Search This Blog

Sunday 25 September 2011

நீ இந்த உலகை விட்டுப் பிரிந்து செல்வது உறுதி

இந்த உலகம் நமது முக்கிய குறிக்கோள் அல்ல!

இவ்வுலகில் எவ்வளவுதான் ஆடம்பரமாக வாழ்ந்தாலும் – எவர் உதவியும் உனக்குத் தேவையில்லாமல் இருந்தாலும் என்றோ ஒருநாள் நீ இந்த உலகை விட்டுப் பிரிந்து செல்வது மட்டும் உறுதி.

உலகத்தை அனுபவித்தாய். உன்னை படைத்தவனை நினைக்கவில்லையே! அவனுக்காக உன்சிரம் பணியவில்லையே! அவன் பள்ளி நோக்கி உன் கால்கள் செல்லவில்லையே! அவனைப் பயந்து உன் விழிகள் அழவில்லையே! அவன் பாதையில் உன் பணத்தை செலவு செய்யவில்லையே! நீ உனக்காகவே உலகில் அழாதபோது, உனக்காகப் பிறர் அழுவார்கள் என்று நினைக்கின்றாயா? உனக்கென நீ இறைவனிடம் பிரார்த்திக்காதபோது பிறர் உனக்காக பிரார்த்திப்பார்கள் என்று எண்ணுகின்றாயா?

உன்னை எல்லோரும் முஸ்லிம் என்கின்றார்கள்தானே! ஆனால் உண்மையில் அல்லாஹ்விடத்தில் நீ முஸ்லிம்தானா? தொழாதவன் காஃபிர் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்களே! அப்படியானால் நீயும்....?!
Kaba

(அல்லாஹ்வை ) நம்பியோருக்கு அவர்களின் இதயங்கள் அவனை அஞ்சிப் பயந்து நினைவு கூர்ந்திட இன்னும் நேரம் வரவில்லையா? தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்ட எனது அடியார்களே!..நீங்கள் அல்லாஹ்வின் அருளை (மன்னிப்பை) விட்டும் நிராசையாகி விடவேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்போனும், கிருபையுள்ளாவனுமாவான். (குர்ஆன் – அல்ஹதீத்: 53)

My Blog List