Search This Blog

Sunday, 21 October 2012

பூண்டு

பூண்டு

கைவைத்தியத்துக்கு சிறந்தது பூண்டு. அதன் மருத்துவக் குணங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாலும் நாம் அதை எளிதில் மறந்து விடுவோம்.
அதனால்தான் நமது முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த நம்மை பழக்கப்படுத்திவிட்டனர். அன்றாட உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலம் நமக்குக் கிடைக்கும் நன்மைகளில் சில வருமாறு:-
* குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகும்.
* தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும்.
* உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ஆகையால்தான் கரையாத கொழும்புச் சத்து உள்ள மாமிச உணவு சமைக்கும் போது பூண்டை அவசியம் சேர்க்கின்றனர்.
* இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டுத் துண் டுகளை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும்.
* பூண்டுக்கு இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் இரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டுக்கு உண்டு
* பூண்டு ஒரு நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டுக்கு உண்டு.
* பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் பூண்டு மாத்திரைகளைச் சாப்பிடலாம்

Monday, 15 October 2012

அப்பா


அப்பாவைப் பற்றி வயது ஏற ஏறப் பிள்ளைகளின் மதிப்பீடு:
நான்கு வயதில் :என் அப்பாவால் எதையும் செய்ய முடியும்.
எழு வயதில் ;என் அப்பாவுக்கு எல்லாம் தெரியும்.முழுக்கத்தெரியும்.
எட்டு வயதில் :என்னப்பாவுக்கு எல்லாமே முழுமையாக தெரிந்திருக்காது.
12 வயதில் :எல்லாவற்றையும் என் அப்பா தெரிந்திருக்க
அவசியமில்லை.
14 வயதில் ;அப்பாவா!அவர் பத்தாம் பசலி.
21 வயதில் :அந்த ஆள் இந்தக் காலத்துக்கு ஏற்றவர்அல்ல.அவரிடமிருந்த என்ன எதிர் பார்க்க முடியும்?
25 வயதில் ;அவருக்கு ஏதோகொஞ்சம் தெரியும்.அதிகமாக ஒன்றுமில்லை.
30 வயத்ல் :அப்பா இது பற்றி என்ன நினைக்கிறார் என்று பார்க்க வேண்டும்
35 வயதில் :அப்பாவின் கருத்தை அறிய கொஞ்சம் பொறுமை காட்ட
வேண்டும்.
50 வயதில் :அப்பா இது பற்றி என்ன எண்ணியிருப்பார்?
60 வயத்ல் :உண்மையிலே அப்பாவுக்கு எல்லாம் தெரிந்திருந்தது.
65 வயதில் :அப்பா இப்போது இருந்தால் அவரிடம் இது பற்றி ஒரு
யோசனை கேட்கலாம்.

நேற்று,இன்று,நாளை

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்
    3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
    4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத்   தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
    5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
    6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
    7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
    8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
    9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில்   வாழ்நாளே இழப்பு.
   10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
   11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
  12.  எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
   13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
   14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
   15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
    16.  யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்
   17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
   18.   பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்
   19.  நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
   20.  உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
   21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்
   22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத்  தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
   23.  தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்
   24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்
   25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்
  26.  அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்
   27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்
   28.  தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
   29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
   30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்
   31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்
   32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
   33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது
34.ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தையே மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்; ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை.–லியோ டால்ஸ்டாய்
`
35.மாற்றம் என்பது மானிடத் தத்துவம்,மாறாதிருக்க நான் வனவிலங்கல்லன்.– கண்ணதாசன்
`
36.தேனீக்கள் கொட்டும் என்று அஞ்சி கொண்டேயிருந்தால் என்றைக்கும் உங்கள் நாக்கால் தேனின் சுவையை உணரவே முடியாது.
`
37.எதற்கும் பிறரை சார்ந்திருக்க ஊனமுற்றவர்கள் கூட விரும்புவதில்லை.–சுகி செல்வம்
`
38.நேற்று,இன்று,நாளை ;
இன்றிருக்கும் நான் நேற்றிருந்த நான் – ஐ விட அறிவு,எண்ணம்,படிப்பு,செயல்,திறமை,பழக்கம்…. ஆகிய ஏதோ ஒன்றிலாவது சிறிதளவாவது முன்னேறி இருக்க வேண்டும்.நான் யாரோடும் போட்டியிடத் தேவையில்லை,நேற்றைய நானுடன் இன்றைய நான் போட்டியிட்டு முன்னேற வேண்டும்,நாளைய நான் இன்றைய நான் — ஐ விட ஒரு படியாவது முன்னேற வேண்டும்.

Friday, 5 October 2012

புவி அமைப்பின் சில உச்சங்கள்

மிக உயர்ந்த பகுதி                        எவரெஸ்ட் சிகரம், நேபாளம்
மிக தாழ்ந்த பகுதி                         சாக்கடல், ஜோர்டான்
மிகப் பெரிய கடல்                        தென் சீனக்கடல், பசிபிக் பெருங்கடல்
மிக நீளமான ஆறு                        நைல், ஆப்பிரிக்கா
மிக பெரிய பாலைவனம்                   சஹாரா, வட ஆப்பிரிக்கா
மிக வெப்பமான பகுதி                     தலோல், டானகில் டிப்ரெஷன், எத்தியோப்பியா (34.4 செல்ஷியஸ்) (வருட சராசரி)
மிக குளிரான பகுதி                       பிளோட்டோ ஸ்டேஷன், அண்டார்டிகா (-56.7 செல்ஷியஸ்) (வருட சராசரி)
மிக ஈரமான பகுதி                        மௌசின்ராம், மேகாலயா, இந்தியா (11,873 மி.மீ) (வருட சராசரி)
மிக உலர்ந்த பகுதி                        அட்டகாமா பாலைவனம், சிலி
மிகப்பெரிய கண்டம்                       ஆசியா
மிகப்பெரிய உப்பு நீர் ஏரி                  காஸ்பியன் கடல்
மிகப்பெரிய நன்னீர் ஏரி                           சுப்பீரியர் ஏரி, அமெரிக்கா – கனடா
மிகப்பெரிய நீர்வீழ்ச்சி                      ஏஞ்சல், வெனிசுவேலா
மிகப்பெரிய தீவு                                  கிரீன்லாந்து
மிகப்பெரிய தீவுக்கூட்டம்                   இந்தோனேஷியா
மிகப்பெரிய சமவெளி                      கங்கைச் சமவெளி
மிகப்பெரிய வனம்                         கோனிஃபெரஸ், வட ருஷ்யா
மிகப்பெரிய ஆலையம்                     அங்கோர்வாட், கம்போடியா
மிகப்பெரிய விமான நிலையம்        மன்னர் காலத் சர்வதேச விமான நிலையம், சௌதி அரேபியா
மிகப்பெரிய தேவாலயம்                    செயின்ட் பீட்டர்ஸ் பஸலிக்கா, வாடிகன்
மிகப்பெரிய இராணுவம்                           பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மி, சீனா

Tuesday, 25 September 2012

கிராம்பு

கிராம்பின்  குண‌ங்கள்

கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்த
ல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்கு வதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.

* உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

* ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

* கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

* நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

* சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

* கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

* கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

* 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

* தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

* கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

* கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

* சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.

Thursday, 6 September 2012

சூரியக் குளியல்

சூரிய மருத்துவம் சூரியக் குளியலால் நிகழ்த்தப்பட வேண்டும். விடியற்காலை செவ்விள ஞாயிறே இதற்கு ஏற்றது. காலை 9 மணிக்குமேல் இது ஏற்றத்தக்கதல்ல. உள்ளுடைகளுடன் மட்டும் உடலின் முன் பகுதியிலும், பின் பகுதியிலும் வெய்யில் படும்படு 5 நிமிடத்திலிருந்து 1 மணி நேரம் வரை இருக்கவும். விடியற்காலை சூரியனின் சாய்ந்த ஒளிக்கதிரில் புறஊதா கதிர்கள் உண்டு, இவை உடலுக்கு சக்தி தருபவை. விட்டமின் டி இதில் நிறைய உண்டு. இந்த விட்டமின் பற்றாக்குறையால் குழந்தைகளுக்கு வரும் ரிக்கெட்ஸ், எலும்பு சம்பந்தமான நோய்கள் சூரியக் குளியலால் குணமாகும். சூரிய ஒளியின் இரசாயனக் கதிர்கள் இரத்தச் சிவப்பு அணுக்களின் உற்பத்தியைப் பெருக்குகின்றன. சோகை நோய்க்கு சூரியக் குளியல் மாமருந்து. முடி கொட்டுபவர்கள் அதனை நிறுத்த சூரியக் குளியல் செய்யுங்கள். முடி செழித்து வளர கதிரொளி உதவும். கதிரொளி தோலின் வேலையைச் செம்மையாக்குகிறது. தோல் நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய்கிருமிகளை அழிக்கிறது. தோல் நோய்த் தொல்லைகள் மறைய சூரிய குளியல் மிகவும் உதவும். எல்லாவிதமான கண் நோய் கோளாறுகளுக்கும் கண்ணை மூடிக்கொண்டு சூரியனைப் பார்க்க வேண்டும். விழியை பக்க வாட்டிலும், மேலும், கீழும் நகர்த்த வேண்டும். சூரியக்குளியலின்போது மயக்கம் வருவோர் நரம்பு வியாதி உள்ளோர், இரத்தச் சிதைவுள்ளவர்கள் இம்மருத்துவம் செய்யக்கூடாது.

பேரிச்சம் பழம்

சிறியவர் முதல் பெரியவர் வரை அன்றாடம் உணவு உண்டபின் ஒரு வேளையாவது 2 அல்லது 3 பேரிச்சம்பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். உடலின் மேலுள்ள தோல் வழவழப்பாகும். கண் சம்பந்தமான கோளாறுகள் வராது. இருந்தாலும் குணமாகும். எந்த வகையான தொற்று நோயும் அணுகாது. சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானமாகும். தாது விருத்தியும், போக சக்தி குறையுடையவர்கள் பேரிச்சம்பழத்தைத் தேனில் ஊறவைத்து நாள்தோறும் சில துண்டுகளைச் சாப்பிட்டு பால் அருந்தினால் நல்ல குணம் தெரியும். இருமல், கபம் போன்ற கோளாறுகளுக்குப் பேரிச்சம்பழத்தைப் பாலில் வேகவைத்து உண்டால் நல்ல பலனுண்டு.

My Blog List