Search This Blog

Tuesday 30 September 2014

முத்து உருவாவது எப்படி?

சிப்பிக்குள் தோன்றும் கெட்டியான பொருளே முத்து எனப்படுகிறது.கடலில் காணப்படும் முத்துச் சிப்பியினுள் சிறிய திண்மப் பொருளொன்று புகுந்து கொண்டால் உயிருள்ள அந்தச் சிப்பி தன் புறத்தோல் அடுக்காகியஎபிதீலியம் என்னும் படலத்தால் அதை நன்கு பொதிகின்றது. நாளடைவில் அச்சிப்பியில் சுரக்கும் திரவம் மெல்லிய அடுக்குகளாக அதன் மீது படிந்து முத்தாக மாறுகிறது.முத்தில் காணப்படும் பிரதான மூலகங்களாவன ஆர்கனைட்டு, காண்கியோலின், நீர் என்பனவாகும். முத்து உருவாகும் போது மெல்லிய அடுக்குகள் பொதியப்படுவதினால் அது ஒளியை உட்பிரவேசிக்கவும் பிரதிபலிக்கவும் ஏற்ற தன்மையுடையதாகக் காணப்படுகின்றது. இதனால் சாதாரண முத்துக்கள் கூட பார்ப்பதற்கு மிகவும் ஒளிர்வுடையதாகத் தோன்றுகின்றன. கறுப்பு நிறமான முத்துக்களும் மிக அருமையாகக் காணப்படுகின்றன. இவ்வகையான முத்துக்களுக்குத் தேவை அதிகம்.

கடலுக்குள் ஓடுகள் பெற்றுள்ள உயிரினங்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. இவற்றில் ஒன்றுதான் முத்துசிப்பி. சிப்பிகளிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. 2.5 செ.மீ., முதல் ஒரு மீட்டர் வரை வளரக்கூடியவை. சிப்பிகளின் ஓடு இரு பகுதிகளானது.வளர்ப்பு முறைகள்நன்னீர் முத்துக்கள் வளர்ப்பு என்பது 6 நிலைகளில், முறையாக செய்யப்படுகிறது. அவையாவன; சிப்பிகள் சேகரிப்பது, வளர்ப்புக்கு முன் முறைப்படுத்துதல், அறுவை சிகிச்சை, வளர்ப்புக்கு பின் முறைப்படுத்துதல், குளத்தில் வளர்ப்பு, முத்துக்களை அறுவடை செய்தல்

முத்துக்களின் வகைகள்

முத்துக்கள் நன்னீரில் உருவானவையா, கடல் நீரில் உருவானவையா, அவற்றை உருவாக்கிய முத்துச்சிப்பி வகை, உருவான பிரதேசம் என்பவற்றைப் பொறுத்து முத்துக்களின் இயல்புகள் வேறுபடுகின்றன. முத்துக்களில் பின்வரும் வகைகள் உள்ளன:அக்கோயா முத்து,தென்கடல் முத்து,தகித்தியன் முத்து,நன்னீர் முத்துசிலவகைகள் அரிதாகவே கிடைக்கின்றன இதனால் அவற்றின் மதிப்பும் அதிகம்.


முத்துக்களும் தரமும்

சிப்பியிலிருந்து முத்தை பிரித்தல்முட்டை வடிவிலான முத்துக்கள் பொதுவாகத் தென்பட்டாலும் உருண்டையான தோற்றமுடைய முத்துக்களுக்கே (Pearls) மதிப்பு அதிகம். தூசி, மிதமிஞ்சிய வெப்பம், ஈரலிப்புத்தன்மை போன்றவற்றினால் முத்து பழுதுறும் வாய்ப்பு ஏற்படலாம்.


இயற்கை முத்துகள்
அவிகுலிடி சிப்பிகளிலும் யூனியனி என்னும் மட்டிகளிலும் உற்பத்தியாகும் முத்துக்கள் இயற்கை முத்துக்கள் ஆகும்.

செயற்கை முத்துகள்
சிப்பியின் உட்புறம் முத்துப்போல் அழகான மெல்லிய பொருள் ஒன்றினால் மூடியிருக்கும். இதை நேக்கர் என்பர். அந்த நேக்கரினால் உருவாக்கிய மணியை உயிருள்ள முத்துச் சிப்பியின் திசுவிற்கும் சிப்பிக்குமிடையே கவனமாக திணிப்பார்கள். அவ்வாறு திணிக்கப்பட்ட சிப்பிகளை கூண்டு ஒன்றினுள் வைத்து நீரில் பாதுகாப்பாக அமிழ்த்திவிடுவார்கள். நாளடைவில் மணிகள் பொதிக்கப்பட்டு முத்துக்கள் உருவாகும். தோற்றத்தில் பெரிய முத்துக்கள் பெறுவதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.இவ்வாறு பெறப்படும் முத்துக்கள் செயற்கை முத்துக்கள் எனப்படும். இந்த அரிய முறையை ஜப்பானியர் ஒருவர் 1804 ஆம் ஆண்டு கண்டு பிடித்தார்.

முத்துக்களின் தரத்தை எக்ஸ்-கதிர் எண்டாஸ் கோப் என்னும் கருவியின் மூலம் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடலாம்.சில வகை மீன்களின் செதில்களைக் கொண்டு முத்துச்சாறு (Pearlessence) உற்பத்தி செய்யப்படுகின்றது. அதை ஊன் பசையுடன் கலந்து கண்ணாடி மணிகள் மீது அவற்றைப் பூசி முத்துக்கள் தயாரிக்கின்றனர்.

 முத்துக்களின் நிறை அதிகமாகக் காணப்படுவதற்காக சில தொழில்நுட்ப யுக்திகளும் பயன்படுத் தப்படுகின்றன.

i)  சிப்பிகள், குளங்கள் ஆறுகளிலுள்ள நன்னீரிலிருந்து சேகரிக்கப்படுகின்றன. நேரடியாக மனிதர்களே இவற்றை சேகரித்து, தண்ணீர் உள்ள வாலி, பெரிய பாத்திரங்களில் வைக்கப்படுகின்றன. முத்து வளர்ப்பதற்கு சிப்பியின் சரியான அளவு, 8 செ.மீட்டருக்கு மேல் இருக்கு வேண்டும்.

ii) சேகரிக்கப்பட்ட சிப்பிகள், 2-3 நாட்களுக்கு ஒரே இடத்தில் சற்று கூட்டமாக, குழாய் தண்ணீரையும் சேர்த்து இருப்பு செய்யப்படுகிறது. இவ்வாரு செய்தல், சிப்பிகளின் சில தசைகளை வலுவிழக்கச் செய்யும். இதனால் அறுவை சிகிச்சை செய்வது எளிதாக இருக்கும்

.iii)  எந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்கிறோம் என்பதை பொருத்து, தசைகளில் வெளிபொருளை உள்ளிருப்பு செய்வது மூன்று விதமாக செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்யும்போது தேவைப்படும் பொருட்களாவன- உள்ளிருப்பு செய்யப்படும் மணிகள் அல்லது உட்கருவாகும்.மான்டில் காவிட்டிக்குள் உள்ளிருப்பு செய்தல்- இம்முறையில் வட்டமான (4-6 மி.மீ.சுற்றளவு) அல்லது அலங்கரிக்கப்பட்ட மணிகள் மான்டில் காவிட்டிகுள் நிலை நிறுத்தப்படுகின்றன. மான்டில் காவிட்டியில் உள்ளிருப்பு செய்தல், சிப்பியின் இரண்டு பகுதிகளிலும் செய்யலாம். அலங்கரிக்கப்பட்ட மணிகளை உள்ளிருப்பு செய்யும்போது மணிகளிலுள்ள அலங்காரம் செய்துள்ள பகுதி ஓட்டை பார்த்து இருக்க வேண்டும். மணிகளை தகுந்த இடத்தில் வைத்த பிறகு, சிப்பியை மூட வேண்டும்.மான்டில் திசுக்களுக்குள் உள்ளிருப்பு செய்தல்: இதில் சிப்பிகளை இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. அதாவது கொடுப்பவை, வாங்குபவை. இம்முறையில் சிறிய மான்டில் திசுக்கள் தயார் செய்யப்படுகின்றன. கொடுக்கும் சிப்பிகளிலிருந்து ஒரு ரிப்பன் வடிவ மான்டில் திசுக்களை எடுத்து, இதனை 2.மி.மீட்டர் அளவில் சிறு துண்டுகளாக வெட்டி பிரிக்கப்படுகிறது. வாங்கும் சிப்பிகளில், இவை உள்ளிருப்பு செய்யப்படுகிறது. இது இரண்டு வகைப்படும். அதாவது, உட்கருவுடன், உட்கரு இல்லாமல். உட்கரு இல்லாத முறையில், மான்டில் திசுக்கள் மட்டும் சிப்பிகளின் உள்ளே வைக்கப்படுகின்றன். . உட்கரு உள்ள முறையில், மான்டில் திசுக்களுடன் உட்கருவும் சிப்பிகளின் உள்ளே வைக்கப்படுகின்றன்.இனப்பெருக்க உடல் உறுப்புகளுக்குள் உள்ளிருப்பு செய்தல்:இம்முறையில் மேலே கூறப்பட்ட வகையில், திசுக்களுடன் உட்கருவும் சிப்பியின் இனப்பெருக்க உறுப்பில் வைக்கப்படுகின்றன.

iv) உள்ளிருப்பு செய்யப்பட்ட சிப்பிகளை நைலான் பைகளில் பத்து நாட்கள் வைத்து, எதிர் உயிர் மருந்துகள் அளித்து, இயற்கையான உணவுகளைக் கொடுத்து கவனமாக பராமரிக்க வேண்டும். இவை தினமும் பார்க்கப்பட்டு, செத்த சிப்பிகள் மற்றும் உட்கருவை நிகராகரித்த சிப்பிகள் வெளியில் எடுக்கப்படுகின்றன.

இயற்கை முத்துக்களும், செயற்கையாக வளர்க்கப்படும் முத்துக்களும் உயிரினங்களால் உருவாக்கப்படுபவை. இதனால் தொழிற்சாலைகளில் உருவாகும் பொருட்களைப்போல் ஒரே சீரான இயல்புகளைக் கொண்டிராது. கிடைக்கும் முத்துக்களின் சில இயல்புகள் விரும்பத்தக்கவை. சில விரும்பத்தகாதவை. ஒவ்வொரு முத்தும் இத்தகைய பல்வேறு விரும்பத்தக்க, விரும்பத்தகாத இயல்புகளின் கலவையாகவே காணப்படுகின்றன. இக் கூட்டு இயல்புகளைப் பொறுத்தே முத்தின் தரம் தீர்மானிக்கப்படுகின்றது. முத்துக்களின் தரம் பின்வரும் இயல்புகளில் தங்கியுள்ளது.வகைநேக்கரின் (nacre) தடிப்புஒளிர்வுத் தன்மை (luster)மேற்பரப்பின் தன்மைவடிவம்நிறம்அளவு


நேக்கரின் தடிப்பு


சிப்பியின் உட்புறம் முத்துப்போல் காணப்படும் அழகான மெல்லிய பொருள் நேக்கர் ஆகும். எனவே நேக்கரின் நிறம், ஒளிர்வு என்பனவே முத்தின் இயல்புகளாகவும் வெளிப்படுகின்றன. நேக்கரின் தடிப்பு அதிகரிக்கும்போது முத்தின் மதிப்பும் கூடுகின்றது.

ஒளிர்வுத் தன்மை

ஒளிர்வுத் தன்மை என்பது முத்தின் ஒளிர்வினதும் அதன் ஒளிதெறிக்கும் தன்மையினதும் அளவீடு ஆகும். நல்ல ஒளிர்வும், முகம் தெரியக்கூடிய அளவு பளபளப்பும் கொண்டது முதல் மங்கலான சொரசொரப்பானது வரையான தன்மைகளைக் கொண்ட முத்துக்கள் உள்ளன. கூடிய ஒளிர்வும், பளபளப்பும் கொண்ட முத்துக்கள் தரம் கூடியவை

No comments:

Post a Comment

My Blog List