Search This Blog

Thursday, 21 March 2013

இருதய இரத்தக் குழாய் அடைப்பு

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

Tuesday, 12 March 2013

யஃஜுஜு, மஃஜுஜு

யஃஜுஜு, மஃஜுஜு (கூட்டத்தார்)க்கு வழி திறக்கப்படும் போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள். அல்குர்ஆன் 21:96

ஃபுளோரஸ் தீவில் விசித்திர குள்ளர்கள்
இந்தோனேஷியா கிழக்குப் பகுதியில் Flores என்ற ஒரு தீவு உள்ளது. இந்த தீவு மலைகளும் காடுகளும் எரிமலைகளும் நிறைந்த ஒன்று. இங்குள்ள கிராமத்தில் வயது முதிர்ந்த பெரியவர் நெல்லிஸ் குயா தனது மூதாதையர்கள் கூறியதாக சொல்லும் விசித்திர கதை.

இந்த கிரமத்திற்கு அப்பால் உள்ள மலைகளுக்கு பின்னால் விசித்திர குள்ளர்கள் வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் கண்கள் பெரிதாகவும் உடல் முழுவதும் ரோமம் மூடியவர்களாகவும், ஒன்றும் விளங்கிக் கொள்ள முடியாத மொழி பேசுபவர்கள் என்றும், இவர்கள் அடிக்கடி தங்கள் கிராமத்திற்குள் புகுந்து பயிர்கள், உணவுப் பொருள், பழங்களை திருடிக்கொண்டு ஓடி விடுவார்கள். பெரும் பசிக்காரர்கள். எதையும் தின்பவர்கள். இக்குள்ளர்களை (Ebu gogo) எபு கோகோ என்று அழைப்பதாகவும் கூறினார். இதற்குப் பொருள் எதையும் தின்னும் தின்னிப்பாட்டி.

இது போன்ற கதை இந்தோனேஷியா கிராமங்களில் ஏராளமாய் உண்டு என்பதால் ஆய்வாளர்கள் இக்கதைகளை கற்பனை என ஒதுக்கித் தள்ளினர். ஆனால் 2003ம் ஆண்டு புளோரஸ் தீவில் நெல்லிஸ் குயா வாழ்ந்த கிராமத்திலிருந்து 75 மைல் தொலைவில் ஒரு குகையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு எலும்புக்கூடு, மேற்கண்ட கதைகள் கற்பனையல்ல உண்மைதான் என அறிவித்து உலகத்தை வியக்க வைத்தது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா தொல் பொருள் ஆய்வுக் குழுவினர் டாக்டர் ரிச்சர்ட் ராபர்ட் தலைமையில் இவ் எலும்புக் கூட்டுடன் பல மிருகங்களின் எலும்புகளையும் 19 அடி ஆழத்தில் கண்டு பிடித்தனர். முதலில் இந்த எலும்புக் கூடு ஒரு சிறிய குழந்தையின் எலும்பாக இருக்கும் என்று நம்பினர். ஏனெனில் மொத்த உயரமே மூன்று அடிதான். இறுதியில் விரிவாக ஆராய்ந்த பொழுது, இது வரை யாரும் அறியாத புதிய மானிட இனம் என்பதை அறிந்தனர். கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு சுமார் 30 வயதுடைய பெண்ணின் எலும்பாகும்.

இவர்களின் மொத்த உயரமே சராசரி 3 அடிதான். அதாவது 3 வயது குழந்தையின் உயரம்தான். இவர்களின் மொத்த உடல் எடை 25 கிலோதான். மூளை அமைப்பு மிகச்சிறியதாகவும் சிக்கல் நிரம்பியதாகவும் காணப்படுகிறது. இக்கண்டு பிடிப்பின் மூலம் மனித பரிணாம வளர்ச்சி கொள்கை தலைகீழாக புரண்டு விட்டது. பெரிய மூளையுடைய மனிதர்கள் மட்டுமே நுட்பமான அறிவு நிறம்பியவர்கள் என்ற கருத்துக்கு மாறாக சிறிய அளவுள்ள மூளையை உடைய இந்த சித்திரக்குள்ளர்கள் வேட்டையாடுதல் வேட்டை கருவிகளை கூர்மையாக உருவாக்கும் நுட்பம் அறிந்தவர்கள் என்று ஆய்வு கூறுகிறது. இந்த 3 அடி பெண் எலும்புக்கூடு சுமார் 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இது பற்றி டாக்டர் ரிச்சட் ராபர்ட் கூறும் பொழுது மானிட வரலாற்றில் 18 ஆயிரம் என்பது சமீபமாக ஒன்று. இந்த புதிய இன குள்ள மனிதர்கள் இன்றும் கூட அடர்த்தியான காடுகளில் வாழ்ந்து வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்னும் விரிவாக ஆய்வு நடத்தினால் இப்புதிய இனத்தைப் பற்றி மேலும் அறியலாம் என்று கூறினார்.

முதியவர் நெல்லிஸ் குயாவின் கிராமத்தினர், இன்னும் இந்த விசித்திர குள்ளர்கள் மலைகளுக்கு அப்பால் வசிப்பதாக நம்புகின்றனர். இக்கிராமத்தினர் அனைவரும் கிருஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள். விசித்திர குள்ளர்கலை Ebu Gogo என்று அழைப்பது யஃஜுஜ், மஃஜுஜின் ஆங்கிலப் பெயரான Yahog, Magog வுக்கு நெருக்கமாக உள்ளது கவனிக்கத்தக்கது. இந்த சித்திர குள்ளர்கள் மனித இனத்தின் ஒரு பிரிவினர். இவர்களுக்கு Homo floresiensis என்ற பெயர் இடப்பட்டுள்ளது.
“யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டம் வரும்வரை நீங்கள் போராடிக்கொண்டே இருப்பீர்கள்; அவர்களின் முகம் அகன்றதாகவும், கேடயம் போல்(வட்டமாகவும்) கண்கள் சிறிதளவும், முடிகள் பட்டையாகவும் அமைந்திருப்பார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: காலித் பின் அப்துல்லாஹ் நூல்கள்: அஹ்மத் தப்ரானீ

கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓட்டின் முக அளவும் கிராம மக்களின் வர்ணிக்கும் ‘எபு கோகோ குள்ளர்களின் அமைப்பும் ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துல்கர்னைன் அவர்கள் பயனம் செய்த கீழ்திசை இரு மலைகள் சூழ்ந்த அமைப்பு, விளங்கிக்கொள்ள முடியாத மொழி பேசுபவர்கள், மேலும் எரிமலை குழம்பு நிறைந்த ஃபுளோரஸ் தீவில் இரும்புப் பாலங்களும் நெருப்பாக்குவதற்கு தேவையான மரங்கள் மற்றும் நிலக்கரியும் அங்கு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது
. துல்கர்னைன் எழுப்பிய தடுப்புச் சுவர் இந்தோனேஷிய தீவுகளில் எதாவது ஒன்றில் இன்ஷா அல்லாஹ் இருக்கலாம். ஃபுளோரஸ் தீவில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடும் எலும்புக்கூடும் தரும் ஆய்வுச் செய்திகள், குள்ள மனிதர்கள் வேட்டையாடுவதில் சிறந்தவர்கள், கூர்மையான கற்கலால் ஆன ஆயுதங்களை கொண்டு ராட்சத பல்லி, முயல் அளவில் உள்ள காட்டெலி அன்று வாழ்ந்த குள்ள யானை போன்ற மிருகங்களை வேட்டையாடி வீழ்த்தியுள்ளார்கள். இவ்விடத்தில் நபி(ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தி கவனிக்கத்தக்கது.

(யஃஜுஜ், மஃஜுஜ் மடிந்தபின்) அவர்களின் அம்புகளையும், விற்களையும், அம்பாரத் தூளிகளையும் ஏழு ஆண்டுகளுக்கு முஸ்லிம்கள் பயன்படுத்துவார்கள். அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன்(ரழி) நூல்:திர்மிதீ

ஏழு ஆண்டுகள் விறகாக பயன்படுத்துமளவிற்கு அம்பாரக்கூடுகள் பெரும் எண்ணிக்கையில் இருந்தால் இக்கூட்டம் அடர்ந்த காடுகளில் வாழ்ந்தாலே இது சாத்தியம். மனிதன் கால்படாத ஏராளாமான காட்டு பிதேசங்கள் இன்றும் இந்தோனேஷிய தீவுகளில் உள்ளன. ஆகவே அறிவியல் சான்றுபடியும் கிராம மக்கள் வழிவழி கதைகள் மூலமும் அல்குர்ஆன் அல்ஹதீஸ் மூலம் அறியும் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டம் இந்தோனேஷிய தீவுகளில் இன்ஷா அல்லாஹ் வாழ்ந்து வரலாம். அல்லாஹ் அறிந்தவன். எது எப்படியோ 3 அடி குள்ள மனிதர்கள் ஆதம்(அலை) சந்ததிகள் என்ற குர்ஆன், ஹதீஸ் முன்னறிவிப்பு இன்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு விட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, 21 October 2012

பூண்டு

பூண்டு

கைவைத்தியத்துக்கு சிறந்தது பூண்டு. அதன் மருத்துவக் குணங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாலும் நாம் அதை எளிதில் மறந்து விடுவோம்.
அதனால்தான் நமது முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த நம்மை பழக்கப்படுத்திவிட்டனர். அன்றாட உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலம் நமக்குக் கிடைக்கும் நன்மைகளில் சில வருமாறு:-
* குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகும்.
* தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும்.
* உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ஆகையால்தான் கரையாத கொழும்புச் சத்து உள்ள மாமிச உணவு சமைக்கும் போது பூண்டை அவசியம் சேர்க்கின்றனர்.
* இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டுத் துண் டுகளை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும்.
* பூண்டுக்கு இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் இரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டுக்கு உண்டு
* பூண்டு ஒரு நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டுக்கு உண்டு.
* பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் பூண்டு மாத்திரைகளைச் சாப்பிடலாம்

Monday, 15 October 2012

அப்பா


அப்பாவைப் பற்றி வயது ஏற ஏறப் பிள்ளைகளின் மதிப்பீடு:
நான்கு வயதில் :என் அப்பாவால் எதையும் செய்ய முடியும்.
எழு வயதில் ;என் அப்பாவுக்கு எல்லாம் தெரியும்.முழுக்கத்தெரியும்.
எட்டு வயதில் :என்னப்பாவுக்கு எல்லாமே முழுமையாக தெரிந்திருக்காது.
12 வயதில் :எல்லாவற்றையும் என் அப்பா தெரிந்திருக்க
அவசியமில்லை.
14 வயதில் ;அப்பாவா!அவர் பத்தாம் பசலி.
21 வயதில் :அந்த ஆள் இந்தக் காலத்துக்கு ஏற்றவர்அல்ல.அவரிடமிருந்த என்ன எதிர் பார்க்க முடியும்?
25 வயதில் ;அவருக்கு ஏதோகொஞ்சம் தெரியும்.அதிகமாக ஒன்றுமில்லை.
30 வயத்ல் :அப்பா இது பற்றி என்ன நினைக்கிறார் என்று பார்க்க வேண்டும்
35 வயதில் :அப்பாவின் கருத்தை அறிய கொஞ்சம் பொறுமை காட்ட
வேண்டும்.
50 வயதில் :அப்பா இது பற்றி என்ன எண்ணியிருப்பார்?
60 வயத்ல் :உண்மையிலே அப்பாவுக்கு எல்லாம் தெரிந்திருந்தது.
65 வயதில் :அப்பா இப்போது இருந்தால் அவரிடம் இது பற்றி ஒரு
யோசனை கேட்கலாம்.

நேற்று,இன்று,நாளை

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்
    3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
    4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத்   தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
    5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
    6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
    7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
    8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
    9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில்   வாழ்நாளே இழப்பு.
   10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
   11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
  12.  எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
   13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
   14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
   15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
    16.  யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்
   17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
   18.   பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்
   19.  நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
   20.  உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
   21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்
   22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத்  தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
   23.  தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்
   24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்
   25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்
  26.  அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்
   27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்
   28.  தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
   29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
   30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்
   31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்
   32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
   33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது
34.ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தையே மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்; ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை.–லியோ டால்ஸ்டாய்
`
35.மாற்றம் என்பது மானிடத் தத்துவம்,மாறாதிருக்க நான் வனவிலங்கல்லன்.– கண்ணதாசன்
`
36.தேனீக்கள் கொட்டும் என்று அஞ்சி கொண்டேயிருந்தால் என்றைக்கும் உங்கள் நாக்கால் தேனின் சுவையை உணரவே முடியாது.
`
37.எதற்கும் பிறரை சார்ந்திருக்க ஊனமுற்றவர்கள் கூட விரும்புவதில்லை.–சுகி செல்வம்
`
38.நேற்று,இன்று,நாளை ;
இன்றிருக்கும் நான் நேற்றிருந்த நான் – ஐ விட அறிவு,எண்ணம்,படிப்பு,செயல்,திறமை,பழக்கம்…. ஆகிய ஏதோ ஒன்றிலாவது சிறிதளவாவது முன்னேறி இருக்க வேண்டும்.நான் யாரோடும் போட்டியிடத் தேவையில்லை,நேற்றைய நானுடன் இன்றைய நான் போட்டியிட்டு முன்னேற வேண்டும்,நாளைய நான் இன்றைய நான் — ஐ விட ஒரு படியாவது முன்னேற வேண்டும்.

Friday, 5 October 2012

புவி அமைப்பின் சில உச்சங்கள்

மிக உயர்ந்த பகுதி                        எவரெஸ்ட் சிகரம், நேபாளம்
மிக தாழ்ந்த பகுதி                         சாக்கடல், ஜோர்டான்
மிகப் பெரிய கடல்                        தென் சீனக்கடல், பசிபிக் பெருங்கடல்
மிக நீளமான ஆறு                        நைல், ஆப்பிரிக்கா
மிக பெரிய பாலைவனம்                   சஹாரா, வட ஆப்பிரிக்கா
மிக வெப்பமான பகுதி                     தலோல், டானகில் டிப்ரெஷன், எத்தியோப்பியா (34.4 செல்ஷியஸ்) (வருட சராசரி)
மிக குளிரான பகுதி                       பிளோட்டோ ஸ்டேஷன், அண்டார்டிகா (-56.7 செல்ஷியஸ்) (வருட சராசரி)
மிக ஈரமான பகுதி                        மௌசின்ராம், மேகாலயா, இந்தியா (11,873 மி.மீ) (வருட சராசரி)
மிக உலர்ந்த பகுதி                        அட்டகாமா பாலைவனம், சிலி
மிகப்பெரிய கண்டம்                       ஆசியா
மிகப்பெரிய உப்பு நீர் ஏரி                  காஸ்பியன் கடல்
மிகப்பெரிய நன்னீர் ஏரி                           சுப்பீரியர் ஏரி, அமெரிக்கா – கனடா
மிகப்பெரிய நீர்வீழ்ச்சி                      ஏஞ்சல், வெனிசுவேலா
மிகப்பெரிய தீவு                                  கிரீன்லாந்து
மிகப்பெரிய தீவுக்கூட்டம்                   இந்தோனேஷியா
மிகப்பெரிய சமவெளி                      கங்கைச் சமவெளி
மிகப்பெரிய வனம்                         கோனிஃபெரஸ், வட ருஷ்யா
மிகப்பெரிய ஆலையம்                     அங்கோர்வாட், கம்போடியா
மிகப்பெரிய விமான நிலையம்        மன்னர் காலத் சர்வதேச விமான நிலையம், சௌதி அரேபியா
மிகப்பெரிய தேவாலயம்                    செயின்ட் பீட்டர்ஸ் பஸலிக்கா, வாடிகன்
மிகப்பெரிய இராணுவம்                           பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மி, சீனா

Tuesday, 25 September 2012

கிராம்பு

கிராம்பின்  குண‌ங்கள்

கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்த
ல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்கு வதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.

* உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

* ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

* கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

* நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

* சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

* கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

* கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

* 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

* தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

* கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

* கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

* சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.

My Blog List