொழில் நுட்பம்
பலவீனத்தில் தாக்குவது
பிடித்த ஒலிம்பிக்
குடும்பத்தில் அல்லது சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்தும் ஆட்டம்
பொழுதுபோக்கு
குழப்பம் உண்டாக்குவது, சிண்டு முடிவது
நண்பர்கள்
பழிதூற்றுவோர், குழப்பம் விளைவிப்போர், பகை மூட்டுவோர்
ண்பிகள்
கவர்ச்சி நடிகைகள்
விரோதிகள்
இறைமொழி, நபிவழி நடப்போர், இறை அச்சமுடையோர்
பிடித்த துறை
சினிமாத்துறை
சமீபத்திய சாதனை
சமுதாயப் பிளவும், புழுதிவாரித் தூற்றலும்
ஏகத்துவ வட்டத்தில்
நீ பெரியவனா? நான் பெரியவனா?
ஷவ்வாலில் உன்பணி
ரமலானில் விட்டதையெல்லாம் சேர்த்துக் கட்டி வாங்குவது
நவீனப் பெயர்கள்
புஷ், பிளேயர், ஷெரோன், அம்மாடி மூச்சிரைக்கிது

மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (அல்குர்ஆன் 2:168)

எது நாகரீகம்

குறை ஆடையை
அணியச் சொல்லி
"கற்பை" மட்டும்
கழட்டி வைக்கச் சொல்கின்றனர்!

விளைவு!...

கிழிக்கப்பட்ட ஆடைகளுக்குள்
கற்புத் துகள்களைத் தேடி
காவல் நிலையங்களில்
பெண் வரிசைகள்!...

உடலை மறைப்பது
உரிமை மீறல் என்றால்
உடையைக் குறைப்பதற்கு
என்ன பெயராம்?

கட்டாய தலைமைத்துவ பயிற்சிநெறியிலிருந்து முஸ்லிம் மாணவிகளுக்கு விதிவிலக்கு அளிக்குமாறு வேண்டுகோள்.

2010ஃ2011 ம் ஆண்டிக்காக புதிதாக பல்கலைக்கழகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்காக உயர்கல்வி அமைச்சு மூனறுவார கட்டாய தலைமைத்துவ பயிற்சி நெறியொன்றை ஏற்பாடு செய்துள்ளது. இப்பயிற்சிநெறி முப்படைகளின் நெறிப்படுத்தலின் கீழ் படைமுகாம்களில் வதிவிட பயிற்சிநெறியாக நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இப்பயிற்சிநெறியானது பல்கலைக்கழக மாணவர்களிடையே தேசப்பற்றையும் சகவாழ்வையும் தலைமைத்துவ ஆளுமைகளையும் வளர்த்தெடுப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும். பல்கலைக்கழகம் புகுமுன்னறே இவ்வாறான பயிற்சிநெறிகள் அளிக்கப்படுவது பல்கலைக்கழக வாழ்வில் ஒழுக்க நெறியுடனும் கட்டுக்கோப்புடனும் தனது கல்வி வாழ்கையைத் தொடர மாணவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கின்றது.
எனினும் இப்பயிற்சிநெறியானது வதிவிடபயிற்சிநெறியாக இராணுவ முகாம்களில் இடம்பெறவிருப்பதானது முஸ்லிம் மாணவிகள் இப்பயிற்சி நெறியில் கலந்துகொள்ள முடியாத நிலையை தோற்றுவித்துள்ளது. ஏனெனில்; முஸ்லிம் மாணவிகள் இப்பயிற்சி நெறியில கலந்துகொள்வதில் பல்வேறு கலாச்சார ரீதியான பிரச்சiனைகளை எதிர்நோக்குகின்றனர். எடுத்துகாட்டாக இப்பயயிற்சி நெறியில் உடற்பயிற்சிஇ அணிநடை பிறபயிற்சிகள் போன்ற அம்சங்கள் உள்ளடக்கப்படும் என்பதால் இவற்றில் முஸ்லிம் மாணவிகள் கலந்துகொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. இந்த பயிற்சிகளுக்கேற்ற ஆடை அணிவதில் மாணவிகள் பல்வேறு கலாச்சார சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். மேலும் பெற்றோர்கள் மத்தியிலும்  இதுதொடர்பாக பல்வேறு அச்சங்கள் காணப்படுவதால் தமது பெண் பிள்ளைகளை இவ்வாறான பயிற்சி நெறியைத் தொடர்வதற்கு எந்தளவு தூரம் அனுமதிப்பார்கள் என்பதும் இங்கு அவதானத்திற்குறிய அம்சமாகும். இந்நிலையில் இத்தலைமைத்துவப் பயிற்சிநெறி அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் முஸ்லிம் மாணவிகள் தமது பல்கலைக்கழக கல்வியை கைவிட வேண்டிய நிலைமையையும் இது தோற்றுவிக்கலாம்.
எனவே முஸ்லிம்களின் கலாச்சாரம்இ கல்வி வளர்ச்சி போன்றவற்றைக் கருத்தில் கொண்டு இத்தலைமைத்துவ பயிற்சிநெறியிலிருந்து முஸ்லிம் மாணவிகளுக்கு விதிவிலக்கு அளிக்குமாறு மாற்றுக் கொள்கைக்கான பல்கலைக்கழக மாணவர் சங்கம் உயர்கல்வி அமைச்சிடம் வேண்டுகோள் விடுப்பதோடு இதுதொடர்பாக அரசியல் தலைமைகளும் புத்திஜீவிகளும் கலாச்சார நிறுவனங்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

மாத்தளை

மாத்தளை இலங்கையின் மத்திய மாகாணத்தின் அமைந்துள்ள ஒரு மாநகரம் ஆகும்.மாத்தளை மாவட்டத்தின் தலைநகரமும் அங்கு அமைந்துள்ள பெரிய நகரமுமாகும். மாத்தளை இலங்கையின் மலைநாட்டில் கொழும்பிலிருந்து 96 மைல் தொலைவிலும் கண்டியிலிருந்து 16 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.
  
 புவியியலும் காலநிலையும்
மாத்தளை மத்திய மலை நாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 492 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 23 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக் காற்றின் மூலம் கிடைக்கிறது. 2000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.

இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது.

The Sri Lanka History

SRI LANKA'S HISTORICAL AND CULTURAL HERITAGE covers more than 2,000 years. Known as Lanka--the "resplendent land"--in the ancient Indian epic Ramayana, the island has numerous other references that testify to the island's natural beauty and wealth. Islamic folklore maintains that Adam and Eve were offered refuge on the island as solace for their expulsion from the Garden of Eden. Asian poets, noting the geographical location of the island and lauding its beauty, called it the "pearl upon the brow of India." A troubled nation in the 1980s, torn apart by communal violence, Sri Lanka has more recently been called India's "fallen tear."

Sri Lanka claims a democratic tradition matched by few other developing countries, and since its independence in 1948, successive governments have been freely elected. Sri Lanka's citizens enjoy a long life expectancy, advanced health standards, and one of the highest literacy rates in the world despite the fact that the country has one of the lowest per capita incomes.

In the years since independence, Sri Lanka has experienced severe communal clashes between its Buddhist Sinhalese majority-- approximately 74 percent of the population--and the country's largest minority group, the Sri Lankan Tamils, who are Hindus and comprise nearly 13 percent of the population. The communal violence that attracted the harsh scrutiny of the international media in the late 1980s can best be understood in the context of the island's complex historical development--its ancient and intricate relationship to India's civilization and its more than four centuries under colonial rule by European powers.

The Sinhalese claim to have been the earliest colonizers of Sri Lanka, first settling in the dry north-central regions as early as 500 B.C. Between the third century B.C. and the twelfth century A.D., they developed a great civilization centered around the cities of Anuradhapura and later Polonnaruwa, which was noted for its genius in hydraulic engineering--the construction of water tanks (reservoirs) and irrigation canals, for example--and its guardianship of Buddhism. State patronage gave Buddhism a heightened political importance that enabled the religion to escape the fate it had experienced in India, where it was eventually absorbed by Hinduism.

The history of Buddhism in Sri Lanka, especially its extended period of glory, is for many Sinhalese a potent symbol that links the past with the present. An enduring ideology defined by two distinct elements--sinhaladipa (unity of the island with the Sinhalese) and dhammadipa (island of Buddhism)-- designates the Sinhalese as custodians of Sri Lankan society. This theme finds recurrent expression in the historical chronicles composed by Buddish monks over the centuries, from the mythological founding of the Sinhalese "lion" race around 300 B.C.

to the capitulation of the Kingdom of Kandy, the last independent Sinhalese polity in the early nineteenth century.

The institutions of Buddhist-Sinhalese civilization in Sri Lanka came under attack during the colonial eras of the Portuguese, the Dutch and the British. During these centuries of colonialization, the state encouraged and supported Christianity- -first Roman Catholicism, then Protestantism. Most Sinhalese regard the entire period of European dominance as an unfortunate era, but most historians--Sri Lankan or otherwise--concede that British rule was relatively benign and progressive compared to that of the Dutch and Portuguese. Influenced

by the ascendant philosophy of liberal reformism, the British were determined to anglicize the island, and in 1802, Sri Lanka (then called Ceylon) became Britain's first crown colony. The British gradually permitted native participation in the governmental process; and under the Donoughmore Constitution of 1931 and then the Soulbury Constitution of 1946, the franchise was dramatically extended, preparing the island for independence two years later.

Under the statesmanship of Sri Lanka's first postindependence leader, Don Stephen (D.S.) Senanayake, the country managed to rise above the bitterly divisive communal and religious emotions that later complicated the political agenda. Senanayake envisioned his country as a pluralist, multiethnic, secular state, in which minorities would be able to participate fully in government affairs. His vision for his nation soon faltered, however, and communal rivalry and confrontation appeared within the first decade of independence. Sinhalese nationalists

aspired to recover the dominance in society they had lost during European rule, while Sri Lankan Tamils wanted to protect their minority community from domination or assimilation by the Sinhalese majority. No compromise was forthcoming, and as early as 1951, Tamil leaders stated that "the Tamil-speaking people in Ceylon constitute a nation distinct from that of the Sinhalese by every fundamental test of nationhood."

Sinhalese nationalists did not have to wait long before they found an eloquent champion of their cause. Solomon West Ridgeway Dias (S.W.R.D.) Bandaranaike successfully challenged the nation's Westernized rulers who were alienated from Sinhalese culture; he became prime minister in 1956. A man particularly adept at harnessing Sinhalese communal passions, Bandaranaike vowed to make Sinhala the only language of administration and education and to restore Buddhism to its former glory. The violence unleashed by his policies directly

threatened the unity of the nation, and communal riots rocked the country in 1956 and 1958. Bandaranaike became a victim of the passions he unleased. In 1959 a Buddhist monk who felt that Bandaranaike had not pushed the Buddhist-Sinhalese cause far enough assassinated the Sri Lankan leader. Bandaranaike's widow, Sirimavo Ratwatte Dias (S.R.D.) Bandaranaike, ardently carried out many of his ideas. In 1960, she became the world's first woman prime minister.

Communal tensions continued to rise over the following years. In 1972 the nation became a republic under a new constitution, which was a testimony to the ideology of Sirimavo Bandaranaike, and Buddhism was accorded special status. These reforms and new laws discriminating against Tamils in university admissions were a symbolic threat the Tamil community felt it could not ignore, and a vicious cycle of violence erupted that has plagued successive governments. Tamil agitation for separation became associated with gruesome

and highly visible terrorist acts by extremists, triggering large communal riots in 1977, 1981, and 1983. During these riots, Sinhalese mobs retaliated against isolated and vulnerable Tamil communities. By the mid-1980s, the Tamil militant underground had grown in strength and posed a serious security threat to the government, and its combatants struggled for a Tamil nation--"Tamil Eelam"--by an increasing recourse to terrorism. The fundamental, unresolved problems facing society were surfacing with a previously unseen force. Foreign and domestic observers expressed concern for democratic procedures in a society driven by divisive symbols and divided by ethnic loyalties.

செயல்களில் சிறந்தது

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
"செயல்களில் சிறந்தது எது?' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புவது" என்றார்கள். 'அதற்குப் பிறகு எது (சிறந்தது)?' எனக் கேட்கப்பட்டபோது, 'இறைவழியில் போர்புரிதல்" என்றார்கள். 'அதற்குப் பிறகு எது (சிறந்தது?)' எனக் கேட்கப்பட்டபோது 'பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ்" என்று பதிலளித்தார்கள்.

போராளிகளே புறப்படுங்கள்!

போராளிகளே புறப்படுங்கள்!
ஒரு துப்பாக்கியின் ரவைகளினால்
எனது இரைச்சல் அடங்கி விட்டதுக்காய்
நமது எதிரி
வென்றுவிட்டான் என்று நீ
குழம்பிவிடக் கூடாது!

அன்றுதான்
போராட்டம் எனும் நமது
இருண்ட குகைக்குள்
வெற்றிச் சூரியனின்
வெண்கதிர்கள் நுழைகின்றன
என்பதை நீ மறந்து விடவும் கூடாது!

உனது தலைவனுக்கு
ஒன்றுமே நடக்கவில்லை என்பதனை
நீ எப்போதும் மறந்திடாதே!

தலைவர்கள் ஒரு போதும்
மரணிப்பதில்லை என்பதனை
நான்
சொல்லித்தரவில்லையா?
என்னை அதற்காய் நீ
மன்னித்து விடுவாயாக!

நாம் அல்லாஹ்வின் பாதையில்
நடந்து வந்தவர்கள்
நீங்களெல்லாம் தொடர்ந்து அப்பாதையில்
நடக்க இருப்பவர்கள!


இந்தப் போராட்டத்தில்
சூடுண்டாலும், வெட்டுண்டாலும்
சுகமெல்லாம் ஒன்றேதான்!

நமது போராளிகள்
யாரும் மரணிக்கப்போவதில்லை!

போராளிகளே புறப்படுங்கள்
ஓரத்தில் நின்று கொண்டு
ஓய்வேடுக்க நேரமில்லை!


இந்த மையத்தைக் குளிப்பாட்டுவதில்
உங்கள் நேரத்தை வீனாக்க வேண்டாம்!

தண்ணீரும் தேவையில்லை
பன்னீரும் தேவையில்லை!


உங்கள் தலைவனின் உடலில்
இரத்தத்தால் சந்தனம் பூசப்பட்டுள்ளதா?

அது அவனின் மண்ணறையில்
சதா மணம் வீச வேண்டுமெனில்
தூக்கி விரைவில் எடுத்துச் சென்று
தொழுது விட்டு அடக்குங்கள்!


இந்த மையித்தைக் குளிப்பாட்டுவதால்
கடைசி நேரத்தில் தலைமைத்துவக்
கட்டுப்பாட்டை மீறாதீர்கள்!


கண்ணீர் அஞ்சலிகள் போதும்
கவலைகளை கொஞ்சம் மறந்து தூக்குங்கள்!

இரத்தத்தால் தோய்ந்திருக்கும்
எனது ஆடைகளை எடுத்து வீசாதீர்கள்!
வேண்டுமெனில் எனது “இஹ்ராம்”
துண்டுகளை
அவற்றுக்கு மேலே எடுத்துப் போடுங்கள்!

எனது உடலில் இருந்து பொசிந்து வரும்
இரத்தச் சொட்டுக்கள், அவற்றை தழுவும்
பசியுடன் இருப்பதைப் பாருங்கள்!


எனது மூக்குக்குள்ளும்
எனது காதுகளுக்குள்ளும்
பஞ்சுத் துண்டங்களை வைத்தென் முகத்
தோற்றத்தை
பழுதாக்கி விடாதீர்கள்!

சில வேளைகளில் உங்களை நான்
சுவாசிக்காமலும்
சில வேளைகளில் உங்களை நான்
கேட்காமலும்
சில வேளைகளில் உங்களை நான்
பேசாமலும் இருந்திருக்கின்றேன்!


குருடர்களாகவும்
செவிடர்களாகவும்
ஊமையர்களாகவும் இல்லாதவர்களால்
இப்போராட்டத்தில் நின்று பிடிக்க முடியாது!


கபுறுக் குழிக்குள்ளாவது
என்னை சுவாசிக்க அனுமதியுங்கள்!
ஹ_ர்லீன்களின் மெல்லிசைகளை
கேட்டு ரசிக்கும் பாக்கியத்தைத் தாருங்கள்!

தூக்குங்கள் இந்த மையித்தை இன்னும்
சுணக்கவும் தேவையில்லை.
தூக்கி விரைவில் எடுத்துச் சென்று
தொழுது விட்டு அடக்குங்கள்!
ஓரத்தில் நின்றுகொண்டு
ஓயாமல் தர்க்கம் செய்யும்
வீரத்திற்கு வையுங்கள் முற்றுப் புள்ளி!


கருத்து வேறுபாடென்னும்
கறையான்கள் வந்துங்கள்
புரிந்துணர்வை சீரழிக்கும்! மிகவும்
புத்தியுடன் நடந்துகொள்ளுங்கள்!


வேகத்தைக் குறைக்காமல்
வெற்றியுடன் முன்னே செல்லுங்கள்!

ஆலமரமாய்
ஆயிரம் விழுதுகளுடன் நமது மரம்
வாழவேண்டும் - அதை
வாழ்விற்கப் புறப்படுங்கள்!

எனது பணி இனிது முடிந்தது
உங்கள் பணிகளைச் செய்வதற்காய்ப்
புறப்படுங்கள்!


அவனின் நாட்டத்தை
இவனின் துப்பாக்கி ரவைகள்
பணிந்து தலைசாய்நது
நிறைவேற்றியுள்ளன.

விக்கி அழுது
வீணாக நேரத்தை ஓட்ட வேண்டாம்
தூக்கி விரைவில் எடுத்துச் சென்று
தொழுது விட்டு அடக்குங்கள்!

பட்டினியால் அவதியுறும் சோமாலியாவுக்கு துருக்கி பிரதமர் விஜயம்

வறட்சியும்,பட்டினியும் பாடாய்படுத்தும் சோமாலியாவுக்கு துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் உருதுகானும் குழுவினரும் சென்று நிலைமைகளை பார்வையிட்டனர்.
கடந்த 20 வருடங்களிடையே முதன் முறையாக வெளிநாட்டு தலைவர் ஒருவர் கலவரபூமியான மொகாதிஷுவுக்கு வருகை தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உருதுகானுடன் அவருடைய மனைவியும், ஐந்து காபினட் அமைச்சர்களும் சென்றிருந்தனர். இக்குழுவினரை சோமாலியாவின் அதிபர் ஷேக் ஷெரீஃப் அஹ்மத் மொகாதிஷு விமானநிலையத்தில் வரவேற்றார்.
கலவரமும், பட்டினியும், வறட்சியும் கடுமையான நாசத்தை விளைவித்துள்ள மொகாதிஷுவுக்கு இதர நாட்டு ஆட்சியாளர்கள் செல்வதற்கு முடியாத இடமல்ல என்பதை நிரூபிப்பதுதான் இச்சுற்றுப்பயணத்தின் நோக்கம் என துருக்கியின் வெளியுறுவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வால் பட்டினியால் பாதிக்கப்பட்ட பகுதியாக சோமாலியாவை பிரகடனப்படுத்திய பிறகும் அந்நாட்டிற்கு கிடைக்கும் உதவிகள் போதுமானதல்ல எனவும், கூடுதலான உதவிகள் கிடைக்கச் செய்யவேண்டும் எனவும் உருதுகான் தெரிவித்தார்.
அதேவேளையில், சோமாலியாவிற்கு உதவ முன்வந்த நாடுகளையும், அமைப்புகளை அவர் பாராட்டினார்.
விமானநிலையத்திலிருந்து தங்கும் இடத்திற்கு செல்லும் வழியில் கண்ட கூடாரத்திற்கு அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு உருதுகானும், அவரது மனைவி அமீனாவும் உள்ளே நுழைந்தனர். அங்கே ஊட்டச்சத்து குறைவின் காரணமாக நான்கில் இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த பாஷிர்-ஃபாத்திமா தம்பதிகளுக்கு அவர்கள் ஆறுதல் கூறினர். பின்னர் பிள்ளைகளுக்கு சாக்லேட்டுகளை வழங்கினர். மொகாதிஷுவில் சில அகதிகள் முகாம்களுக்கும் இக்குழுவினர் சென்றனர்.

My Blog List