Search This Blog

Saturday, 17 December 2011

இறைவனுக்கு நன்றி கூறி காலைப்பொழுதை தொழுகையோடு துவக்குவோம்!

நாம் கேட்காமலே அருளப்பட்ட இந்த வாழ்க்கைக்காக, ஒரு உண்மையான முஃமின் இறைவனுக்கு நன்றி செலுத்துபவராக மட்டுமில்லாமல், இறைவனும் அவனுடைய தூதரும் கற்றுத்தந்த வகையில் பயனுள்ளதாகவும் மாற்றிக்கொள்ள வேண்டும். சூரியோதயம் மற்றும் அஸ்தமனம் ஆகிய இரு நிலைகளின் மூலமாக இறைவன் தன்னுடைய அடியானுக்கு, அவனின்அருட்கொடைகளை ஞாபகப்படுத்துகிறான். அதிகமனோர் நன்றி செலுத்தாதவர்களாக இருக்கிறார்கள் என்றும் கூறுகிறான்.
“நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை” (40:61)
ஆரோக்கியமான உடல்நிலயை தந்து, உடல் உறுப்புக்கள் நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தவுடன் இறைவனுக்கு நன்றி செலுத்தவில்லை எனில் நம்மைவிட நன்றிமறந்தவர்கள் யாராக இருக்க முடியும். இறைவனிடம் மிகப்பெரும் நன்றியுள்ள அடியாராகிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன் “சிறிய மெளத்துக்குப்பிறகு மீண்டும் உயிர் கொடுத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்” என்று கூறி அன்றையகாலைப்பொழுதை இன்முகத்துடன் வரவேற்பவராக இருந்துள்ளார்கள் என்பதை ஹதீஸ்களில் காண்கிறோம்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் வாழ்நாள் முழுவதும், மழைக்காலங்களிலும் போர்க்காலங்களிலும், பஜ்ருடைய முன் சுன்னத் 2 ரக் அத்தையும் பர்ளு தொழுகையையும் தொடர்ந்து தொழுது வந்ததையும் ஹதீஸ்களில் காண முடிகிறது. இங்கே நம்முடைய நிலையை சீர்தூக்கிப்பார்க்கும் நிலையில் உள்ளோம். இரவில் தாமதமாக உறங்கி, காலையில் தாமதமாக எழும்போது, அவசர கதியில் இறைவனை புகழ்வதும் இல்லை, தொழவேண்டும் என்ற சிந்தனையும் வருவதில்லை.
தொழுகையில் அதன் நேரத்தில் தொழவேண்டும் என்ற குர்ஆன் வசனம், தாமதமாக உறங்கி தாமதமாக எழுபவன் ஷைத்தான், தொழாதவனின் காதில் ஷைத்தான் சிறுநீர் கழிக்கிறான், தொழாதவன் அன்றைய பொழுதை சோம்பலுடன் கழிக்கிறான் போன்ற ஹதீஸ்களை நன்கு அறிந்திருந்தும், தொழுகையில் பொடுபோக்காக இருப்பதை என்னவென்று சொல்வது. இறைவனிடத்திலே நன்றியுள்ள அடியானாக மாறுவதற்கு பதிலாக, இறைவனிடத்திலே சபதமிட்டு வந்த ஷைத்தான் வெற்றி அடைவதற்கு உதவி செய்வதுபோல் உள்ளது நமது செயல்பாடுகள்.
இரவில் முந்நேரம் உறங்கி, காலையில் சீக்கிரம் எழுந்து, இறைவனைப்புகழ்ந்து, பஜ்ர் தொழுகையை நேமமாக தொழுது, இறைவனின் அருளைப்பெற்று, அன்றைய காலைப்பொழுதை சுறுசுறுப்புடன் அடையப்பெற்றவர்களாக நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக.

குர்ஆன் கூறும் கருவியல் – மனிதப் படைப்பின் அற்புதம்

நிச்சயமாக நாம் மனிதனை களி மண்ணிலுள்ள சத்தினால் படைத்தோம்: பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்: பின்னர் அந்த இந்திரியத்துளியை அலக் என்ற (ஒட்டிக் கொண்டு தொங்கும்) நிலையில் ஆக்கினோம்: பின்னர் அந்த அலக்கை ஒரு (சவைக்கப்பட்ட மாமிசம் போன்ற ஒரு) தசைப் பிண்டமாக ஆக்கினோம்: பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாக ஆக்கினோம்: பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்: பின்னர் நாம் அதை வேறு ஒரு படைப்பாக (மனிதனாக) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவனும் படைப்பாளர்களுக்கெல்லாம் மிக அழகான படைப்பாளன் (அல்-குர்ஆன் 23:12-16)Sperm Production ஆணின் விதைப்பையிலிலுள்ள விதையிலிருந்து (Testis) உற்பத்தியாகும் பல கோடிக்கணக்கான உயிர் அணுக்கள் விதைப்பையிலிலுள்ள ‘Epididymis’ என்ற பாதுகாப்பான பகுதியில் பத்திரமாக சேகரித்து வைக்கப்படுகிறது. ஆண், பெண் சேர்க்கையின் போது இந்த உயிர் அணுக்கள் இங்கிருந்து புறப்படடு ‘Vas deferns’  என்ற குழாய்  வழியாக ஆம்புல்லா (Ampulla) என்ற குழாய்க்கு வந்து பின்னர் ‘Seminal Vasicle’ மற்றும் புரோஸ்டேட் கிளான்ட (Prostate gland) என்ற பகுதியிலுள்ள திரவங்களுடன் கலந்து இந்திரியமாக மாறுகிறது. பிறகு இந்திரியம் ‘Ejaculatory tube’ வழியாக ஆணுறுப்பிலிலுள்ள முத்திரக்குழாயை அடைந்து பின்னர் அங்கிருந்து பெண்ணின் கர்ப்பப் பையில் செலுத்தப்படுகிறது.
கர்ப்பப் பையினுல் செலுத்தப்படும் இந்திரியத்திலுள்ள பல இலட்ச/கோடிக் கணக்கான உயிர் அணுக்களிலிருந்து சில நூறு உயிர் அணுக்களே ஃபலோப்பியன் டியூப் (Fallopian Tube) என்ற குழாயை அடைகிறது. சினைப் பையிலிருந்து மாதம் ஒரு முறை வெளிவரும் ஒரு சினை முட்டையும் மாதவிடாயிலிருந்து 14-ம் நாள் ஃபலோப்பியன் டியூப் (Fallopian Tube)  க்கு வந்து சேர்கிறது. இங்கு தான் கருவுறுதல் நடைபெறுகிறது. ஃபலோப்பியன் டியூப் (Fallopian Tube)  க்கு வந்து சேர்ந்த ஆணின் சில நூறு உயிர் அணுக்களிலிருந்து ஒரே ஒரு உயிர் அணு மட்டும் பெண்ணின் சினையுடன் சேர்ந்து கருவுகிறது. பின்னர் இந்தக் கரு செல் டிவிசன் (Cell Division)    என்ற முறையில் ஒரு செல் இரண்டு செல்களாகி, இரண்டு நான்காகி, நான்கு எடடாகி இவ்வாறு பல்கி பெறுகிறது. பின்னர் இந்த கரு ஃபலோப்பியன் டியூப் (Fallopian Tube) லிருந்து சொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கருவுற்ற நாளிலிருந்து 8 ஆம் நாள் கர்ப்பப் பையை வந்து அடைந்து, கர்ப்பப் பையின் சுவர்களில் ஒட்டிக் கொண்டு தொங்குகிறது. இவ்வாறு கரு கர்ப்பப்பையின் சுவற்றில் ஊடுறுவுவதை ‘Implantation’ (இம்பிலேன்டேசன்) என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.Sperm's Path
இது வரை நாம் பார்த்த விளக்கங்கள் எவ்வாறு குர்ஆனோடு ஒத்துப் போகிறது என்று பார்ப்போம். விதைப் பையிலிலுள்ள எபிடிமிஸ் என்ற பகுதியில் பத்திரமாக சேகரித்து வைக்கப் பட்டுள்ள இந்திரியம் கர்ப்பப் பையினுள் செலுத்தப்பட்டு கருவுற்று கர்ப்பப் பையின் சுவர்களில் ஒட்டிக் கொண்டு தொங்கும் (அலக்) நிலைக்கு வருகிறது. இதையே மேற்கண்ட வசனத்தின் முதல் மூன்று வரிகள் கூறுகிறது. இங்கே குர்ஆன் கூறும் சில அற்புதங்களைக் காண வேண்டும்.
இந்திரத்துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம் என அல்லாஹ் கூறுகிறான். அலக் என்பதற்கு இன்றைய குர்ஆன் விரிவுரையாளர்கள் மூன்று விதமான பொருளைத் தருகின்றார்கள்.
1. ஒட்டிக் கொண்டு தொங்கும் ஒரு பொருள்,
2. ஒரு அட்டையைப் போன்ற ஒரு பொருள்,
3. இரத்தக் கட்டி.
அல்ஹம்துலில்லாஹ். குர்ஆன் கூறும் அலக் என்ற வார்த்தையின் இந்த மூன்று அர்த்தங்களும் இங்கே பொருந்திப் போகின்றது. முதலில் கருவானது ஃபலோப்பியன் குழாயிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக நகர்ந்து  வந்து கர்ப்பப் பையை அடைந்து, கர்ப்பப் பையின் சுவர்களில் ஒட்டிக் கொண்டு தொங்குகிறது. இவ்வாறு ஒட்டிக் கொண்டு தொங்கும் இந்தக் கரு கர்ப்பப் பையின் சுவர்களில் ஆழமாக வேருன்றி அதிலிலுள்ள இரத்த நாளங்களிலிருந்து தனக்குத் தேவையான சத்துக்களை (Nutrition) ஒரு அட்டையைப் போன்று உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது. இவ்வாறு ஒரு அட்டையைப் போன்று ஒட்டிக் கொண்டு சத்துக்களை (Nutrition) உறிஞ்சும் இந்தக் கரு இப்போது பார்ப்பதற்கு இரத்தக் கட்டியைப் போன்று தோற்றமளிக்கின்றது.Fertilization and Implantation
நாம் இனி அடுத்து என்ன நிகழ்கிறது என்று பார்ப்போம்.
கரு வளர்ந்து வரும் பொழுது ஒரு கட்டத்தில் வாயில் போட்டு மென்று சவைக்கப்பட்ட மாமிசம் போல தோன்றுகிறது. மருத்துவர்கள் இதை ஆய்வு மூலம் கண்டறிந்திருக்கின்றார்கள். இதையே குர்ஆன்  ‘முத்கா’ என்று குறிப்பிடுகிறது. இந்த மாமிச பிண்டத்திற்குள் தான் பின்னர் எலும்புகள் உருவாகின்றன. அடுத்து அந்த எலும்புகளைச் சுற்றி சதைப் பிடிப்பு ஏற்படுகிறது. இந்த சதை பிடிப்பை குர்ஆன் ‘லஹ்ம்’ என்கிறது. இந்தக் காலகட்டத்தில் மனிதனுக்கு தேவையான  மற்ற உறுப்புகளும் வளர்ச்சியடைந்து மனிதபடைப்பாக மாறுகிறது. இவ்வளவு நுணுக்கமான முறையில் கருவின் வளாச்சி குறித்து குர்ஆன் விவரிக்கிறது. ஒரு தேர்ந்த மருத்துவரால் தான் இந்த உண்மைகளை நன்கு புரிந்து கொள்ள முடியும்; விளங்கிக் கொள்ள முடியும். ஆனால் இந்த நவீன கண்டுபிடிப்பை குர்ஆனில் 1400 ஆணடுகளுக்கு முன்னரே மிகத்துல்லியமாக வர்ணிக்கப்பட்டிருப்பது இது இறைவேதம் என்பதற்கு மற்றுமொரு சான்றாகும்.

My Blog List