Search This Blog

Monday 27 August 2012

ஜனாஸா தொழுகை

ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது என்று நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்....


முதல் தக்பீர் கூறிய பின் அல்ஹம்து அத்தியாயத்தை (சூரத்துல் ஃபாத்தியா) ஓத வேண்டும்.


இரண்டாம் தக்பீர் கூறிய பின் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும் ”அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.


மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்கு பின்....

இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும், மறுமை நன்மைக்காகவும் துஆச் செய்ய வேண்டும். ஜனாஸா தொழுகையின் போது நபி(ஸல்) அவர்கள் பல்வேறு துஆக்களை கேட்டுள்ளார்கள். அவற்றில் இயன்றதை நாம் ஓதிக் கொள்ளலாம்.

அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் ஃகைரன் மின் தாரிஹி வஅஹ்லன் ஃகைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் ஃகைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ர் வமின் அதாபின்னார் அறிவிப்பவர் அவ்ஃப் பின் மாலிக்(ரலி) நூல்- புஹாரி.

பொருள்: இறைவா..!

இவரை மன்னித்து அருள் புரிவாயாக..!

இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..!

இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!

இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக..!

பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக..!

அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக..!

கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!



No comments:

Post a Comment

My Blog List