Search This Blog

Tuesday, 30 September 2014

முத்து உருவாவது எப்படி?

சிப்பிக்குள் தோன்றும் கெட்டியான பொருளே முத்து எனப்படுகிறது.கடலில் காணப்படும் முத்துச் சிப்பியினுள் சிறிய திண்மப் பொருளொன்று புகுந்து கொண்டால் உயிருள்ள அந்தச் சிப்பி தன் புறத்தோல் அடுக்காகியஎபிதீலியம் என்னும் படலத்தால் அதை நன்கு பொதிகின்றது. நாளடைவில் அச்சிப்பியில் சுரக்கும் திரவம் மெல்லிய அடுக்குகளாக அதன் மீது படிந்து முத்தாக மாறுகிறது.முத்தில் காணப்படும் பிரதான மூலகங்களாவன ஆர்கனைட்டு, காண்கியோலின், நீர் என்பனவாகும். முத்து உருவாகும் போது மெல்லிய அடுக்குகள் பொதியப்படுவதினால் அது ஒளியை உட்பிரவேசிக்கவும் பிரதிபலிக்கவும் ஏற்ற தன்மையுடையதாகக் காணப்படுகின்றது. இதனால் சாதாரண முத்துக்கள் கூட பார்ப்பதற்கு மிகவும் ஒளிர்வுடையதாகத் தோன்றுகின்றன. கறுப்பு நிறமான முத்துக்களும் மிக அருமையாகக் காணப்படுகின்றன. இவ்வகையான முத்துக்களுக்குத் தேவை அதிகம்.

கடலுக்குள் ஓடுகள் பெற்றுள்ள உயிரினங்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. இவற்றில் ஒன்றுதான் முத்துசிப்பி. சிப்பிகளிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. 2.5 செ.மீ., முதல் ஒரு மீட்டர் வரை வளரக்கூடியவை. சிப்பிகளின் ஓடு இரு பகுதிகளானது.வளர்ப்பு முறைகள்நன்னீர் முத்துக்கள் வளர்ப்பு என்பது 6 நிலைகளில், முறையாக செய்யப்படுகிறது. அவையாவன; சிப்பிகள் சேகரிப்பது, வளர்ப்புக்கு முன் முறைப்படுத்துதல், அறுவை சிகிச்சை, வளர்ப்புக்கு பின் முறைப்படுத்துதல், குளத்தில் வளர்ப்பு, முத்துக்களை அறுவடை செய்தல்

முத்துக்களின் வகைகள்

முத்துக்கள் நன்னீரில் உருவானவையா, கடல் நீரில் உருவானவையா, அவற்றை உருவாக்கிய முத்துச்சிப்பி வகை, உருவான பிரதேசம் என்பவற்றைப் பொறுத்து முத்துக்களின் இயல்புகள் வேறுபடுகின்றன. முத்துக்களில் பின்வரும் வகைகள் உள்ளன:அக்கோயா முத்து,தென்கடல் முத்து,தகித்தியன் முத்து,நன்னீர் முத்துசிலவகைகள் அரிதாகவே கிடைக்கின்றன இதனால் அவற்றின் மதிப்பும் அதிகம்.


முத்துக்களும் தரமும்

சிப்பியிலிருந்து முத்தை பிரித்தல்முட்டை வடிவிலான முத்துக்கள் பொதுவாகத் தென்பட்டாலும் உருண்டையான தோற்றமுடைய முத்துக்களுக்கே (Pearls) மதிப்பு அதிகம். தூசி, மிதமிஞ்சிய வெப்பம், ஈரலிப்புத்தன்மை போன்றவற்றினால் முத்து பழுதுறும் வாய்ப்பு ஏற்படலாம்.


இயற்கை முத்துகள்
அவிகுலிடி சிப்பிகளிலும் யூனியனி என்னும் மட்டிகளிலும் உற்பத்தியாகும் முத்துக்கள் இயற்கை முத்துக்கள் ஆகும்.

செயற்கை முத்துகள்
சிப்பியின் உட்புறம் முத்துப்போல் அழகான மெல்லிய பொருள் ஒன்றினால் மூடியிருக்கும். இதை நேக்கர் என்பர். அந்த நேக்கரினால் உருவாக்கிய மணியை உயிருள்ள முத்துச் சிப்பியின் திசுவிற்கும் சிப்பிக்குமிடையே கவனமாக திணிப்பார்கள். அவ்வாறு திணிக்கப்பட்ட சிப்பிகளை கூண்டு ஒன்றினுள் வைத்து நீரில் பாதுகாப்பாக அமிழ்த்திவிடுவார்கள். நாளடைவில் மணிகள் பொதிக்கப்பட்டு முத்துக்கள் உருவாகும். தோற்றத்தில் பெரிய முத்துக்கள் பெறுவதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.இவ்வாறு பெறப்படும் முத்துக்கள் செயற்கை முத்துக்கள் எனப்படும். இந்த அரிய முறையை ஜப்பானியர் ஒருவர் 1804 ஆம் ஆண்டு கண்டு பிடித்தார்.

முத்துக்களின் தரத்தை எக்ஸ்-கதிர் எண்டாஸ் கோப் என்னும் கருவியின் மூலம் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடலாம்.சில வகை மீன்களின் செதில்களைக் கொண்டு முத்துச்சாறு (Pearlessence) உற்பத்தி செய்யப்படுகின்றது. அதை ஊன் பசையுடன் கலந்து கண்ணாடி மணிகள் மீது அவற்றைப் பூசி முத்துக்கள் தயாரிக்கின்றனர்.

 முத்துக்களின் நிறை அதிகமாகக் காணப்படுவதற்காக சில தொழில்நுட்ப யுக்திகளும் பயன்படுத் தப்படுகின்றன.

i)  சிப்பிகள், குளங்கள் ஆறுகளிலுள்ள நன்னீரிலிருந்து சேகரிக்கப்படுகின்றன. நேரடியாக மனிதர்களே இவற்றை சேகரித்து, தண்ணீர் உள்ள வாலி, பெரிய பாத்திரங்களில் வைக்கப்படுகின்றன. முத்து வளர்ப்பதற்கு சிப்பியின் சரியான அளவு, 8 செ.மீட்டருக்கு மேல் இருக்கு வேண்டும்.

ii) சேகரிக்கப்பட்ட சிப்பிகள், 2-3 நாட்களுக்கு ஒரே இடத்தில் சற்று கூட்டமாக, குழாய் தண்ணீரையும் சேர்த்து இருப்பு செய்யப்படுகிறது. இவ்வாரு செய்தல், சிப்பிகளின் சில தசைகளை வலுவிழக்கச் செய்யும். இதனால் அறுவை சிகிச்சை செய்வது எளிதாக இருக்கும்

.iii)  எந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்கிறோம் என்பதை பொருத்து, தசைகளில் வெளிபொருளை உள்ளிருப்பு செய்வது மூன்று விதமாக செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்யும்போது தேவைப்படும் பொருட்களாவன- உள்ளிருப்பு செய்யப்படும் மணிகள் அல்லது உட்கருவாகும்.மான்டில் காவிட்டிக்குள் உள்ளிருப்பு செய்தல்- இம்முறையில் வட்டமான (4-6 மி.மீ.சுற்றளவு) அல்லது அலங்கரிக்கப்பட்ட மணிகள் மான்டில் காவிட்டிகுள் நிலை நிறுத்தப்படுகின்றன. மான்டில் காவிட்டியில் உள்ளிருப்பு செய்தல், சிப்பியின் இரண்டு பகுதிகளிலும் செய்யலாம். அலங்கரிக்கப்பட்ட மணிகளை உள்ளிருப்பு செய்யும்போது மணிகளிலுள்ள அலங்காரம் செய்துள்ள பகுதி ஓட்டை பார்த்து இருக்க வேண்டும். மணிகளை தகுந்த இடத்தில் வைத்த பிறகு, சிப்பியை மூட வேண்டும்.மான்டில் திசுக்களுக்குள் உள்ளிருப்பு செய்தல்: இதில் சிப்பிகளை இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. அதாவது கொடுப்பவை, வாங்குபவை. இம்முறையில் சிறிய மான்டில் திசுக்கள் தயார் செய்யப்படுகின்றன. கொடுக்கும் சிப்பிகளிலிருந்து ஒரு ரிப்பன் வடிவ மான்டில் திசுக்களை எடுத்து, இதனை 2.மி.மீட்டர் அளவில் சிறு துண்டுகளாக வெட்டி பிரிக்கப்படுகிறது. வாங்கும் சிப்பிகளில், இவை உள்ளிருப்பு செய்யப்படுகிறது. இது இரண்டு வகைப்படும். அதாவது, உட்கருவுடன், உட்கரு இல்லாமல். உட்கரு இல்லாத முறையில், மான்டில் திசுக்கள் மட்டும் சிப்பிகளின் உள்ளே வைக்கப்படுகின்றன். . உட்கரு உள்ள முறையில், மான்டில் திசுக்களுடன் உட்கருவும் சிப்பிகளின் உள்ளே வைக்கப்படுகின்றன்.இனப்பெருக்க உடல் உறுப்புகளுக்குள் உள்ளிருப்பு செய்தல்:இம்முறையில் மேலே கூறப்பட்ட வகையில், திசுக்களுடன் உட்கருவும் சிப்பியின் இனப்பெருக்க உறுப்பில் வைக்கப்படுகின்றன.

iv) உள்ளிருப்பு செய்யப்பட்ட சிப்பிகளை நைலான் பைகளில் பத்து நாட்கள் வைத்து, எதிர் உயிர் மருந்துகள் அளித்து, இயற்கையான உணவுகளைக் கொடுத்து கவனமாக பராமரிக்க வேண்டும். இவை தினமும் பார்க்கப்பட்டு, செத்த சிப்பிகள் மற்றும் உட்கருவை நிகராகரித்த சிப்பிகள் வெளியில் எடுக்கப்படுகின்றன.

இயற்கை முத்துக்களும், செயற்கையாக வளர்க்கப்படும் முத்துக்களும் உயிரினங்களால் உருவாக்கப்படுபவை. இதனால் தொழிற்சாலைகளில் உருவாகும் பொருட்களைப்போல் ஒரே சீரான இயல்புகளைக் கொண்டிராது. கிடைக்கும் முத்துக்களின் சில இயல்புகள் விரும்பத்தக்கவை. சில விரும்பத்தகாதவை. ஒவ்வொரு முத்தும் இத்தகைய பல்வேறு விரும்பத்தக்க, விரும்பத்தகாத இயல்புகளின் கலவையாகவே காணப்படுகின்றன. இக் கூட்டு இயல்புகளைப் பொறுத்தே முத்தின் தரம் தீர்மானிக்கப்படுகின்றது. முத்துக்களின் தரம் பின்வரும் இயல்புகளில் தங்கியுள்ளது.வகைநேக்கரின் (nacre) தடிப்புஒளிர்வுத் தன்மை (luster)மேற்பரப்பின் தன்மைவடிவம்நிறம்அளவு


நேக்கரின் தடிப்பு


சிப்பியின் உட்புறம் முத்துப்போல் காணப்படும் அழகான மெல்லிய பொருள் நேக்கர் ஆகும். எனவே நேக்கரின் நிறம், ஒளிர்வு என்பனவே முத்தின் இயல்புகளாகவும் வெளிப்படுகின்றன. நேக்கரின் தடிப்பு அதிகரிக்கும்போது முத்தின் மதிப்பும் கூடுகின்றது.

ஒளிர்வுத் தன்மை

ஒளிர்வுத் தன்மை என்பது முத்தின் ஒளிர்வினதும் அதன் ஒளிதெறிக்கும் தன்மையினதும் அளவீடு ஆகும். நல்ல ஒளிர்வும், முகம் தெரியக்கூடிய அளவு பளபளப்பும் கொண்டது முதல் மங்கலான சொரசொரப்பானது வரையான தன்மைகளைக் கொண்ட முத்துக்கள் உள்ளன. கூடிய ஒளிர்வும், பளபளப்பும் கொண்ட முத்துக்கள் தரம் கூடியவை

Sunday, 21 September 2014

பாசிப் பயறின் பயன்கள்

பாசிப்பயறில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளன. புரதம், கார்போஹைட்ரேட்டுடன், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.
கர்ப்ப காலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயறைக் கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்குச் சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளரிளம் பருவத்தினருக்கும் பாசிப்பயறு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வயிற்றுக் கோளாறு இருப்பவர்கள் பாசிப்பயறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம். சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயறு ஊற வைத்த தண்ணீரை அருந்தக் கொடுக்கலாம். அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப் பயறு சிறந்த மருந்துப் பொருளாக விளங்குகிறது.
மணத்தக்காளி கீரையோடு பாசிப்பயறையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசனவாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.
பாசிப்பயறை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பயறை வல்லாரைக் கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Sunday, 31 August 2014

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!

நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதி யை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய் தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது?
நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது.
உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன. நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம்.
தலைவலி : நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’ என்று கூறி தப்பி த்து கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம். அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால், அசிடிட்டியால் துன்பப்படுகிறோம்.
மருந்தில்லாமல் தலைவலியை எப்படி போக்குவது?
நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு புள்ளி கள், நம் உள்ளங்கைகளில் உள்ளன. படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக் கும். கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கை யின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம் கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே இழுக் கவும், தளர்த்தும் போது மூச்சை வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால், மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம் கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு!


அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் : ஒவ்வொரு விரல் நுனி யிலும், சைனஸ் புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் இவை வெகுவாக குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14 முறை களும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும் இருமுறைகள் காலையிலும், மாலையிலும் செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகு வாக குறைகிறது.
மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி, வாயுத்தொல்லை, மூச்சுப் பிடிப்பு: ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் நெருக் கமாக சேர்க்கும் போது, புறங்கையில் ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும் இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசி யில் எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி உதவுகிறது.இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். (Press & Release) தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும் போது வலி தெரியும். இரு கைகளிலும் அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு, “ஆன்டாசிட்’ மருந்து தேவையில்லை. இப்புள்ளி யில் அழுத்தம் கொடுக்கும் போது, அதிகமான வாயு வெளியே றுகிறது. மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு, இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.
மலச்சிக்கல் : மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டா க்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24 என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும் உதவுகிறது. LI4 என்ற புள்ளியை இரு கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளி யில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம்.
கழுத்து வலி : கணினியில் வேலை செய்வதால், கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி கழுத்தை குறிக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள இருபுள்ளி களிலும், மற்றொரு கையின் இரு விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும், எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும். இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது, கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது.
உயர் ரத்த அழுத்தம் : உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வாழ் நாள் முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அக்குப்பிரஷர் முறையில் கீழ்க்கண்ட புள்ளிகளில் தினமும் அழுத்தம் கொடுக்கும் போது, சிறிது, சிறிதாக மாத்திரையின் அளவை குறைத்து, கடைசியில் முழுவதுமாக நிறுத்தவும் முடியும். நம் கையில் சிறுவிரலின் நகத்திற்கு கீழே உட்புறமாக H9 என்ற புள்ளி உள்ளது. இது, இதய மெரிடியனின் காற்று சக்தி ப்புள்ளி. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, காற்று சக்தி அதிகரித்து, ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, ரத்த அழுத்தம் குறைகிறது.தலை உச்சியில் GV20 என்ற புள்ளி உள்ளது. காது களிலுருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும், மூக்கிலிருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும் சந்திக்கும் இடத்தில் இப்புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, டென்ஷன், மன அழுத்தம் இவை குறைவதால், ரத்த அழுத் தம் சீராகிறது.H9 , GV20 இப்புள்ளிகளில், 14 முறைகள் காலை யிலும், மாலையிலும் இருவேளைகள் அழுத்தம் கொடுத்து வந்தால், உயர்ரத்த அழுத்தம் சீரடைகிறது.இதை தவிர காலில், பெருவிரல், இரண்டாவது விரல் இவற்றின் இடை வெளியி லிருந்து, மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 7 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, ரத்த அழுத்தம் சீராகிறது. இப்புள்ளியில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே, 7 முறைகள் மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிக முறைகள் அழுத்தம் கொடுத்தால், ரத்த அழுத்தம் அதிக ளவில் குறைய வாய்ப்புள்ளது.

Wednesday, 6 August 2014

இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்!


சிறுநீரகக் கல்...

இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்!





இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்.

Saturday, 26 July 2014

இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள்

அழகுற வளர்த்திட்டு
அன்பையும் பண்பையும்
பாங்குற கற்பித்த அன்னையரே
ஈத் முபாரக்!

குடும்பம் செழித்திட

மெழுகாய் பனியாய்
உருகி உழைத்த தந்தையரே
ஈத் முபாரக்!

குலம் செழிக்க வளம் பெருக்க
வந்துதித்த கண்மணிகாள் என்றென்றும்
வளத்துடனும் நலத்துடனும்
வாழ்வாங்கு வாழ்க!
செல்வங்களே உங்களுக்கு என்னினிய
ஈத் முபாரக்!

தம்பிக்கு கொடுங்க
எனக்கு போதுமென
தள்ளி நின்று பூரித்து நிற்கும்
அண்ணன்மாரே
ஈத் முபாரக்!

கண்கள் கலங்கி
தவித்த வேளை
பரிவுடன் முந்தானைகொண்டு
துடைத்துவிட்ட அக்காமாரே
ஈத் முபாரக்!
அவளுக்கு மட்டும்
அதிகம் எதுக்கு
அதையும் எனக்கே எப்பவும் கொடுங்க
அடம் பிடிக்கும் தங்கையரே
ஈத் முபாரக்!

தக்பீர் முழங்கும்
சப்தத்துடனே
சங்கையாய் வந்து இன்முகத்துடன்
வாழ்த்து சொல்லும் மாமாமாரே
ஈத் முபாரக்!

பாசத்துடனே பரிவு காட்டி
கதை பல சொல்லி
பாங்குற ஊட்டி உணவை அளித்த பாட்டிமாரே
ஈத் முபாரக்!

எம் கூச்சல் கேட்டு எரிச்சலை விட்டு
ஏசாதிருந்து ஏற்புடன் நடந்து
ஏற்றம் புரிய
துணை நின்ற தாத்தாமாரே
ஈத் முபாரக்!

கல்விக்கண் திறக்க
பாங்காய் கற்பித்து
படிப்பைத்தந்த ஆசிரியரே
ஈத் முபாரக்!

உதவிட்ட தோழர்களே

ஒன்றுபோல் தோள் தந்து

வலையுலக நட்புக்களே

இந்நன்னாளில் நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க எல்லோருக்கும் நல்லமனதை நம் இறைவன் தந்தருள்வானாக.. ஆமீன்.

அனைவருக்கும்

இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள்..

Sunday, 15 June 2014

வல்லாரை

இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து 'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.
மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. 
  • இரத்த சுத்திகரிப்பு வேலையைச் செவ்வனே செய்யும்.
  • உடல்புண்களை ஆற்றும், வல்லமைக் கொண்டது.
  • தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது.
  • மனித ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது.
  • இதனைக் கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.
  • சளி குறைய உதவுகிறது.

ஹிட்லர்

சுமார் 3.5 கோடி மக்களுக்கு மரணத்தை விளைவித்தவர்,மிகப் பெருமளவு

எண்ணிக்கையிலான மக்களின் வாழ்க்கையில் கடும் பாதிப்பை ஹிட்லர் ஏற்படுத்தினார் என்ற உண்மையை யாரும் மறுக்க இயலாது.



ஆஸ்திரியாவிலுள்ள பிரானாவ் என்ற நகரில் 1889 ஆம் ஆண்டில் அடால்ஃப் ஹிட்லர் பிறந்தார். இளமையில் ஓர் ஓவியராக முயன்று தோல்வி கண்டார். இந்த இளமைப் பருவத்தில் தான் எப்போதோ இவர் ஒரு தீவிர ஜெர்மன் தேசியவாதியாக மாறினார். முதல் உலகப் போரின்போது இவர் ஜெர்மன் இராணுவத்தில் பணியாற்றி காயமடைந்து, இருமுறை வீரச் செயலுக்கான விருதுகளைப் பெற்றார்.

முதல் உலகப் போரில் ஜெர்மனி தோற்றது கண்டு ஹிட்லர் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார். 1819 ஆம் ஆண்டில், தமது 30 ஆம் வயதில், முனீக்கில் ஒரு குட்டி வலதுசாரிக் கட்சியில் சேர்ந்தார். இக்கட்சி தனது பெயரை விரைவிலேயே "தேசியச் சமதரும் ஜெர்மன் தொழிலாளர் கட்சி" (National Socialist German Worker's Party) என்று மாற்றிக் கொண்டது. இக்கட்சியைச் சுருக்கமாக "நாஜிக் கட்சி" என்று அழைத்தனர். இரண்டு ஆண்டுகளில் ஹிட்லர் இக்கட்சியின் எதிர்ப்பில்லாத தலைவர் (Fuehrer) ஆனார்.

ஹிட்லரின் தலைமையில் நாஜிக் கட்சி மிக விரைவாக வலுவடைந்தது. 1923 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இக்கட்சி அரசைக் கவிழ்க்க முயன்றது. இந்த முயற்சியை "முநீனக் பீர் மண்டபப் புரட்சி" (Munich Beer Hall Putsch) என்று அழைப்பர். ஆனால், இப்புரட்சி தோல்வியடைந்தது. ஹிட்லர் கைது செய்யப்பட்டு, அரசுத் துரோகக் குற்றத்திற்காக விசாரணை செய்யப்பட்டு, தண்டிக்கப் பட்டார். எனினும், ஓராண்டுச் சிறைத் தண்டனை அனுபவித்த பிறகு ஹிட்லர் விடுதலையானார்.

1928 ஆம் ஆண்டில் நாஜிக் கட்சி இன்னும் ஒரு சிறிய கட்சியாகவே இருந்தது. அப்போது ஏற்பட்ட பெரும் பொருளாதார மந்தம் (Great Depression) ஜெர்மனியிலிருந்து அரசியல் கட்சிகளிடம் மக்கள் வெறுப்புக் கொள்ளச் செய்தது. அதே சமயம் நாஜிக் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்குப் படிப்படியாக வளர்ந்தது. 1933 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ஹிட்லர் தமது 44 வது வயதில் ஜெர்மனியில் தலைமை அமைச்சர் (Chancellor) ஆனார்.

ஹிட்லர் தலைமை அமைச்சரான பிறகு, அரசு எந்திரத்தை பயன்படுத்தி எதிர்காட்சிகள் அனைத்தையும் ஒழித்துகூ கட்டிவிட்டு, விரைவிலேயே ஒரு சர்வாதிகாரத்தை ஏற்படுத்தினார். குடியியல் உரிமைகளுக்கு, தற்காப்பு உரிமைகளும் படிப்படியாகப் பறிக்கப்பட்டு இந்த சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டதாகக் கருதிவிடலாகாது. குடியியல் உரிமைகள் பறிக்கப்படுவது மிகத் துரிதமாக நடைபெற்றது. விசாரணைகள் நடத்துவது குறித்து நாஜிகள் கவலைப் படவே இல்லை. பெரும்பாலான அரசியல் எதிர்ப்பாளர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர். அல்லது படுகொலை செய்யப்பட்டனர். அப்படியிருந்தும் இரண்டாம் உலகப் போருக்கு முந்திய ஆண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஓரளவுக்குக் குறைத்தார். பொருளாதார மீட்சிக்கும் ஓரளவு வழி வகுத்தார். இதனால், பெரும்பாலான ஜெர்மானியர்கள் ஹிட்லருக்கு ஆதரவளித்தனர்.


ஹிட்லர் இதன் பின்பு இரண்டாம் உலகப் போருக்குக் காரணமாக இருந்த படையெடுப்புகளில் இறங்கினார். சில நிலப்பகுதிகள் போரிடாமலே அவருக்குக் கிடைத்தன. இங்கிலாந்தும், ஃபிரான்சும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தன. அவை யாருடனும் போரிடும் மனப்போக்கில் இல்லை. வர்சேல்ஸ் உடன்படிக்கையை மீறி ஹிட்லர் ஜெர்மன் இராணுவத்தைப் பெருக்கியபோதும், அவருடைய படைகள் ரைன்லாந்தைக் கைப்பற்றி (1936 மார்ச்) அதை வலுப்படுத்தியபோதுமூ, ஆஸ்திரியாவை அவர் வல்லந்தமாகத் தன் வசப்படுத்திக் கொண்டபோதும் (1938 மார்ச்) இங்கிலாந்துமூ, ஃபிரான்சும் அதைக் கண்டு கொள்ளாமலிந்தன. அரண்காப்பு செய்யப்பட்ட செக்கோஸ்லாவாக்கியாவின் எல்லைப் பகுதியாகிய சூடட்டன்லாந்தை ஹிட்லர் இணைத்துக் கொண்ட போது கூட (1938 செப்டம்பர்) இந்த நாடுகள் அந்த இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஹிட்லருடன் சமரசம் செய்து கொள்வதற்காக பிரிட்டனும், ஃபிரான்சும் "முனீக் ஒப்பந்தம்" என்ற பன்னாட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. இந்த உடன்படிக்கையின்படி, சூடட்டன்லாந்தை ஹிட்லர் கைப்பற்றிக் கொண்டதை இவ்விருநாடுகள் ஏற்றுக் கொண்டன. செக்கோல்லா வாக்கிய செயலற்று நின்றது. இந்த உடன்படிக்கை கையெழுத்தான சில மாதங்களுக்குப் பிறகு செக்கோஸ்லாவாக்கியாவின் மற்ற பகுதி முழுவதையும் ஹிட்லர் கைப்பற்றிக் கொண்டார். ஒவ்வொரு கட்டத்திலும் ஹிட்லர் மிகத் தந்திரமான வாதங்களைக் கூறினார். தம்முடைய நடவடிக்கைகளுக்குத் தடங்கல் விளைவிப்பவர்களுடன் போரிடப் போவதாக மிரட்டினார். ஒவ்வொரு கட்டத்திலுமூ அவருடைய மிரட்டல்களுக்கு மேலைநாட்டு மக்களாட்சிகள் கோழைத்தனமாக அடிபணிந்தன.

எனினும் போலந்து நாடு ஹிட்லரின் அடுத்தத் தாக்குதலுக்கு இலக்கானபோது, இங்கிலாந்தும், ஃபிரான்சும் போலந்தைப் பாதுகாக்க உறுதி பூண்டன. ஹிட்லர் முதலில் ரஷியச் சர்வாதிகாரி ஸ்டாலினுடன் ஓர் "ஆக்கிரமிப்பு தவிர்ப்பு" ஒப்பந்தம் செய்து கொண்டார். (உண்மையில் இது ஓர் ஆக்கிரமிப்புக் கூட்டணி ஒப்பந்தமேயாகும். இந்த ஒப்பந்தப்படி, போலந்து நாட்டைத் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ள இரு சசர்வாதிகாரிகளும் இரகசிய உடன்பாடு செய்து கொண்டனர்) இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஹிட்லர் முதலில் தமக்கு தற்காப்புத் தேடிக் கொண்டார். இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட ஒன்பது நாட்களுக்குப் பிறகு 

போலந்தை ஹிட்லர் தாக்கினார்.
அதற்கு 16 நாட்களுக்குப் பின்பு சோவியத் ரஷியாவும் போலந்து மீது படையெடுத்தது- ஜெர்மனி மீது இங்கிலாந்துமூ, ஃபிரான்சும் போர்ப் பிரகடனம் செய்த போதிலும், போலந்து விரைவிலேயே தோற்கடிக்கப்பட்டது.

ஹிட்லருக்குப் பெருதூத வெற்றிகள் கிடைத்து 1940 ஆம் ஆண்டில் ஆகும். அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஹிட்லரின் இராணுவம் டென்மார்க்கையும், நார்வேயையும் விழுங்கியது. மே மாதத்தில், ஹாலந்து, பெல்ஜியம், வக்சம்பர்க் ஆகிய நாடுகள் அதன் வசமாயின. ஜூன் மாதத்தில் ஃபிரான்ஸ் சமரசம் செய்து கொண்டு சரணடைந்தது- அதே ஆண்டின் பிற்பகுதியில் பிரிட்டன் மீது ஜெர்மனி தொடர்ச்சியான விமானத் தாக்குதல்களைத் தொகுத்தது. "பிரிட்டன் சண்டை" (Battle of Britain) எனப் பெயர் பெற்ற இந்தப் போரைப் பிரிட்டன் அஞ்சா நெஞ்சுடன் எதிர்த்துபூ சமாளித்தது. அதன் பின் இங்கிலாந்து மீது ஒரு பெரும் படையெடுப்பைத் தொடுக்க ஹிட்லர் இயலாமலே போயிற்று.

1941 ஆம் ஆண்டு ஏப்ரல மாதத்தில் கிரீசையும் யூகோஸ்லாவியாவையும்ஹிட்லரின் படைகள் வெற்றி கொண்டன. ரஷியாவுடன் செய்து கொண்ட "ஆக்கிரமிப்பு தவிர்ப்பு " ஒப்பந்தத்தை ஹிட்லர் கிழித்தெறிந்து விட்டு ரஷியாவையும் தாக்கினார். சோவியத் ரஷியாவின் பெருமளவுப் பகுதியை ஹிட்லரின் இராணுவம் கைப்பற்றியது. ஆனால், குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னர் ரஷியப் படைகளை முற்றிலுமாகத் தோற்கடிக்க ஹிட்லரின் இராணுவத்தால் முடியவில்லை. ஹிட்லர் இப்போது இங்கிலாந்து, ரஷியா ஆகிய இரு நாடுகளுடன் ஒரே சமயத்தில் போர் புரிந்து கொண்டே 1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவுக்குச் சொந்தமான "முத்துத் துறைமுகம்" (Peart Harbour) என்னும் கடற்படைத் தளத்தை ஜப்பானியர் தாக்கிய சில நாட்களுக்குப் பிறகு அமெரிக்க மீது போர்ப் பிரகடனம் செய்தார்.

1942 ஆம் ஆண்டு மத்தியில், உலக வரலாற்றில் எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமயத்திலும் ஆதிக்கம் செலுத்தியிராத மிகப் பெருமளவு ஐரோப்பியப் பகுதி ஜெர்மனியின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. இது தவிர வட ஆஃப்ரிக்கா முழுவதிலுமூ அது ஆட்சி செலுத்தியது. 1942 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், எகிப்தில் நடந்த எல் அலமைன் போரிலும், ரஷியாவில் ஸ்டாலின் கிராடுப் போரிலும் ஜெர்மனி தோல்வியடைந்தது. —4ர்மனிக்கு ஏற்பட்ட தோல்விகள், உலகப் போரில் ஒரு திருப்பு முனையாக அமைந்தன. இத்தோல்விகளுக்குப் பிறகு ஜெர்மன் இராணுவத்தின் வெற்றி வாய்ப்புக்கள் படிப்படியாகச் சரியலாயின. ஜெர்மனியின் இறுதித் தோல்வி உறுதியாயிற்று. எனினும், ஹிட்லர் சரணடையத் தயாராக இல்லை. ஸ்டாலின்கிராடுத் தோல்விக்குப் பறிகு ஜெர்மன் படைகளுக்குப் பயங்கரமான சேதங்கள் ஏற்பட்ட போதிலும், மேலும் ஈராண்டுகள் ஜெர்மனி தொடர்நத் சண்டையை நீடித்தது. 1945 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் கசப்பான முடிவு ஏற்பட்டது. ஏப்ரல் 30 ஆம் தேதியன்று பெர்லினின் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு ஏழு நாட்களுக்குப் பிறகு, ஜெர்மனி சரணடைந்தது.
ஹிட்லர் அதிகாரத்திலிருந்த ஆண்டுகளில் வரலாறு கண்டிராத கொடிய இனப்படுகொலைக் கொள்கையைக் கையாண்டார். அவர் கொடூரமான இனவெறியராக இருந்தார். முகூகியமாக, யூதர்களிடம் தீவிரமான பகையுணர்வுடன் நடந்து கொண்டார். உலகிலுள்ள யூதர் ஒவ்வொருவரையும் கொல்வதே தமது குறிக்கோள் என்று பகிரங்கமாக அறிவித்தார். அவரது ஆட்சியின்போது, பெரிய நச்சுவாயு அறைகளைக் கொண்ட ஏராளமான படுகொலை முகாம்களை நாஜிகள் ஏற்படுத்தினர். ஹிட்லர் கைப்பற்றிய நாடுகளிலிருந்து கூட ஏராளமான ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பிடித்து, இந்த நச்சுவாயு அறைகளில் அடைத்துக் கொள்வதற்காக மாட்டு உந்துகளில் அனுப்பி வைத்தனர். சில ஆண்டுகளிலேயே இந்த முறையில் 60,00,000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

ஹிட்லர் பலி வாங்கியது யூதர்களை மட்டுமன்று, அவரது ஆட்சிக் காலத்தின்போது கண்க்கற்ற ரஷியர்களும், நாடோடிகளும்கூடப் படுகொலை செய்யப் பட்டனர். இவர்கள் தவிர தாழ்ந்த இனத்தவர் என்றோ, அரசுக்கு எதிரிகள் என்றோ கருதப்பட்ட ஏராளமானோரும் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலைகள் வெறும் ஆத்திர உணர்ச்சியாலோ, போரில் ஏற்பட்ட மனக் குமுறலினாலோ செய்யப்பட்டவை என எண்ணிவிடலாகாது. ஹிட்லரின் மரணமுகாம்கள் பெரிய வாணிக நிறுவனங்களைப் போன்று, கவனமாகத் திட்டமிட்டு அமைக்கப்பட்டன. கொலை செய்யப்படுபவர்களின் விவரங்கள் பதிவேடுகளில் குறித்து வைக்கப்பட்டன. ஒவ்வொரு முகாம்களிலும் இத்தனை பேர் கொல்லப்பட வேண்டும் என்று இலக்குகள் நிருணயிக்கப்பட்டன. கொலையுண்டவர்களின் உடல்கள் சோதனையிடப்பட்டு அவற்றின் தங்கப்பற்களும், திருமண மோதிரங்களும் கொள்ளையிடப்பட்டன. பலியானவர்களில் பலருடைய உடல்கள் சோப்பு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன. இந்தப் படுகொலைத் திட்டத்தைச் செயற்படுத்துவதில் ஹிட்லர் எத்துணை தீவிரம் காட்டினார் என்பதற்கு ஒரு சான்று கூறலாம். போரின் இறுதி நாட்களில் ஜெர்மனியில் உள்நாட்டுப் பயன்பாட்டுக்கும், இராணுவத்தின் பயன் பாட்டுக்கும் எரிபொருள் பற்றாக்குறையாக இருந்தபோதிலும், மரண முகாம்களுக்கு ஆட்களை மாட்டு உந்துகளில் கொண்டு செல்வது தடங்கலின்றி நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று ஹிட்லர் ஆணையிட்டிருந்தார். 

பல காரணங்களுக்காக, ஹிட்லரின் புகழ் நீடிக்கும் எனத் தோன்றுகிறது. முதலாவதாக, உலக வரலாற்றிலே மிகக் கொடிய மனிதராக ஹிட்லர் கருதப்படுகிறார். ஹிட்லரின் கொடுஞ்செயல்களுடன் ஒப்பிடும்போது, ரோமப் பேரரசன் நீரோ, ரலிகுலா போன்ற கொடியவர்களின் கொடுமை மிக அற்பமானதேயாகும். எனினும், அவர்கள் கொடுமையல் சின்னங்களாக 20 நூற்றாண்டுகளாக நினைவு கூறப்படுகிறார்கள். அப்படியானால், உலக வரலாற்றில் மகாக் கொடியவனாக ஒருமனதாக் கருதப்படும் ஹிட்லர் மேலும் பலப்பல நூற்றாண்டுகள்வரை பெயர் பெற்றிருப்பார் என்று ஊகிக்கலாம். உலகின் மிகப் பெரிய போராகிய இரண்டாம் உலகப் போர் மூள்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் என்ற முறையிலும் ஹிட்லரின் பெயர் நிலை பெற்றிருக்கும். இன்று அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பட்டு வருவதால் எதிர்காலத்தில் இரண்டாம் உலகப் போரைப் போன்ற பேரளவுப் போர்கள் மூள்வதற்குப் பெரும்பாலும் வாய்ப்பில்லை. எனவே, இப்போதிருந்து ஈராயிரம் அல்லது மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னருங்கூட உலக வரலாற்றில் மிகப் பெரிய நிகழ்ச்சியாக இரண்டாம் உலகப் போர்தான் கருதப்படும்.


ஹிட்லரின் வரலாறு முழுவதுமே நம்பமுடியாததாகவும், சுவையானதாகவும் அமைந்திருக்கிறது. இந்தக் காரணத்தினாலும், ஹிட்லரின் புகழ் நீடிக்கும். ஹிட்லர் ஓர் அயல்நாட்டினர் (அவர் பிறந்தது ஆஸ்திரியாவில், ஜெர்மனியில் அன்று). அவருக்கு அரசியல் அனுபவமோ, பணபலமோ, அரசியல் தொடர்புகளோ இருக்கவில்லை. அப்படியிருந்தும், பதினான்கே ஆண்டுகளுக்குள் அவர் ஒரு பெரிய உலக வல்லரசின் தலைவராக ஆனார் என்றால் அது உண்மையிலேயே வியப்பளிக்கிறது. ஹிட்லர் வியக்கத் தக்க நாவன்மை பெற்றிருந்தார். உலக வரலாற்றிலே மிகச் சிறந்த நாவன்மை வாய்ந்தவராக ஹிட்லரைக் கருதலாம். அந்த நாவன்மையின் துணையால்தான் அவர் தம் வழியில் மக்களைச் செயல்படத் தூண்டினார். இறுதியாக அதிகாரத்தைப் பிடித்ததுமூ அந்த கதிகாரத்தை அவர் கொடூரமான வழிகளுக்குப் பயன்படுத்தினார். இதனை அத்துணை விரைவில் மறந்துவிட முடியாது.

உலக வரலாற்றில் ஹிட்லரைப் போல் தமது சொந்தத் தலைமுறையினர் மீது பெரும்பாதிப்பை ஏற்படுத்தியவர் வேறு எவரும் இல்லை. அவரது தூண்டுதலினால் ஏற்பட்ட உலகப் போரிலும் நாஜி மரண முகாம்களிலும் கோடிக்கணக்கான மக்கள் பலியானது ஒருபுறமிருக்க, போரின் விளைவாக பலகோடி மக்கள் வீடிழந்தார்கள் அல்லது அவர்களது வாழ்க்கை சீர் குலைந்து போயிற்று.

ஹிட்லரின் செல்வாக்கு பற்றிய எந்த ஒரு மதிப்பீடும் வேறு இரு அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவதாக, ஹிட்லருடைய தலைமையின் கீழ் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அவர் தோன்றியிராதிருந்தால், நிகழ்ந்திருக்கவே செய்யாது. (இந்த வகையில், சார்லஸ் டார்வின், சைமன் பொலீவார் ஆகியோரிடமிருந்து அவர் முற்றிலும் வேறுபடுகிறார்) ஜெர்மனியிலும், ஐரோப்பாவிலும் நிலவிய நிலைமை ஹிட்லருக்கு சாதகமாக அமைந்தது என்பது உண்மைதான். எடுத்துக்காட்டாக, அவரது இராணுவ வெறியூட்டும் முழுக்கங்களும், யூதர் எதிர்ப்பு உரைகளும் கேட்போரைப் பிணித்தன. எனினும், ஹிட்லர் செயற்படுத்திய தீவிரமான கொள்கைகளைத் தங்கள் அரசு பின்பற்றியிருக்க வேண்டுமென 1920களிலோ, 1930களிலோ பெரும்பாலான ஜெர்மானியர்கள் விரும்பினார்கள் என்று கருதுவதற்கு ஆதாரம் ஏதுமில்லை. ஹிட்லர் செய்ததை மற்ற ஜெர்மன் தலைவர்களும் செய்திருப்பார்கள் என்று கருதுவதற்கும் இடமில்லை. ஹிட்லர் காலத்து நிகழ்ச்சிகளை, புற நோக்கர்கள் எவரும் ஏறத்தாழக்கூட ஊகித்துக் கூறியதில்லை.


இரண்டாவதாக நாசி இயக்கம் முழுவதிலுமே தனியொரு மனிதரே ஆதிக்கம் செலுத்தினார். பொதுவுடைமையின் எழுச்சியில் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரும் வேறு பல தலைவர்களும் பெரும் பங்கு கொண்டார்கள். ஆனால், ஹிட்லருக்கு முன்பும், அவருக்குப் பின்பும் நாஜி சமதருமத்தற்குத் தனிச் சிறப்பு வாய்ந்த தலைவர் எவரும் கிடைக்கவில்லை. ஹிட்லர்தான் நாஜிகளை அதிகார பீடத்தில் ஏற்றி வைத்தார். நாஜிகள் ஆட்சியில் நீடித்த காலம் முழுவதிலும் தலைமைப் பதவியைத் தாமே வைத்துக் கொண்டிருந்தார். ஹிட்லர் இறந்ததும், அவருடைய நாஜிக் கட்சியும் அது தலைமை ஏற்றிருந்த அரசும் மாண்டு மடிந்தன.

ஆனால், ஹிட்லருடைய செல்வாக்கு அவரது தலைமுறையின் மீது மிகப் பெருமளவில் விளைவுகளை ஏற்படுத்தியிருந்த போதிலும், எதிர்காலத்தின் போது அவரது செயல்களின் விளைவுகள் மிகக் குறைவாகவே இருக்கும் எனத் தோன்றுகிறது. ஹிட்லர் தமது குறிக்கோள்களில் ஒன்றைக் கூட அடையாமல் படுதோல்வியடைந்தார். பிந்திய தலைமுறையினர் மீது அவரது செயல்களின் விளைவு ஏதேனும் இருக்குமானால், அது அவர் கருதியதற்கு நேர்மாறானதாகவே இருக்கும் எனலாம். ஜெர்மனியின் ஆதிக்கத்தையும் நிலப்பரப்பையும் விரிவுப்படுத்த ஹிட்லர் விரும்பினார். அவர் பெருமளவு நிலப்பகுதிகளை வெற்றி கண்ட போதிலும், அந்த வெற்றிகள் அனைத்தையும் அற்ப ஆயுளில் முடிந்தன. இன்று கிழக்கு ஜெர்மனியும், மேற்கு ஜெர்மனியும் ஒருங்கிணைந்தால் கூட, ஹிட்லர் ஆட்சியைப் பிடித்தபோது ஜெர்மன் குடியரசில் அடங்கியிருந்த நிலப்பரப்பைவிடக் குறைவான நிலப்பகுதியே அடங்கியிருக்கும். உலகிலிருந்து யூதர்களை அடியோடு அழித்து விட வேண்டும் என்று ஹிட்லர் வெறிகொண்டு அலைந்தார். ஆயினும் அவர் பதவி ஏற்ற பின்பு 15 ஆண்டுகளிலேயே 2,000 ஆண்டுகளில் இல்லாத வகையில், முதன் முதலாகச் சுதந்திரமான யூத நாடு அமைந்தது. பொதுவுடைமையையும், ரஷியாவையும் ஹிட்லர் கடுமையாக வெறுத்தார். எனினும், அவர் இறந்தபோது ஓரளவுக்கு அவர் தொடங்கிய உலகப் போரின் விளைவாக, கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதி மீது ரஷியர்கள் தங்கள் கட்டுப்பாட்டை விரிவுப்படுத்தினார்கள். உலகெங்கும் பொதுவுடமையின் செல்வாக்கு பெருமளவுக்குப் பெருகிறது. ஹிட்லர் மக்களாட்சியை இழிவாகக் கருதினார். ஜெர்மனியில் மட்டுமின்றி, மற்ற நாடுகளிலும் மக்களாட்சியை அடியோடு ஒழித்துவிட எண்ணினார். ஆனால், இன்று மேற்கு ஜெர்மனியில் மக்களாட்சி சிறப்பாக செயற்பட்டு வருகிறது. ஹிட்லர் காலத்துத் தலைமுறையைச் சார்ந்த ஜெர்மானியர்களைவிட இன்றைய ஜெர்மானியர்கள் சர்வாதிகார ஆட்சியைக் கடுமையாக வெறுக்கிறார்கள்.

ஹிட்லர் தாம் வாழ்ந்த காலத்தில் அளவற்ற செல்வாக்கினைச் செலுத்தியதாலும், வருங்காலத் தலைமுறையின் மீது அவருக்கு எவ்வித செல்வாக்கும் இல்லாமற் போனதாலும் ஏற்பட்ட விசித்திரமான கூட்டிணைவின் காரணமாக விளைந்ததென்ன? ஹிட்லர் தம் காலத்தில் மிகப்பெரிய செல்வாக்கைக் கொண்டிருந்தார். அதற்காக, இந்தப் பட்டியலில் அவருக்கு உயர்ந்த இடம் அளிக்கப்பட வேண்டும். ஆனால், ஷி-ஹூவாங்-தை, அகஸ்டஸ் சீசர், ஜெங்கிஸ்கான் போன்றோரின் செல்வாக்கு அவர்களுக்குப் பின் பல நூற்றாண்டுகள் நீடித்தமையால், ஹிட்லருக்கு நிச்சயமாக அவர்களுக்கு பின்னரே இடமளிக்க வேண்டும். ஹிட்லருக்கு நெருக்கமானவர்களாக நெப்போலியனையும், மகா அலெக்சாந்தரையும் கூறலாம். ஒரு குறுகிய காலத்தில் இவ்விருவரையும் விட மிகப் பெருமளவில் ஹிட்லர் உலக அமைதியைச் சீர்குலைத்தார். அந்த இருவரின் செல்வாக்கு நீண்டகாலம் நீடித்ததன் காரணமாக, அவர்களுக்குச் சற்றுப் பின்னால் ஹிட்லருக்கு இடமளிக்கப்பட்டிருக்கிறது.

   


இவை ஒரு புறமிருக்க, நல்ல முறையில், உலகத்திற்கு ஹிட்லரின் பங்களிப்பு ஏதேனும் உள்ளதா? 1921லிருந்து கீழே சரிந்த ஜெர்மனியின் பொருளாதாரம் 1933வரையில் சரிந்தே இருந்ததாகவும், பிரெசிடெண்ட் ஹிண்டென்பர்க் வேண்டா வெறுப்பாக ஹிட்லரரிடம் பதவியை கொடுத்தப் பிறகே வேகமாக முன்னேறியதாகவும் தெரிகிறது. வேலை இல்லாத் திண்டாட்டம் பல விழுக்காடுகள் முன்னேற்றம் அடைந்ததாகவும், ஜெர்மனியின் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. செல்லாக் காசாகிவிட்ட டட்ச் மார்க் செல்லும் காசானது ஹிடலர் ஆட்சியில் தான். வெர்செயில்ஸ் உடன்பாட்டை (முதலாம் உலகப் போர் முடிவில் ஜெர்மனிக்கு விதிக்கப்பட்ட கப்பல் கட்டுமாண வரையரைகள் அடங்கியது) கிழித்தெரிந்துவிட்டு போர் கப்பல்களையும் யூ போட்களையும் கட்டிதள்ளினார். லுஃப்ட்வாஃபே போர் விமானங்கள் பல மடங்கு பெருக்கப்பட்டது. இவரது ஆரம்பக் கால உள் நாட்டு வெற்றிகள் பலருக்கு கடுப்பை கிளப்பியது. அப்பொழுது தான் அமேரிககாவும் பிற மேலை நாடுகளும் க்ரேட் டிப்ரஷனில் வறுக்கப்பட்டு வத்தலாகி கொண்டிருந்தார்கள். ஹிட்லரின் வித்தைகள் புரியாமல் குழம்பினார்கள். அவருடைய போர் ஆயத்தங்கள் அனைத்தும் மிகவும் மறைமுகமாகவே நடந்தது இவர்கள் குழப்பத்திற்கு ஒரு காரணம்.

ஜெர்மனியின் ஆட்டோ-பான் ஹிட்லரால் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. கார்கள் ஜெர்மனியின் ஹைவேக்களில் ஒடுவதைவிட போர் விமானங்கள் எந்த இடத்திலும் டேக் ஆஃப், டச் டவுன் செய்ய வசதிகள் இருக்கவேண்டும் என்ற ஹிட்லரின் கனவின் விளைவே இந்த ஆட்டோ-பான். பின்னாளில் இதுவே இவருக்கு வினையாகவும், ட்வைட் எய்சன்ஹவருக்கு வசதியாகவும் முடிந்தது. இதில் மயங்கிய எய்சன்ஹவர் அமேரிக்க ஜனாதிபதியான பிறகு அமேரிக்கா முழுவதும் ஹிட்லரின் பாணியில் ஃப்ரீவே முறையை கொண்டு வந்தார்.

”அச்சு”க்களின் (The Axes) உருப்பினர்களான முசோலினிக்கும் (இத்தாலி), சக்கரவர்த்தி ஹிரோஹிட்டோவிற்கும் (ஜப்பான்) தனது தொழில்நுட்பங்களை தந்து, தாரளமாக பகிர்ந்துக் கொண்டார். இத்தாலியின் ஆட்டோ-ஸ்ட்ராட்டாவும் இந்த பகிர்வினால் உருவானது.

ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு நிகழ்வுகளும் மிகவும் நேர்த்தியான முறையில் டாக்குமெண்ட் செய்யப்பட்டிருந்தது. நியூரம்பெர்க் ட்ரயலின் போது பல நாஜி கோப்புகளைப் பார்த்து வல்லுனர்கள் ஆச்சரியம் அடைந்ததாக தெரிகிறது. அதாவது நாஜிக்கள் எரித்தது போக மீதமிருந்த கோப்புகளைப் பார்த்தே இப்படி ஆச்சரியம் அடைந்துள்ளார்கள்.

ஹிட்லரின் பேன்-ஜெர்மனியா ஆசை (ambition) பற்றி எனக்கு எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. பிரிட்டிஷ் 300 ஆண்டுகளாக இந்தியாவை ஆளும் பொழுது ஜெர்மனி ஆசைப்படக் கூடாதா என்ன? ஆனால் நினைத்து நடக்காததால் வெறிப்பிடித்தவாறு நடந்துக்கொண்டது மன்னிக்கமுடியாதது

My Blog List