Search This Blog

Sunday, 15 June 2014

அகத்திக் கீரை



அகத்திக் கீரையை உண்டால் உணவு எளிதில் ஜீரணமாகும். பித்த தொடர்பான நோய்கள் நீங்குகும், வாரத்துக்கு ஒரு முறையேனும் தவறாமல் அகத்தி கீரையை சமைத்து சாப்பிடடால் தேகத்தில் உஷ்ணம் தணியும் கண்கள் குளிர்ச்சி பெறும். குடல் புண் ஆறும் சிறு நீர் மற்றும் மலம் தாரளமாக கழியும். பித்து எனும் மனக் கோளாறும் நீங்கும்,
அகத்தி கீரை வயிற்றுப் புண் (அல்சர்) என்னும் நோயைக் குணப்படுத்தும் . இதற்கு அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து நான்குபங்கு சின்ன வெங்காயம் சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினசரி ஒரு வேளை குடிக்கலாம்.== அகத்தி கீரையையும் மருதாணி இலையையும் சம அளவில் எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப்போட்டால் வெடிப்புகள் மறையும்.
அகத்தி கீரை சாற்றை சேற்று புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும். உடம்பில் காண படும் தேமலுக்கு அகத்தி கீரையீன் இலையை தேங்கா எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும்.

மாதுளம் பழம்

மாதுளம் பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்துவிட்டு விதைகளை உமிழ்ந்துவிடுவார்கள்.ஆனால் மாதுளம் பழத்தின் சத்தே அதன் விதைகளில்தான் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். 
பொதுவாக அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதத்திற்குள் பூத்துக் காய்த்து பழமாகும் மாதுளம் பழத்தின் சத்துக்களையும், மருத்துவச் சிறப்புகளையும் இப்போது பார்ப்போம். 
மாதுளம் பழத்தில் அதிகபட்சமாக நீர் சத்து 78 விழுக்காடு உள்ளது. புரதச்சத்து 1.6 விழுக்காடும், நார்ச்சத்து 5 விழுக்காடும், கார்போ ஹைட்ரேட் 14.5 விழுக்காடும், தாதுக்கள் 0.7 விழுக்காடும், சுண்ணாம்புச் சத்து 10 விழுக்காடும், மக்னீஷியம் 12 விழுக்காடும் அடங்கியுள்ளன. 
இதுதவிர, சிலிக் திராவகம் 14 மில்லி கராம், கந்தகம் 12 விழுக்காடு, குளோரின் 20 விழுக்காடு, தயாமின் 0.46 விழுக்காடு, பாஸ்பரம் 1.33 விழுக்காடு, செம்பு 0.2 விழுக்காடு, நிக்கோடினிக் அமிலம் 0.30 விழுக்காடும் உள்ளன. 
மேலும், வைட்டமின் சி சத்து 16 மில்லி கிராம் அளவிற்கு மாதுளத்தில் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
மாதுளம் பழத்தைப் பொறுத்தவரை பூ, தோல், விதை என அனைத்துமே மருத்துவச் சிறப்பு வாய்ந்தவை. 
மாதுளம் பூ, இரத்த வாந்தி, இரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு, சூடு முதலியவற்றை போக்கும். பூவை கஷாமாயம் செய்து குடித்தால் தொண்டை தொடர்பான பல பிணிகளும் அகலும். 
மாதுளம் பழ ரசம் தாதுவைப் பெருக்கும், வாந்தியை நிறுத்தும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் குறைபாடுகளை அகற்றும். இதுதவிர, காதடைப்பு, வெப்பக் காய்ச்சல், மந்தம், மயக்கம் ஆகியவற்றையும் பழ ரசம் விலக்கும். 
மாதுளம் பழ ரசத்துடன் ஒன்றரைப் பங்கு கற்கண்டு அல்லது வெள்ளைச் சர்க்கரை சேர்த்துப் பாகுபதத்தில் காய்ச்சி வைத்துக்கொண்டு சாப்பிட்டு வந்தால் பித்தம் தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நீங்கும். 
அன்றாடம் பாதி மாதுளம் பழம் அளவிற்கு நன்றாக மென்று சாப்பிட்டு வந்தால் மலக்கட்டு நீங்கி, நன்றாக மலம் இளகி இறங்கும். 
மாதுளம் பழச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு எடுத்து சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் எவ்வளவு கடுமையான இருமரும் குணமாகும். 
மாதுளம் பழத்தின் விதைகளை எடுத்து வெயிலில் உலர்த்திப் பொடி செய்து தினமும் பசும்பாலில் சிட்டிகை அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலம் பெற்று உடலும் நலம் பெறும். 

Saturday, 10 May 2014

வெந்தயம் (fenugrec)

வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல் சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது.
அந்த வகையில் வெந்தயம் தரும் நன்மைகளை பார்ப்போம்,
1.வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊரவைத்தோ அல்லது பொடியாக இடித்து தண்ணீரிலும் மற்றும் மோரிலும் கலந்தோ உணவிற்கு 15 நிமிடங்கள் முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
2.இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட விதைகள் அல்லது பொடியாக இடித்தெடுக்கப்பட்ட விதைகளை, தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள் செய்யும் போது அவற்றுடன் இணைந்து பயன்படுத்தலாம்.
3.இப்படி செய்யும்போது விதைகளின் கசப்புத்தன்மை ஓரளவிற்கு குறைகிறது. இவைகளை தயார் செய்யும்போது உண்பவரின் ருசிப்புத்தன்மைக்கேற்ப உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து தயார் செய்யலாம்.
4.ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அதிகளவு இருக்கும்வரை இவ்விதைகளை உட்கொள்ளலாம். வெந்தயம் எடுத்துக்கொள்வதுடன் தினமும் நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்வதும் மிகவும் அவசியம்.
5. உடல் எடையை குறைப்பதின் மூலம், இன்சுலின் ஹார்மோனின் செயல்களை அதிகரிக்க செய்யும்.
இவ்விதைகளை உட்கொள்ளும் நோயாளிகளில் சிலருக்கு ஆரம்பத்தில் வயிற்றுபோக்கு மற்றும் குடலில் வாயு உற்பத்தியாவது அதிகமாக காணப்படும்.
6.வெந்தயத்தை உணவாக பயன்படுத்துவதுடன் பரிந்துரைக்கப்பட்ட மற்ற சர்க்கரைநோய் சிகிச்சை முறைகளையும் பின்பற்ற வேண்டும். இப்படி பயன்படுத்தும்போது சர்க்கரை வியாதிக்கான மருந்துகளின் அளவு குறையலாம்.
7.சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய் செயல்படுகிறது.
8.சர்க்கரை நோயினால் திடீரென ஏற்படும் உடல் நலக் கேடுகளுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாடுவது அவசியம்.

அன்னாச்சி (pineapple)

இயற்கையின் கொடையான
அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன.
அன்னாச்சி பழத்தில் சத்துக்கள் மட்டுமல்லாது உடல் எடையை குறைப்பதற்கும், அழகை கூட்டுவதற்கும் பெரும் பங்கு வகிக்கின்றது.
வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும்.
நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லா வித கண் நோய்கள், எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல் நோய்கள், தொண்டை சம்பதமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமடையும்.
மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள். இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி பழச்சாறு சிறந்த ஒரு டானிக்காகும். பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும்.
அன்னாசி பழம் இரத்தத்தை சுத்தம் செய்வதில், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலைச் சுத்தப்படுத்துவதில் சிறந்தது.
தொடர்ந்து நாற்பது நாள் இப்பழத்தை உண்டால் தேகத்தில் ஆரோக்கியமும், பளபளப்பும் ஏற்படும். உடலில் ஏற்படும் வலியை தீர்க்கும் ஆற்றல் உடைய அன்னாச்சி பழம் பித்தத்தை குறைக்கும் தன்மை உடையது.
இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அன்னாச்சி பழத்தை நாமும் சாப்பிட்டு பயனடையலாமே.

சீரக‌ம் (Cumin)

சீரக‌ம் பொதுவாக உடலு‌க்கு ந‌ல்லது எ‌ன்று பலரு‌க்கு‌ம் தெ‌ரி‌யு‌ம், ஆனால் அதனை எ‌ந்த ‌விடய‌த்‌தி‌ற்கு எ‌வ்வாறு பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்றுதா‌ன் தெ‌ரிவ‌தி‌ல்லை.
வா‌ந்‌தி எடு‌த்தவ‌ர்களு‌க்கு, வெறு‌ம் கடா‌யி‌ல் ‌சீரக‌த்தை‌ப் போ‌ட்டு வறு‌த்து அ‌தி‌ல் தண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கொ‌தி‌க்க வை‌த்த கஷாய‌த்தை‌க் கொடு‌க்க வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம்.
சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.
திராட்சை பழ‌ச்சாறுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.
வறுத்த சீரகத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
சீரகத்துடன் பூண்டை அரைத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் குடல் நோய்கள் குணமாகும்.

வெண்டி (ladies finger)

வெண்டைக்காயை பெரும்பாலான மக்களால் விரும்பி உண்ணக்கூடிய ஒரு காய் வகை.

வெண்டையின் காய், இலை, தண்டு அனைத்துமே மருத்துவம் குணம் கொண்டவை.

இதனை சாப்பிட்டால் அறிவு கூடும் என்பார்கள், அதாவது கணக்கு பாடத்தில் நாம் புலியா மாறுவோம்.

வெண்டையின் தன்மை பற்றி பார்க்கலாம்.

வயிற்றுப்புண் குணமாக வெண்டைக்காயை நன்கு அரைத்து 200 கிராம், சீரகம் 20 கிராம், மஞ்சள் தூள் 20 கிராம், வெந்தயக் கீரைச்சாறு 100 மி.லீ, மணத்தக்காளி இலைச்சாறு 100 மி.லீ, பசுநெய் 500 மி.லீ, தேங்காய் பால் 200 மி.லீ வரை உணவில் கலந்து மூன்று வேளை உண்டுவர வயிற்றுப்புண், குடல்புண், குணமாகும்.

வெண்டைகாய் விதை 10 கிராம் சோம்பு 10 கிராம், சுக்கு 10 கிராம், தண்ணீர் 200 மி.லீ, இதை குடிநீர் விட்டு அருந்தி வர சிறுநீர் எரிச்சல் மற்றும் உப்புக்கள் கரைந்து சிறுநீர் நன்கு வெளியேறும்.

தோல் வரட்சியைப் போக்கவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூ
யதாகவும், உடலைப் பளபளப்பாக மாற்றுவதற்கும் ஓர் அரிய மருந்தாக வெண்டைக்காய் உபயோகப்படுத்தப்படுகின்றது.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும். பெக்டின் என்னும் நார்ப் பொருளும் இதில் இருக்கின்றது.

எனவே தான் வெண்டைக்காயை நறுக்கி தண்ணீரில் போடக் கூடாது ஏனெனில் அதில் உள்ள கோழைத் திரவம் வெளியேறிவிடும். மற்றும் மக்னீசியமும் இதில் இருப்பதால் இதய துடிப்பையும் சீராக்குகின்றது எனவே இருதய நோயாளிகளுக்கு சிறந்த ஒன்றாகவும் வெண்டைக்காய் விளங்குகின்றது.

மலச்சிக்கலைப் போக்கும் தன்மையும் இதற்கு உண்டு எனவே வெண்டையின் தொண்டை நாமும் பயன்படுத்திக் கொள்வோம்.

பலா (jack fruit)

முக்கனிகளில் ஒன்றான பலா
மிகுந்த சுவை கொண்டதால் அதை உண்ணாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

* பலாப்பழத்தை தேனில் நனைத்து உட்கொண்டுவர மூளை நரம்புகள் வலு பெறும். வாத நோய், பைத்தியம் போன்றவை நீங்கும்.

* பலாப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் உள்ளது. இது மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தை தரும். நரம்புகளை உறுதியாக்கும். ரத்தத்தை விருத்தி செய்யும். தொற்றுக் கிருமிகளை அழிக்கும்.

* பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது. மேலும் இது, உடல் உஷ்ணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும்.

* பலா மரத்தில் இருந்து கிடைக்கும் பாலினை எடுத்து நெறிகட்டிகள், நெடுநாள் உடையாமல் இருக்கும் கட்டிகள் மீது பூசிவர அவை பழுத்து உடையும் அல்லது அமுங்கிவிடும்.

* பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும், நீர்வேட்கையும் நீங்கும். ஆண்மை அதிகரிக்கும்.

* பலா இலைத்தளிரை அரைத்து சிரங்குகளுக்கு பூசிவர அவை குணமாகும்.

* பலா மரத்தின் வேரை நன்கு கழுவி உலர்த்தி துண்டு துண்டாய் வெட்டி, ஒன்றிரண்டாய் சிதைத்து நீர்விட்டு காய்ச்ச வேண்டும். அது பாதியாக வற்றியதும் வடிகட்டி குடித்துவர கழிச்சல் குணமாகும்.

* பலா மரத்தின் வேரை அரைத்து சொறி, சிரங்குகளுக்கு தேய்த்தால் அவை குணமாகும்.

* பலா இலைகளை ஒன்றாக கோர்த்து, அதில் உணவு உட்கொள்வது சிலரது வழக்கம். இவ்வாறு உணவு உட்கொண்டால் பித்தம் அதிகரிக்கும். அதேநேரம், குன்மம் எனப்படும் அல்சர் நோயும், பெருவயிறும் குணமாகும்.

ஒரு எச்சரிக்கை:

பலாப்பழம் மற்றும் பலா பிஞ்சினை அதிக அளவில் பயன்படுத்துவோர் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

* பலா பிஞ்சினை அதிக அளவில் உண்பதால் செரியாமை, வயிற்றுவலி போன்றவை ஏற்படும். இதை, மிகவும் அளவுக்கு அதிகமாக உண்டால் சொறி, சிரங்கு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.

* பலாப்பழத்தை அளவுடன் தான் உண்ண வேண்டும். இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிறு மந்தமாகி வயிற்றுவலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும். எனவே, பலாப்பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டே சாப்பிட வேண்டும்.

* பலாப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டை ஒன்றினை பச்சையாக மென்று தின்றுவிட்டால் சாப்பிட்டது நன்கு சீரணமாகிவிடும்.

* குடல்வால் அழற்சி எனப்படும் அப்பண்டிசைட்டிஸ் உள்ளவர்கள் பலாப்பழத்தை அறவே சாப்பிடக் கூடாது.

* மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளையும் சாப்பிட்டு சீரணமாகவில்லை என்றால், மந்தம், வயிற்றுவலி, ஏப்பம் ஆகியவை ஏற்படும்.

இதனை போக்க துவரம்பருப்பை வேக வைத்து வடித்த நீரில் மிளகும், பூண்டும் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட தகுந்த நிவாரணம் பெறலாம்.

My Blog List