பயன்பாடுகள்
இந்த "கறிவேப்பிலை" சமைக்கும் கறிகளில், குறிப்பாக தமிழரின் உணவு
வகைகளில் பயன்படுத்தப்படுகின்றது. தமிழரின் பாரம்பரிய உணவு வகைகளான கறி,
இரசம் போன்றவற்றிலும், வடை, முறுக்கு போன்ற திண்பண்டங்களிலும் தொன்றுதொட்டே
பயன்படுத்தப்பட்டு வருகின்றது.உணவு வகைகளில் போடப்பட்டிருக்கும் கறிவேப்பிலையை, உண்ணும் போது சிலர் எடுத்து வெளியில் போட்டுவிட்டே உண்பர். அநேகமானோர் இதனை சமைக்கும் உணவு பதார்த்தங்களில் போடப்படும் ஒரு கறிச்சுவையூட்டியாக அல்லது வாசனைப் பொருளாக மட்டுமே கருதி விடுகின்றனர். ஆனால் கறிவேப்பிலை வாசனைப் பொருளாக மட்டுமன்றி, சமைக்கும் உணவு வகைகளில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் பல மருத்துவ நலன்களையும் அடிப்படையாக கொண்டதாகும். கறிவேப்பிலை ஒரு சிறந்த நோய் எதிர்ப்புக் காரணியுமாகும்.
மருத்துவ குணங்கள்
சுவையின்மை, பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல். ஆகியவை நீங்க கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து உட்கொண்டால் கண்பார்வையில் தெளிவு. நரையற்ற உரோமம் ஆகியவற்றைப் பெற முடியும். நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 கறிவேப்பிலை என மென்று சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலையை மென்று சாப்பிட வேண்டும். தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும். இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப்பிலை உதவும். அதுமட்டுமல்ல நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சேர்த்துக் கொண்டால் நரை முடி நீங்கப் பெறுவர்.
No comments:
Post a Comment