Search This Blog

Wednesday, 28 September 2011

Smoking

ஹஜ் சில காட்சிகள்

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை, இறைவன் உதவியால் இனிதே நிறைவேற்றிவிட்டு மக்கள் தங்கள் தாயகம் திரும்பிக் கொண்டிருப்பார்கள். அதன் சில காட்சிகள் உங்களுக்காக.



ஹாஜிகளின் வசதிக்காக இந்த வருடம் முதல் தொடங்கப்பட்ட இரயில் போக்குவரத்து




அவசர சூழ்நிலைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்



உறவுகளைப் பிரிந்து இஹ்ராம் அணிந்த நிலையில் இறையில்லம் நோக்கி பயண‌மாகும் ஹாஜிகள்



ஹாஜிகளை வரவேற்க தயாரான மக்கா நகரம்



ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்திறங்கும் ஹாஜிகள்



ஹாஜிகளால் நிரம்பி வழியும் ஹரம் ஷரீஃப்



தவாஃப் செய்யும் ஹாஜிகள் (ஹஜ் சமயமாக இருப்பதால் கஃஅபாவின் திரை சற்று தூக்கி கட்டப்பட்டுள்ளது)



ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடும் ஹாஜிகள்



மகாமு இப்ராஹீம் (இப்ராஹீம் (அலை)அவர்கள் நின்ற இடம்)




நூர் மலையின் உச்சியிலிருந்து இரவு நேர மக்கமா நகரின் தோற்றம்




வயதானவர்களுக்காகவும் உடல் ஊனமுற்றோருக்காகவும் காத்திருக்கும் பிரத்யேக‌ பேருந்துகள்



ஸஃபா, மர்வாவுக்கிடையிலான தொங்கோட்டம்



பிரிக்கப்பட்டுள்ள பல பாதைகள் வழியாகவும் (எட்டாவது நாள்) மினாவுக்கு புறப்பட்டு செல்லும் ஹாஜிகள்



மினாவில் வந்து சேர்ந்துக் கொண்டிருக்கும் ஹாஜிகள்



மினாவில் தங்கி ஓய்வெடுக்கும் ஹாஜிகள்




ஒன்பதாவது நாள் (சூரிய உதய‌த்திற்கு பிறகு) சாரை சாரையாக அரஃபா திடல் நோக்கி செல்லும் ஹாஜிகள்



கூட்ட‌த்தில் தடைப்பட்டு நிற்கும் மக்களுக்கு உணவு, தண்ணீர் கொடுத்து உதவும் அணியினர்



அரஃபா மைதானத்தில் கூடியுள்ள மக்கள் வெள்ளத்தின் ஒரு பகுதியினர்



அரஃபாவில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் ஹாஜிகள்



அரஃபாவிலுள்ள நமீரா பள்ளி நிரம்பியதால் பள்ளிக்கு வெளியிலும் தொழும் ஹாஜிகள் கூட்டத்தின் ஒரு பகுதி



(அரஃபா திடலில்) சூரியன் அஸ்தமிக்கும் வரை தங்கள் இரட்சகனிடம் கையேந்தி நிற்கும் ஹாஜிகள்



அரஃபாவிலிருந்து புறப்பட்டு முஸ்தலிஃபா செல்லும் ஹாஜிகள் 





ஜம்ரத்களுக்கு கல் எறியும் ஹாஜிகள்




குர்பானி கொடுத்த பிறகு மொட்டைப் போடும் ஹாஜிகள்




நான்கு பக்கங்கள் கொண்ட ராட்சச கடிகாரமும் மினாரவின் மேல் பகுதியும்



மஸ்ஜிதுன் நபவியின் வெளிப்பகு

வெளிநாட்டு வாழ்க்கை

யாரைத்தான் விட்டது இந்த இக்கரைப்பச்சை . .
இந்த நாட்டுக்கு வந்தவனுக்கோ
அக்கரை பச்சை . . . !

மறக்காமல் மேற்கொள்ளும்
தொலைபேசி அழைப்பு . . .
சொந்த பந்தங்களின் பரிதவிப்பு . .
விசா இல்லையா என விசாரிப்பு . . .
எண்ணிக்கை முடிந்தாலும்
எம் எண்ணங்கள் முடிவதில்லை . . . !

அள்ளிப் பூசிக்கொண்ட
நறுமணம் வாசனை தூக்குகிறது . . .
இந்த வீணாய்ப் போன
வாழ்வின் ஏக்கம் தெரியாமல் . . . !

எமது உறக்கமோ இறக்கமோ
பந்தமோ பாசமோ
விற்கப்படுகிறது வெளிநாட்டுக்காரன்
கம்பனிக்கு . . .
மாத இறுதியில்
இந்த காசு கொண்டு மீட்க முடியாத
துக்கம் மட்டும் அப்படியே இருக்கிறது . . . !

எதிர் கால இலட்சியங்களை
4 மணி நேர விமானப் பயணத்தில்
தொலைத்து விட்டு . . .
கானல் நீர் என்று
தெரிந்த பின்பும்
நீச்சலடிக்க நினைக்கின்றோம் . . . !

வெள்ளிக்கிழமை தான்
நிறுத்துகிறது . . .
இயந்திரம்போல் மாறிவிட்ட
இந்த வெளிநாட்டு வாழ்வை
சனிக்கிழமை வந்து விட்டால் . . .
சனியனும் வருகிறது
எம் நிம்மதி தொலைக்க . . . !

வீட்டில் போதும் என்றளவுக்கு
உறக்கம் கொண்ட நாட்கள்
இந்த அலாரம்
மணியோசை கேட்கும் போது
அடி நெஞ்சில்
அனலாய் கொதிக்கிறது . . .

அன்பான அம்மா
உயிரான நண்பர்கள்
என் ஊரின் குட்டிச்சுவர்
என் கிரிக்கட் மைதானம் . . .
எல்லாமே ஓர் இரவுக்
கனவினில் வந்து
காணாமல் போகிறது . . .


இவைகளை நினைத்து பார்க்கும் போதெல்லாம்
குடும்பச்சுமை வீட்டுக்கஷ்டம் எல்லாமே வந்து . . .
எம் கண்களை நனைத்து விடுகிறது . . .

பிறந்ததில் இருந்தே
ஒன்றாய் வளர்ந்த நண்பனின் திருமணத்தில்
மாப்பிள்ளைக்கு டை கட்டுதல் . . .
கூடி நின்று கிண்டலடித்து
செமையாய் வாங்கிக் கொண்ட
சம்பவங்கள் . . .
கல்யான சப்ளை நேரத்து பரபரப்பு . . .
பெண்வீட்டில் மரியாதை
குறைவு என்று
வீண் பிடிவாதம் . . .
பெண் கூட்டம் தூர இருந்து
எமக்கு கொடுக்கும் ஓரப்பார்வை . . .
நான் தான் ஹீரோ என்று
என்னும் அந்த
காதல் பருவம் . . .
ஒளிந்து ஒளிந்து ஜன்னல்வலியே
நாம் கண்ட மணமகள் மினாரா . . . !

இவையெல்லாம் கிடைக்காமல்
சம்பிரதாய அழைப்புக்காக
சங்கடத்தோடு . . .
தொலைபேசி வாழ்த்தினூடே
தொலைந்துவிடுகிறது
எம் அயல் தேசத்தில் எம் வாழ்வு . . . !

கோடி கோடியாய்
சம்பாதிதாலும்
நாங்களெல்லாம் இந்த
அயல் நாட்டு அடிமைகள் . . .
தொலைபேசியிலும் ஈ மெயிலிலும்
வருகின்ற
நண்பர்களின் உறவுகளின்
மரணச்செய்திகளுக்கு . . .
இந்த அராபிக்கடல் மட்டுமே ஆறுதல் . . .

உயிரைத்தாண்டி பழகியவர்களெல்லாம் . . .
ஒரு துளி கண்ணீரில்
கரைந்து விடுகிறார்களே . . .
இந்த பாலாய்ப்போன
வெளிநாட்டு
வாழ்க்கயில் . . . !

இங்கு வருவதட்காக
இழந்ததையும்
வந்ததனால் பெற்றதையும்
கூட்டிக் கழித்துப்
பார்த்தால் . . .
எஞ்சுவது
இழப்பு மட்டும் தான் . . . !

கிள்ளாச்சொல்லி
தொலைபேசியில்
குழந்தை அழும் சத்தம் கேட்கிறோம் . .
உள்ளுக்குள்ளே நாம்
அழும் சத்தம்
யாருக்காவது கேட்கிறதா ?

விடுமுறையில் ஊருக்கு வரும் போது
வளர்ந்து விட்ட சின்னஞ்சிறுசுகள் . . .
மாறிப்போன கலாச்சாரம் . . .
நெருங்கியவர்களின் மறைவு
புதிய முகங்களின் பிறப்பு . . .
எனது ஊரை எனக்கே
புரிந்து கொள்ளமுடியாத சூல் நிலை . . .
இப்படி
எல்லா மாற்றங்களையும் கண்டு . . .

மீண்டும் வெளிநாடே வேண்டாம்
என அடம்பிடிக்கும் மனதிடம்
கடனும் கஷ்டமும் வந்து
ஆறுதல் சொல்லி
மீண்டும் அனுப்பி விடுகிறது . . .
இந்த வெளிநாட்டுக்கு . . .

Sunday, 25 September 2011

நீ இந்த உலகை விட்டுப் பிரிந்து செல்வது உறுதி

இந்த உலகம் நமது முக்கிய குறிக்கோள் அல்ல!

இவ்வுலகில் எவ்வளவுதான் ஆடம்பரமாக வாழ்ந்தாலும் – எவர் உதவியும் உனக்குத் தேவையில்லாமல் இருந்தாலும் என்றோ ஒருநாள் நீ இந்த உலகை விட்டுப் பிரிந்து செல்வது மட்டும் உறுதி.

உலகத்தை அனுபவித்தாய். உன்னை படைத்தவனை நினைக்கவில்லையே! அவனுக்காக உன்சிரம் பணியவில்லையே! அவன் பள்ளி நோக்கி உன் கால்கள் செல்லவில்லையே! அவனைப் பயந்து உன் விழிகள் அழவில்லையே! அவன் பாதையில் உன் பணத்தை செலவு செய்யவில்லையே! நீ உனக்காகவே உலகில் அழாதபோது, உனக்காகப் பிறர் அழுவார்கள் என்று நினைக்கின்றாயா? உனக்கென நீ இறைவனிடம் பிரார்த்திக்காதபோது பிறர் உனக்காக பிரார்த்திப்பார்கள் என்று எண்ணுகின்றாயா?

உன்னை எல்லோரும் முஸ்லிம் என்கின்றார்கள்தானே! ஆனால் உண்மையில் அல்லாஹ்விடத்தில் நீ முஸ்லிம்தானா? தொழாதவன் காஃபிர் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்களே! அப்படியானால் நீயும்....?!
Kaba

(அல்லாஹ்வை ) நம்பியோருக்கு அவர்களின் இதயங்கள் அவனை அஞ்சிப் பயந்து நினைவு கூர்ந்திட இன்னும் நேரம் வரவில்லையா? தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்ட எனது அடியார்களே!..நீங்கள் அல்லாஹ்வின் அருளை (மன்னிப்பை) விட்டும் நிராசையாகி விடவேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்போனும், கிருபையுள்ளாவனுமாவான். (குர்ஆன் – அல்ஹதீத்: 53)

Saturday, 24 September 2011

வாழ்க்கை சிறக்க `ஐந்து’ விஷயங்கள்!!!


நம்பிக்கை
கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். தங்களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண்டும். அதை செயல்படுத்திக் காட்டும் வாய்ப்பினை ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். வருங்காலத்தில் என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்று பயம் கொள்வதை விட, நிகழ்கால வாழ்க்கையை வெற்றி கரமாக நடத்திக் காட்டுவது தான் புத்திசாலித்தனம். முதுமை என்பது எல்லோருக்கும் வருவது தான். அதற்காக நாற்பது வயதை நாம் தாண்டி விட்டோம். உடல் சோர்வு தெரிகிறது. 50 வயதிற்கு பின் முட்டுவலி தெரிகிறது. 60 வயதிற்கு பின் தோல் சுருங்கி போய்விடுமே என்றெல்லாம் பயந்து கொண்டிருக்கக் கூடாது. எந்த வயதிலும் மனதை இளமையாக வைத்துக் கொள்ள முடியும் என்று சந்தோஷபடுங்கள்.
பாதுகாப்பு
ஆண்களை விட பெண்களுக்குத் தான் அதிக பாதுகாப்பு தேவைபடுகிறது. திருமண வயதையடையும் வரை பெண்களுக்கு பெற்றோரால் பாதுகாப்பு தரப்படுகிறது. பெண்கள் தங்கள் தாயைக் காட்டிலும் தந்தையே அதிக பாதுகாப்பு தருவதாக எண்ணுகின்றனர். திருமணத்திற்கு பின் பாதுகாப்பிற்காக கணவனை நம்பி வாழ்கின்றனர். இந்த விஷயத்தில் முரண்பாடு நிகழும்போது தான் ஈகோ போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன. விட்டுக் கொடுக்கும் மனபான்மை இல்லாததுதான் இதற்கு காரணம். பெண், ஆணை விட தான் தான் மேலானவள் என்றும், ஆண் பெண்ணை விட தானே எல்லா விதத்திலும் மேலானவன் என்றும் எண்ணுகின்றனர். இருவரும் அவரவர் தனித்தன்மைகளில் மேலானவர் தான்.
மரியாதை
ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் கணவருடைய பெருமை, மரியாதை, கவுரவம் என்று அனைத்து விஷயங்களிலும் தனக்கும் பங்கு உண்டு என்பதைக் காட்ட வேண்டும். அதில் தான் பெண்ணுக்கு மரியாதை உள்ளது. அதேபோல், மனைவியின் உணர்வு களுக்கு மதிப்பளித்து அவளுடன் இணைந்து ஒற்றுமை குலை யாமல் குடும்பத்தை பராமரிப்பதில் தான் கணவனுக்கு மரியாதை உள்ளது. இயல்புக்கு மீறிய நடத்தைகளில் ஈடுபடும்போது அவர் களது மரியாதைக்கு பங்கம் வந்து விடுகிறது.
அன்பு
வாழ்க்கை பாதையை சீரமைக்கும் ஒரு கருவி தான் அன்பு. வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும் வல்லமை அன்பிடம் மட்டுமே உள்ளது. இந்த உன்னதமான உணர்வுகள் தான் நம் வாழ்வையே அர்த்தமுள்ளதாக மாற்றக்கூடியவை. அன்பால் மலரும் உணர்வுகளே குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் என்பதை இருவரும் உணர வேண்டும். அன்பை வெளிபடுத்தவே திருமணம் நம்மை இணைத்துள்ளது என்று எண்ண வேண்டும். மனிதர் கள் உணர்வுகளுக்குக் கட்டுபட்டவர்கள். அதனால் பல நேரங்களில் தவறு செய்யக் கூடும். ஆனால், அத்தகைய தவறுகள் அன்பினால் சீரமைக்கபட வேண்டும். `என்னை நல்லபடியாக வைத்துக் கொள்ளும் அன்பு உன்னிடம் இருந்து நிச்சயம் கிடைக்கும்` என்ற எண்ணம் தம்பதிகள் இருவரிடம் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும்.
நேர்மை
நல்ல விஷயங்களின் அடிப்படையில் உருவாக்கபடும் கூட்டுத் தொகுப்பே குடும்பம். நமக்கு நேர்மை அவசியம். “என் சிந்தனை உள்பட எனது ஒவ்வொரு வார்த்தையும், செயலும் உண்மை. அதை உன்னோடு பகிர்ந்து கொள்வேன். என் நோக்கம், இயல் பான முறையில் நீண்ட நாள் உறவை பேணுவது தான்” என்று இருவரும் எண்ண வேண்டும். நேர்மை இல்லாத குடும்பம் தண்ட வாளத்தில் ஓடாத ரெயில் போன்றது. நேர்மை தான் குடும்பத்தின் முதுகெலும்பு

விழிப்புணர்வுள்ள இறைநம்பிக்கையாளர்

    முஸ்லிமிடம் இஸ்லாம் விரும்பும் முதல் பண்பு அவர் அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப ஈமான் கொண்டு, அவனுடன் உறுதியான உறவைக் கொண்டிருத்தலாகும். அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து, அவனை சதாவும் நினைவு கூர்ந்து காரணங்களைக் கையாள்வதுடன், அல்லாஹ்விடம் உதவியும் தேடவேண்டும். அவன் எவ்வளவுதான் உழைத்தாலும் தனது உள்ளத்தின் ஆழத்தில் அல்லாஹ்வின் உதவி, உபகாரத்தின்பால் அனைத்து நிலையிலும் தேவையாகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
    உண்மை முஸ்லிமின் இதயம் விழித்திருக்கும். அவரது அறிவுக்கண் திறந்திருக்கும். உலகில் அல்லாஹ்வின் படைப்பினங்களிலுள்ள நுட்பங்களின்பால் அவர் தனது சிந்தனையைச் செலுத்துவார். இதனால் மறைந்திருக்கும் மகத்தான அல்லாஹ்வின் உதவிதான்  இப்பிரபஞ்ச இயக்கத்தையும், மனிதர்களின் அனைத்து பிரச்சனைகளையும் எளிதாக்குகிறது என்று உறுதி கொள்வார். இதனால்தான் அல்லாஹ்வை எல்லா நிலையிலும் நினைவுகூற வேண்டியவராக இருக்கிறார். அவர் அல்லாஹ்வின் மகத்தான ஆற்றலை வாழ்வின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் உணர்கிறார். இது அவரது ஈமானைப் பலப்படுத்துகிறது, அவன் மீதே நம்பிக்கை கொள்ள காரணமாக அமைகிறது.
    வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
    இத்தகையோர் (தங்கள்) நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருப்பதைச் சிந்தித்து எங்கள் இறைவனே! நீ இவற்றை வீணுக்காகப் படைத்துவிடவில்லை. நீ மிகத் தூயவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக… (அல்குர்அன் 3:190,191)

இரட்சகனின் கட்டளைக்கு அடிபணிவார்

    உண்மை முஸ்லிம் தனது அனைத்து சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டு, அவனைப் பணிந்து அஞ்சி நடக்கிறார். தனது விருப்பத்திற்கு மாறாக இருப்பினும் அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து, எந்நிலையிலும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறமாட்டார். மேலும் அவரது விருப்பத்திற்கு மாற்றமாக இருப்பினும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையே ஏற்பார். அல்லாஹ், அவனது தூதரின் வழிகாட்டுதலிலுள்ள சிறிய, பெரிய ஒவ்வொரு விஷயத்தையும் எந்தவித பாகுபாடுமின்றி பின்பற்றுவார்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் கொண்டு வந்ததற்கேற்ப தனது மனோ இச்சையை மாற்றிக் கொள்ளாதவரை உங்களில் ஒருவரும் விசுவாசியாக மாட்டார்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
     ஆனால் உம் இறைவன் மீதும் சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் எற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக அங்கீகரித்து நீர் செய்யும் தீர்ப்பைத் தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி அங்கீகரித்து முற்றிலும் வழிப்படாத வரையில் அவர்கள் உண்மை விசுவாசிகளாக மாட்டார்கள். (அல்குர்அன் 4:65)
     ஈமான் என்பது அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் கட்டளைகளை முழுமையாக எற்று பூரணமாக அடிபணிவதாகும். இந்த இரண்டுமின்றி ஈமானும் இல்லை, இஸ்லாமும் இல்லை. உண்மை முஸ்லிமின் வாழ்வில் அல்லாஹ்வின் நேர்வழியைப் புறக்கணிப்பதும், அவனது தூதருக்கு மாறு செய்வதும் இருக்க முடியாது. இது தனி முஸ்லிமிடமும், அவருக்குக் கட்டுப்பட்ட அவரது குடும்பத்தினர் வாழ்விலும் காணப்படும் சிறப்புத் தன்மையாகும்.

My Blog List