Search This Blog

Thursday 16 August 2012

கொத்தமல்லி

கொத்தமல்லி அல்லது மல்லி எனப்படுவது ஒரு மூலிகையும், கறிக்குப் பயன்படும் ஒரு சுவைப்பொருளும் ஆகும். இது  தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. சிறு செடி வகையைச் சார்ந்தது. இச்செடி 50 செமீ உயரம் வளரக் கூடியது. 

பயன்கள்

அதன் விதைகள், விதைப்பொடி மற்றும் உலர்ந்த இலைகள்
கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. . . சாம்பார், இரசம் போன்ற தமிழர் சமையலில் இதன் விதைகள் பயன்படுகின்றன.கொத்தமல்லி விதையை தனியா என்றும் அழைக்கின்றனர். கொத்தமல்லி இலையை பச்சடியாக, பொடியாக அல்லது கீரையாக ஆக்குவர்.

மருத்துவ குணங்கள்

  • உடலை சமநிலைப்படுத்தும்.
  • வாத, பித்த, கபத்தின் நிலைகளை சீர்ப்படுத்தும்
  • வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் போன்ற வயிற்று கோளாறுகளுக்கு, மருந்தாகப் பயன்படும்.
  • சீரண (செரிமான) சக்தியை அதிகரிக்க
  • புளித்த ஏப்பம் நீங்கும்
  • கண்கள் பலப்படும் - மல்லி விதையை நீரில் இட்டு கொதிக்க வைத்து ஆறியபின் அந்த நீரில் கண்களை கழுவி வந்தால் கண்கள் புத்துணர்வு பெறும்.
  • பித்தத் தலைவலி நீங்கும் - பித்தத் தலைவலி உள்ளவர்கள் சந்தனத்துடன் மல்லியை அரைத்து பற்றுபோட்டால் பித்தம் தணிந்து தலைவலி குணமாகும்.
  • மூக்கடைப்பு குணமாகும் - சளிப் பிடித்திருந்தாலும் சிலருக்கு தலைவலி உண்டாகும். இவர்கள் மல்லி விதையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் கபால சூலைநீர் நீங்கி தலைவலி, மூக்கடைப்பு குணமாகும்.
  • தலைச்சுற்றல் நீங்கும். - கொத்தமல்லி விதை, சந்தனம், நெல்லி வற்றல் இவற்றை நீரில் நன்றாக ஊறவைத்து வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலைச்சுற்றல், கிறுகிறுப்பு குறையும்.
  • பித்தம் குறையும் - சுக்கு, மல்லி இவற்றை சம அளவு எடுத்து இடித்து வைத்துக் கொண்டு, ஒரு குவளைத் தண்ணீரில் 1 தேக்கரண்டி பொடியைப் போட்டு கசாயம் போல் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து மாலை வேளையில் அருந்தி வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.
  • நாள்பட்ட புண்கள் ஆறும். மல்லி விதையை நன்றாக நீர்விட்டு அரைத்து நாள்பட்ட புண்கள் மீது பற்றுப் போட்டால் புண்கள் விரைவில் ஆறும்.

No comments:

Post a Comment

My Blog List