Search This Blog

Saturday, 10 May 2014

வெண்டி (ladies finger)

வெண்டைக்காயை பெரும்பாலான மக்களால் விரும்பி உண்ணக்கூடிய ஒரு காய் வகை.

வெண்டையின் காய், இலை, தண்டு அனைத்துமே மருத்துவம் குணம் கொண்டவை.

இதனை சாப்பிட்டால் அறிவு கூடும் என்பார்கள், அதாவது கணக்கு பாடத்தில் நாம் புலியா மாறுவோம்.

வெண்டையின் தன்மை பற்றி பார்க்கலாம்.

வயிற்றுப்புண் குணமாக வெண்டைக்காயை நன்கு அரைத்து 200 கிராம், சீரகம் 20 கிராம், மஞ்சள் தூள் 20 கிராம், வெந்தயக் கீரைச்சாறு 100 மி.லீ, மணத்தக்காளி இலைச்சாறு 100 மி.லீ, பசுநெய் 500 மி.லீ, தேங்காய் பால் 200 மி.லீ வரை உணவில் கலந்து மூன்று வேளை உண்டுவர வயிற்றுப்புண், குடல்புண், குணமாகும்.

வெண்டைகாய் விதை 10 கிராம் சோம்பு 10 கிராம், சுக்கு 10 கிராம், தண்ணீர் 200 மி.லீ, இதை குடிநீர் விட்டு அருந்தி வர சிறுநீர் எரிச்சல் மற்றும் உப்புக்கள் கரைந்து சிறுநீர் நன்கு வெளியேறும்.

தோல் வரட்சியைப் போக்கவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூ
யதாகவும், உடலைப் பளபளப்பாக மாற்றுவதற்கும் ஓர் அரிய மருந்தாக வெண்டைக்காய் உபயோகப்படுத்தப்படுகின்றது.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும். பெக்டின் என்னும் நார்ப் பொருளும் இதில் இருக்கின்றது.

எனவே தான் வெண்டைக்காயை நறுக்கி தண்ணீரில் போடக் கூடாது ஏனெனில் அதில் உள்ள கோழைத் திரவம் வெளியேறிவிடும். மற்றும் மக்னீசியமும் இதில் இருப்பதால் இதய துடிப்பையும் சீராக்குகின்றது எனவே இருதய நோயாளிகளுக்கு சிறந்த ஒன்றாகவும் வெண்டைக்காய் விளங்குகின்றது.

மலச்சிக்கலைப் போக்கும் தன்மையும் இதற்கு உண்டு எனவே வெண்டையின் தொண்டை நாமும் பயன்படுத்திக் கொள்வோம்.

பலா (jack fruit)

முக்கனிகளில் ஒன்றான பலா
மிகுந்த சுவை கொண்டதால் அதை உண்ணாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

* பலாப்பழத்தை தேனில் நனைத்து உட்கொண்டுவர மூளை நரம்புகள் வலு பெறும். வாத நோய், பைத்தியம் போன்றவை நீங்கும்.

* பலாப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் உள்ளது. இது மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தை தரும். நரம்புகளை உறுதியாக்கும். ரத்தத்தை விருத்தி செய்யும். தொற்றுக் கிருமிகளை அழிக்கும்.

* பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது. மேலும் இது, உடல் உஷ்ணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும்.

* பலா மரத்தில் இருந்து கிடைக்கும் பாலினை எடுத்து நெறிகட்டிகள், நெடுநாள் உடையாமல் இருக்கும் கட்டிகள் மீது பூசிவர அவை பழுத்து உடையும் அல்லது அமுங்கிவிடும்.

* பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும், நீர்வேட்கையும் நீங்கும். ஆண்மை அதிகரிக்கும்.

* பலா இலைத்தளிரை அரைத்து சிரங்குகளுக்கு பூசிவர அவை குணமாகும்.

* பலா மரத்தின் வேரை நன்கு கழுவி உலர்த்தி துண்டு துண்டாய் வெட்டி, ஒன்றிரண்டாய் சிதைத்து நீர்விட்டு காய்ச்ச வேண்டும். அது பாதியாக வற்றியதும் வடிகட்டி குடித்துவர கழிச்சல் குணமாகும்.

* பலா மரத்தின் வேரை அரைத்து சொறி, சிரங்குகளுக்கு தேய்த்தால் அவை குணமாகும்.

* பலா இலைகளை ஒன்றாக கோர்த்து, அதில் உணவு உட்கொள்வது சிலரது வழக்கம். இவ்வாறு உணவு உட்கொண்டால் பித்தம் அதிகரிக்கும். அதேநேரம், குன்மம் எனப்படும் அல்சர் நோயும், பெருவயிறும் குணமாகும்.

ஒரு எச்சரிக்கை:

பலாப்பழம் மற்றும் பலா பிஞ்சினை அதிக அளவில் பயன்படுத்துவோர் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

* பலா பிஞ்சினை அதிக அளவில் உண்பதால் செரியாமை, வயிற்றுவலி போன்றவை ஏற்படும். இதை, மிகவும் அளவுக்கு அதிகமாக உண்டால் சொறி, சிரங்கு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.

* பலாப்பழத்தை அளவுடன் தான் உண்ண வேண்டும். இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிறு மந்தமாகி வயிற்றுவலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும். எனவே, பலாப்பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டே சாப்பிட வேண்டும்.

* பலாப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டை ஒன்றினை பச்சையாக மென்று தின்றுவிட்டால் சாப்பிட்டது நன்கு சீரணமாகிவிடும்.

* குடல்வால் அழற்சி எனப்படும் அப்பண்டிசைட்டிஸ் உள்ளவர்கள் பலாப்பழத்தை அறவே சாப்பிடக் கூடாது.

* மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளையும் சாப்பிட்டு சீரணமாகவில்லை என்றால், மந்தம், வயிற்றுவலி, ஏப்பம் ஆகியவை ஏற்படும்.

இதனை போக்க துவரம்பருப்பை வேக வைத்து வடித்த நீரில் மிளகும், பூண்டும் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட தகுந்த நிவாரணம் பெறலாம்.

வெங்காயம்(Onion)

வெங்காயத்தை ஆங்கிலத்தில் ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகு
. இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.

சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்:

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

6. வெங்காயத்தைச் சுட்டு சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவ மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு மருத்துவரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்.

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

Wednesday, 30 April 2014

வாதுமை (பாதாம் பருப்பு)

ஜீரண மண்டலத்திற்கு நல்லது; உடலுக்கு வலிமையும், வீரியமும் கொடுக்கும்; கொலஸ்ட்ரால் லெவலை கட்டுப்படுத்தும்; நார்ச்சத்தும், கொழுப்புச்சத்தும் கொண்டு உள்ளது; இதயத்திற்கு மிகவும் இதமானது; இதயத்தின் நண்பன் என்றே சொல்லலாம்; பாதாம் எண்ணெய் சருமத்திற்கு மிருதுவையும், புத்துணர்ச்சியையும் தரும். பாதாம் பால், வயிற்றுக்கு, சிறுநீரக பாதைக்கு, நுரையீரலுக்கு நல்லது; ஆயுர்வேத, யுனானி சிகிச்சைகளில், பாதாம் முக்கிய பங்கேற்கிறது; உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்; புற்றுநோய் வருவதை தடுக்கும்

இப்படி நன்மைகள் பல செய்யும் பாதாம் பருப்பு, உலகம் முழுவதும் பயிர் செய்யப்பட்டாலும், உயர்ந்த தரமான பாதாம், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தான் உற்பத்தியாகிறது. அமெரிக்கர்கள், தங்கள் உணவில், ஏதாவது ஒரு வகையில், பாதாமை அன்றாடம் சேர்த்துக் கொள்ளத் தவறுவதில்லை. பாதாம் பருப்பை அப்படியே சாப்பிடுவர் அல்லது வெண்ணையாக்கி ரொட்டியில், சப்பாத்தியில் தடவி சாப்பிடுவர்; பாதாமை வறுத்து, பலவித சுவைசேர்த்து சாப்பிடுவர்.

Saturday, 20 April 2013

டீ யின் மருத்துவ குணம்



டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள் மருத்துவ-நிபுணர்கள். மேலும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க டீ உதவுகின்றது. ஒரு கப் டீ, யில் காபியை விடவும் குறைவாக 'காபினே' உள்ளது . எனவே கொழுப்பை பற்றி கவலைபட தேவையில்லை .


இருபினும் "உயர் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள்" தினமும் ஒரு கப் டீ மட்டும் அருந்தினால் நன்று . உயர் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் அதிகமாய் டீ குடிப்பது ரத்தஅழுத்தத்தை அதிகரிக்க செய்து விடும்.

ஒரு சிலர் டீயை கொதிக்க கொதிக்க தொண்டைக்குள் இறக்குவார்கள். இப்படியே இவை தொடர்ந்தால் தொண்டை புற்று நோய் உருவாக வாய்ப்புகள் அதிகம் என சமீபத்திய மருத்துவ-ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.

Friday, 19 April 2013

தேனின் மருத்துவ குணங்கள்

பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில்(திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகின்றன.
1. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும். தேனும், வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதி அடையும்.
2. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.
3. தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.
4. தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.
5. இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.
6. தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.
7. உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.
8. தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.
9. மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.
10. கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.
11. வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.
12. தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.
13. அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.
14. அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.
15. முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.
16. தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.
17. ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும்.
குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.
18. அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.
19. நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும் என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புவோர் தினமும் தேனை அருந்த வேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.

Thursday, 21 March 2013

இருதய இரத்தக் குழாய் அடைப்பு

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

My Blog List