Search This Blog

Thursday, 6 September 2012

இளநீர்

கோடையில் உடல் சூட்டைத் தனித்துக்கொள்வதற்கு உன்னத பானம் இளநீர் ஆகும். இளநீர் மனித குலத்திற்கு இயற்கை அளித்த மாபெரும் பரிசு. சுத்தமான, சவையான, சத்தான பானம் இது. இளநீரின் கலோரி அளவு 17.4/100 ஆகும்.

குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக்கள் இளநீரில் உள்ளன. இளநீரிலுள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் தேங்காய் முதிர்ச்சியடையும்போது சுக்ரோஸாக மாறிவிடுகிறது.

இளநீரில் பொட்டாஸியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேல் காணப்படுவது பொட்டாஸியம். இளநீரில் புரதச்சத்து குறைவாகவே உள்ளது. இருப்பினும் இப்புரதச் சத்தின் தரப் பாலில் உள்ள புரதச்சத்தை விட உயர்வானது.

இளநீர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்தாகும். உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரி செய்ய இளநீர் குடிப்பது நல்லது. வளர்ச்சியை அதிகரிக்கும்.

ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன. உடல் சூட்டை இளநீர் தணிக்கிறது. வேர்க்குரு, வேனற்கட்டி, அம்மை, தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புக்களைக் குணப்படுத்த இளநீரை உடம்பின் மீது பூசிக்கொள்ளலாம்.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானமாகும். ஊட்டச்சத்துக் குறைபாடுகளை சரி செய்கிறது. முதியர்களுக்கு இளநீர் சிறந்த டானிக் ஆகும்.

சிறுநீர்ப் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது. சிறுநீர்க் கற்களைக் கரைக்க உதவுகிறது. சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது

இளநீர் மிக சுத்தமானது. சிவப்பு இரத்த அணுக்களை அழிக்காது. இதனால்தான் இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. இளநீர் மருந்துகளை உடனடியாக உட்கிரகிக்க உதவுகிறது. இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருளை அகற்றவும் இளநீர் உதவுகிறது

Tuesday, 4 September 2012

சுரைக்காய்

 சுரைக்காயின் மருத்துவ குணங்கள்

மனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை.

நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்தி வந்தனர். அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்துகொள்வோம்.

சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள். அது வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும்.

சுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

உடல் சூடு நீங்க

இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால்தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது.

சிறுநீர் பெருக

மனித உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள இரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது. சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்து.

பித்தத்தைக் குறைக்க

உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது.

சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.

· சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
· உடலை வலுப்படுத்தும்.
· பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும்.
· இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
· குடல் புண்ணை ஆற்றும்.
· மலச்சிக்கலைப் போக்கும்
· மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.

சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.

சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.

சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொடுக்கலாம்.

ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்

Tuesday, 28 August 2012

மின் விளக்கு

அமெரிக்க பாடசாலை ஒன்றில் எட்டரை வயது சிறுவனை "இவன் அடி முட்டாள். பாடசாலையில் இருந்தால் மற்ற மாணவர்களையும் கெடுத்து விடுவான். இனி இவனுக்கு பாடசாலையில் அனுமதி இல்லை." என்று ஒர் கடிதம் எழுதி அந்த சிறுவனின் சட்டைப்பையில் வைத்து ஆசிரியர்களால் விரட்டப்பட்டவர்.

...
தாயார் கவலை கொண்டாலும், தைரியமாக வீட்டில் வைத்து பாடங்களை கற்று கொடுத்தார். தாயின் கல்வியிலே வளர்ந்த சிறுவன்.., பின்னாளில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.


இன்றும், அக்டோபர் 21ம் தேதி இரவு 9:59க்கு வீதி பயண விளக்குகளை தவிர, மிகுதி மின்சார விளக்குகள் அனைத்தையும் அணைத்து ஓரு நிமிடம்அமெரிக்காவை இருளாக்கி விட்டு, பின்னர் மீண்டும் ஒளிர விட்டு... தொலைக்காட்சி, வானொலியில் அறிவிப்பார்கள் இப்படி.., "எடிசன் பிறந்திருக்கா விட்டால் உலகம் இப்படி தான் இருளாக இருந்து இருக்கும்" என்று..!"


மேலே கூறிய அந்த முட்டாள் சிறுவன் தான் பின்னாளில் "விஞ்ஞானிகளின் தந்தை" என போற்றப்படும் "தாமஸ் அல்வா எடிசன்" ஆவார்.

இப்பொழுது சொல்லுங்கள்..! அந்த ஆசிரியர் கூறியது போல் எடிசன் முட்டாளா..? ஆகவே, யாரும் இங்கு முட்டாள் இல்லை.. நீங்களும் அடுத்தவர் அபிப்பிராயத்தில் வாழ்வதை விட்டு விடுங்கள். உங்களை நீங்களே நிர்ணயப்படுத்துங்கள். உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வைரம் இருக்கிறது. அதை பட்டை தீட்டுங்கள்......


நன்றி

Monday, 27 August 2012

முக்கனிகளில் ஒன்று பலா!





முக்கனியில் ஒன்று
இந்த பலா.

பெண்ணின் இதழை விட
சுவை இந்த பலா.

மூளைக்கும் ,உடலுக்கும்
பலம் சேர்க்கும் பலா .

ரத்தத்தை விருத்தி
செய்யும் இந்த பலா .

முள்ளாயிருந்தாலும்
சுவை தரும் பலா .

எதிர்ப்பு சக்தி தரும்
பழமாய் வலம் வரும்
இந்த பலா!

பழத்தில் பலா,
இது ஒரு நிலா.

நீர்க்கடுப்பு பிரச்சனை


[ பொதுவாக, சிறுநீரகம், சிறுநீர்ப்பை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால் நிறைய தண்ணிர், இளநீர், வாழைத்தண்டு, ஜூஸ், மோர், பார்லி மற்றும் ஜவ்வரிசி கஞ்சி போன்றவற்றைச் சாப்பிடுங்கள்.] சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் மற்றும் வலியுடன் அசௌகரியமான உணர்வு ஏற்படுவதுதான் நீர்கக்டுப்பு. சிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று அல்லது புண் இருப்பது, தண்ணிர் அதிகம் குடிக்காமல் இருப்பது.... போன்ற காரணங்களால் நீர்க்கடுப்பு ஏற்படலாம். இது பச்சிளம் குழந்தைகளில் இருந்து முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக் கூடிய பிரச்னைதான். நாம் உண்ணும் உணவை செரிப்பதற்கும், நம் உடலில் உள்ள கழிவுகளை அவ்வப்போது சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதற்கும் தண்ணிர் தேவை. போதுமான அளவு தண்ணிர் குடிக்கமால் இருக்கும்போது, சிறுநீராக பிரிந்து வரும் நீரின் அடர்த்தி அதிகமாகி நீர்க்கடுப்பு (Strangury) ஏற்படுகிறது. இதற்கு ஒரே தீர்வு நிறைய தண்ணிர் குடிப்பதுதான். சில சமயம் நீர்க்கடுப்பு, சர்க்கரை நோயின் வெளிப்பாடாகக்கூட இருக்கலாம். அதனால் நிறைய தண்ணிர் குடித்தும் நீர்க்கடுப்பு அடிக்கடி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
பொதுவாக சிறுநீர் வருகிற மாதிரி தோன்றியதுமே சிறுநீர் கழித்து விட வேண்டும். மணிக்கணக்கில் அளவுக்கு அதிகமாக அடக்கி வைக்கக் கூடாது. அப்படி அடக்கி வைப்பதால் சிறுநீர்ப்பை விரிவடைந்து அந்தப் பையில் கண்ணுக்குத் தெரியாத சின்னச் சின்ன விரிசல்கள் ஏற்பட்டு, அங்கிருக்கும் கிருமிகள் அந்த விரிசல்கள் மூலமாக ரத்தத்தில கலந்துவிடும் அபாயம் இருக்கிறது. எனவே, எப்போதும் சிறுநீரை அடக்கி வைக்கவே வைக்காதீர்கள். இதைத்தான் அந்தக் காலத்திலேயே பெரியவர்கள்''ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்காதே'' என்று சொன்னார்கள். சிலருக்கு நீர்க்கடுப்பு போலவே நீர் எரிச்சலும் இருக்கும். பொதுவாக அனைவருக்கும் சிறுநீர்ப்பாதை வழவழவென்று இருக்கும். உடலில் போதுமான நீர் இருக்கும்போது அந்தப் பாதையில் சிறுநீர் எளிதாக பயணித்து வெளியே வந்து விடும்.
ஆனால், தண்ணிர் அதிகம் குடிக்காமல் இருக்கும்போது சிறுநீரின் அடர்த்தி அதிகமாகி, அதிலுள்ள கழிவுகளும் படிமங்களும் அந்தப் பாதையை அரிப்பதுடன் அங்கேயே தங்கியும் விடும். இப்படி தங்கும் படிமங்களும் கழிவுகளும் கிருமிகள் அங்கே தாக்குவதற்கு வசதியாக அமைந்து விடுவதுடன் அங்கிருக்கும் நரம்புகளைத் தூண்டி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலை ஏற்படுத்தும். இதற்கு மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ளுதல் அவசியம்.
சிறுநீர் கழித்த பிறகு பிறப்புறுப்பை சரியாக சுத்தம் செய்யாவிட்டால், நுண்கிருமிகளால் தொற்று ஏற்பட்டு விடும். இதை சிறுநீர்த் தொற்று (யூரினரி இன்ஃபெக்ஷன்) என்பார்கள். எனவே எப்போது சிறுநீர் கழித்தாலும் நன்றாக சுத்தம் செய்வது நல்லது.திருமணமான தம்பதிகளுக்கு தாம்பத்திய உறவின் காரணமாக நீர்க்கடுப்பு ஏற்படலாம். பொதுவாக மலக்குடலில் இருந்து மலம் வெளியேறும் இடத்தில் எப்போதும் சில கிருமிகள் இருக்கும். தாம்பத்திய உறவின் போது, சிலருக்கு அந்தக் கிருமிகளில் சில சிறுநீர்ப் பாதைக்குள் சென்று விட வாய்ப்பு இருப்பதால், உறவு முடிந்ததும் பெண்கள் கண்டிப்பாக பிறப்புறுப்பை தண்ணிரால் சுத்தம் செய்வதோடு சிறுநீரும் கழிப்பது நல்லது.
சிலருக்கு பேசிக் கொண்டிருக்கும்போதோ அல்லது இருமும்போதோ தானாகவே சிறுநீர் வெளிவந்து விடும். சிறுநீர்ப்பையின் வாயை திறந்து மூடும் தசைகள் பலமிழந்து போவதால்தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. உடல் பருமன், பிறப்புறுப்பு இறங்குதல் உள்ளிட்ட சில காரணங்களால் இப்படி நேரலாம். சிறுநீர்ப் பையின் தசைகள் இயல்பு நிலைக்கு வருவதற்கான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலமும் சர்ஜரி மூலமும் இதை குணப்படுத்தி விடலாம்.
பொதுவாக, சுகப் பிரசவத்தைச் சந்திக்கும் பெண்களில் சிலருக்கும் இந்தப் பிரச்னை ஏற்படக் கூடும். குழந்தைப் பிறப்பின்போது விரிவடையும் சிறுநீர்ப்பையின் வாய்ப்பகுதி, மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பாததுதான் இதற்குக் காரணம். இவர்கள் பிரசவம் முடிந்ததும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி அடிவயிற்று தசைகளை பலப்படுத்துவது போன்ற சில பிரத்யேக உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் இதைச் சரிசெய்து விடலாம்.
பொதுவாக, சிறுநீரகம், சிறுநீர்ப்பை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால் நிறைய தண்ணிர், இளநீர், வாழைத்தண்டு, ஜூஸ், மோர், பார்லி மற்றும் ஜவ்வரிசி கஞ்சி போன்றவற்றைச் சாப்பிடுங்கள். இவையெல்லாம் அருமையான நம் பாட்டி வைத்தியமுறை சிறுநீர் பெருக்கிகள், பிறகு இதுபோன்ற எந்தப் பிரச்சினையும் உங்களை அண்டவே அண்டாது.''

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்


மூளை
  • 1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
    காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
    brain
    2. மிக அதிகமாகச் சாப்பிடுவது
    இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

    3. புகை பிடித்தல்
    மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

    4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
    நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

    5. மாசு நிறைந்த காற்று
    மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும்.

    6. தூக்கமின்மை
    நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

    7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
    தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

    8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
    உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

    9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
    மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

    10. பேசாமல் இருப்பது
    அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

    மனிதனின் குணம்

    Photo: இயன்றவன் சாதிக்கின்றான்...

இயலாதவன் போதிக்கின்றான்...


புரிந்தவன் சிந்திக்கின்றான்...

புரியாதவன் விவாதிக்கின்றான்...


முடிந்தவன் வெற்றியடைகின்றான்..

முடியாதவன் புலம்பி தவிக்கிறான்..


பாவி ஏமாற்றுகின்றான்..

அப்பாவி ஏமாறுகின்றான்..


அரக்க குணமுள்ளவன்

அநியாயம் செய்கின்றான்..


பாவம்...

இரக்க குணமுள்ளவன்

அனைத்தையும் சுமக்கின்றான்.






-மு.மன்சூர் அலி....இயன்றவன் சாதிக்கின்றான்...

    இயலாதவன் போதிக்கின்றான்...


    புரிந்தவன் சிந்திக்கின்றான்...

    புரியாதவன் விவாதிக்கின்றான்...


    முடிந்தவன் வெற்றியடைகின்றான்..

    முடியாதவன் புலம்பி தவிக்கிறான்..


    பாவி ஏமாற்றுகின்றான்..

    அப்பாவி ஏமாறுகின்றான்..


    அரக்க குணமுள்ளவன்

    அநியாயம் செய்கின்றான்..


    பாவம்...

    இரக்க குணமுள்ளவன்

    அனைத்தையும் சுமக்கின்றான்.

    My Blog List