Search This Blog

Monday, 13 August 2012

யஃஜுஜ், மஃஜுஜ் என்றால் யார்?

 உலகம் அழியக்கூடிய காலம் நெருங்கும் போது வெளிப்படக்கூடிய ஒரு கூட்டத்தினர் தான் யஃஜூஜ் மஃஜூஜ் ஆவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த பத்து அடையாளங்களில் யஃஜுஜ், மஃஜுஜ் எனும் கூட்டத்தினரின் வருகையும் ஒன்றாகும். இக்கூட்டத்தினர் பற்றி திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் பல விபரங்கள் கூறப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்தினர் இனி மேல் தான் பிறந்து வருவார்கள் என்பதி...ல்லை. நீண்ட காலமாகவே அவர்கள் இருந்து வருகின்றனர். அவர்கள் மலைகளால் சூழப்பட்ட பகுதியில் வசிக்கின்றனர். அம்மலைகளுக்கிடையே இரும்புப் பாளங்களை அடுக்கி செம்பு உருக்கி ஊற்றப்பட்டுள்ளது. அதைத் தாண்டி வரவும் முடியாது. அதைக் குடைந்து வெளியே வரவும் முடியாது. யுக முடிவு நாளின் நெருக்கத்தில் அந்தத் தடை உடைக்கப்பட்டு அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள். ஒருவருடன் ஒருவர் முட்டி மோதிக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கும் என்று 18:94-96 வரயிலான வசனங்கள் கூறுகின்றன.

இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.
(அல்குர்ஆன் 21:96)
யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் அவர்களுக்கு வழி திறக்கப்படும் என்பதை இந்த வசனமும் அறிவிக்கின்றது. இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலும் விளக்கியுள்ளனர்.

அப்போது அல்லாஹ் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரை அனுப்புவான். அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைந்து வருவார்கள். அவர்களில் முதலில் வருபவர்கள் தபரிய்யா என்ற ஏரியில் தண்ணீரைக் குடிப்பார்கள். பின்னால் வருபவர்களுக்குத் தண்ணீர் இருக்காது. அந்த நேரத்தில் ஈஸா நபியவர்களும், அவர்களின் தோழர்களும் இக்கூட்டத்தினால் முற்றுகையிடப்படுவார்கள். அன்று ஒரு மாட்டின் தலை இன்றைய நூறு தங்கக் காசுகளுக்குச் சமமாகத் தோன்றும் அளவுக்கு முற்றுகை நீடிக்கும். ஈஸா நபியவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள். ஒரேயடியாக யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் செத்து விழுவார்கள். பின்னர் ஈஸா நபியவர்களும், அவர்களின் தோழர்களும் தூர் மலையிலிருந்து கீழே இறங்குவார்கள். ஒரு ஜான் இடம் கூட மிச்சமில்லாமல் அவர்களின் உடல் பூமி முழுவதும் சிதறி நாற்றமெடுக்கும். அப்போது ஈஸா நபியவர்கள் மீண்டும் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள்.

அப்போது அல்லாஹ் ஒட்டகத்தின் கழுத்தைப் போன்ற பறவைகளை அனுப்புவான். அவை உடல்களைத் தூக்கிச் சென்று வீசி எறியும். பின்னர் அல்லாஹ் மழையைப் பொழிவிப்பான். கூடாரமோ, மண் வீடுகளோ எதையும் விட்டு வைக்காமல் அவற்றின் மேல் மழை பொழியும். பூமியைக் கண்ணாடி போல் சுத்தமாக்கும்.
"பூமியே உனது பழங்களை முளைக்கச் செய்! உனது அபிவிருத்தியைத் திரும்பக் கொடு''என்று (இறைவனால்) பூமிக்குக் கட்டளை பிறப்பிக்கப்படும். அந்நாளில் ஒரு மாதுளையை ஒரு பெரும் கூட்டம் சாப்பிடும். அதன் தோல்களில் ஒரு கூட்டம் நிழல் பெறுவார்கள். பாலில் பரகத் செய்யப்படும். ஒரு ஒட்டகத்தில் கறக்கும் பால் ஒரு பெரும் கூட்டத்துக்குப் போதுமானதாக இருக்கும். ஒரு மாட்டில் கறக்கப்படும் பால் ஒரு கோத்திரத்துக்குப் போதுமானதாக ஆகும். ஒரு ஆட்டில் கறக்கப்படும் பால் ஒரு குடும்பத்துக்குப் போதுமானதாக அமையும். இவர்கள் இவ்வாறு இருக்கும் போது தூய்மையான காற்றை அல்லாஹ் அனுப்புவான். அனைத்து முஸ்லிம்களின் உயிர்களையும் அது கைப்பற்றும். மிகவும் கெட்டவர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள். அவர்கள் வாழும் போது தான் உலகம் அழியும் என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள்.

(நூல் : முஸ்லிம் 5228)


யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் பைத்துல் முகத்தஸ் பகுதியில் உள்ள மலையில் ஏறுவார்கள். பூமியில் உள்ளவர்களை நாம் கொன்று விட்டோம். வாருங்கள் வானத்தில் உள்ளவர்களைக் கொல்வோம் என்று அவர்கள் கூறு வார்கள். தங்கள் அம்புகளை வானத்தை நோக்கி எய்வார்கள். அவர்களின் அம்புகளை ரத்தத்தில் தோய்த்து அல்லாஹ் திருப்பி அனுப்புவான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 5228
அவர்கள் எந்த நாட்டில் இவ்வாறு அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்குக் கூறவில்லை. யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் அவர்கள் வெளிப்பட வேண்டுமானால் மற்ற மனிதர்கள் அவர்களை அறிந்து கொள்ளாமலிருப்பது அவசியம். அதற்காகக் கூட இறைவன் மறைத்து வைத்திருக்கலாம்.



நவீன கருவிகளையும், ஆகாய விமானங்களையும், தொலை நோக்கிக் கருவிகளையும் கண்டுபிடித்துள்ள காலகட்டத்தில் அப்படி ஒரு கூட்டம் அடைக்கப்பட்டிருந்தால் உலகத்திற்குத் தெரியாமல் இருக்குமா? செம்பு உருக்கி ஊற்றப்பட்டால் அதன் பளபளப்பை வைத்து இனம் காணலாமே என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர். அந்தக் கேள்வி தவறானதாகும்.

மனிதனிடம் இத்தகைய நவீன சாதனங்கள் இருந்தாலும் அவை முழு அளவுக்கு இன்னமும் பயன்படுத்தப்படவில்லை. மிக உயரத்திலிருந்து கொண்டு பூமியைப் படம் பிடித்திருக்கிறார்கள். பார்த்திருக்கிறார்களே தவிர பூமியின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஏன் ஒவ்வொரு ஏக்கரையும் கூட மனிதன் இந்தக் கருவிகள் மூலம் இதுவரை ஆராயவில்லை. பூமியிலேயே இருக்கும் சில பகுதிகளை இப்போதும் கூட கண்டுபிடித்ததாகச் செய்திகள் வருவதிலிருந்து இதை உணரலாம்.


இந்த மண்ணுலகில் மனிதனின் கால் படாத நிலப்பரப்புகள் ஏராளம் உள்ளன. ஆகாயத்தில் வட்டமடித்து சக்தி வாய்ந்த தொலைநோக்கிக் கருவிகள் மூலம் ஒவ்வொரு ஏக்கராக ஆராய முற்பட்டாலும் மரங்கள், காடுகள் போன்ற தடைகள் இல்லாவிட்டால் தான் பூமியில் உள்ளவர்களைப் பார்க்க முடியும். தடைகள் இருந்தால் அந்தக் காடுகளைத் தான் பார்க்க முடியும்.

காடுகளும், குகைகளும், தொலைநோக்கிக் கருவிகள் மூலம் பார்ப்பதைத் தடுத்து விடுகின்றன.

மலைகளால் சூழப்பட்ட காடுகளிலோ, அல்லது குகைகளிலோ யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் இருந்தால் எந்தச் சாதனங்கள் மூலமும் அவர்கள் இருப்பதை அறிந்து கொள்ள முடியாது.

செம்பு எனும் உலோகம் விரைவில் பாசி படிந்து பச்சை நிறத்துக்கு மாறி விடுவதால் அதன் பளபளப்பை வைத்தும் கண்டுபிடிக்க முடியாது. தொலைவிலிருந்து பார்க்கும் போதும், அருகிலிருந்து பார்க்கும் போதும் கூட மலைகளில் புல் வளர்ந்திருப்பது போன்ற தோற்றமே தென்படும்.

எனவே எவரது கண்களுக்கும் புலப்படாமல் இந்தக் கூட்டத்தினர் இந்தப் பூமியின் ஒரு பகுதியில் வாழ்ந்து வருவது சந்தேகப்பட வேண்டியதன்று.

இனி வருங்காலத்தில் மனிதன் முயன்று நெருங்கலாம். யுக முடிவு நேரம் அவர்கள் வெளியே வர வேண்டிய காலமாக யுகமுடிவு நாளின் நெருக்கமாகத் தான் இருக்க முடியும்.
இந்தக் கூட்டத்தினர் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய சில விபரங்களையும் நாம் அறிந்து கொள்வோம்.

யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் வரும் வரை நீங்கள் போராடிக் கொண்டே இருப்பீர்கள். அவர்களின் முகங்கள் கேடயம் போல் அகன்றதாகவும், (வட்டமாகவும்) கண்கள் சிறியதாகவும், முடிகள் செம்பட்டையாகவும் அமைந்திருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: காலித் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: அஹ்மத் 21299

இந்தக் கூட்டத்தினர் தனியான இனத்தவர் அன்று. ஆதம் (அலை) அவர்களின் சந்ததியில் தோன்றியவர்களே என்பதைப் பின்வரும் நபிமொழி அறிவிக்கின்றது.

யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்பட்டால் மக்களின் வாழ்க்கையைப் பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப் பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), நூல்: தப்ரானி

ஒவ்வொருவரும் ஆயிரம் சந்ததிகளைப் பெற்றெடுப்பார்கள் என்பதிலிருந்து அவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காமல் இருக்கும் என்று கருத முடிகின்றது.
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரின் எண்ணிக்கை மிகமிக அதிகமாக இருக்கும் என்பதை நபிகள் நாயகத்தின் பொன்மொழியிலிருந்து அறிய முடிகின்றது.
உங்களில் ஒருவர் என்றால் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் ஆயிரம் என்ற கணக்கில் நரகவாசிகளின் எண்ணிக்கை இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : புகாரி 3348

யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் அழிக்கப்பட்ட பின் முஸ்லிம்கள் ஹஜ்ஜும் உம்ராவும் செய்வார்கள். ஹஜ் செய்வோர் யாரும் இல்லை என்ற நிலையில் தான் யுக முடிவு நாள் ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

Thursday, 24 May 2012

உண்மையான உளத்தூய்மையாளர்கள்

சிலர் தன்னைப் பிறர் புகழும்போது சுறுசறுப்போடும் உற்சாகத்தோடும் செயல்படுவார்கள். விமர்சனங்கள் ஏச்சுப் பேச்சுக்கள் வரும்போது பின்வாங்கி விடுவார்கள். மனிதர்கள் புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி தன்னுடைய செயல்களை அல்லாஹ்வின் பொருத்தத்திற்க்காக எண்ணிச் செயல்படுபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.




சிலர் கூட்டத்தில் இருக்கும்போது அமல்களில் செயல்களில் ஆர்வம் காட்டுவார்கள். பாவங்களிலிருந்தும் விலகியிருப்பார்கள். ஆனால் தனிமையில் அமல்களில் சோம்பல் கொள்வார்கள். பாவங்களிலும் அதிகம் ஈடுபடுவார்கள். யார் தனிமையிலும் கூட்டத்திலும் சோம்பலை விட்டும் பாவத்தைவிட்டும் விலகியிருக்கிறார்களோ அவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.



சிலர் வெளியே பொது மேடையில் பதவியை வெறுப்பதுபோல் காட்டிக் கொள்வார்கள்; ஆனால் அப்பதவி கிடைக்காதா என ஏங்கிக் கொண்டிருப்பார்கள். உள்ளேயும் வெளியேயும் தலமைப்பதவியை விரும்பாதவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.



சிலர் மலை போன்ற தன் குறைபாடுகளை மறந்து விட்டு சிறு இலை போன்ற பிறர் குறைபாடுகளைத் தேடி அலைந்து கொண்டிருப்பார்கள். தன் அளவில் அநீதமாக நடந்துக்கொண்டு பிறரிடம் நியாயத்தை எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள். பிறர் குறைகளை மறந்து விட்டு தன் குறைகளை எண்ணி வருந்துபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.



சிலர் தன்னைப்போல் யாரும் இல்லையென்றும் தான் பெரிய சாதனையாளன் என்றும் தான் புகழப்பட வேண்டும் என்று பிறரிடம் பேசிக்கொண்டிருப்பார்கள். புகழை விரும்பாதவர்களும் சாதனைகளை பட்டியலிடாதவர்களும் குறைவாகப்பேசி ஆக்கப்பூர்வமான செயல்களில் அதிகம் ஈடுபடுபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.



சிலர் அதிகப்படியான காரணங்களைக் கூறி பொருப்புகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிப்பார்கள். ஆனால் தியாகம் செய்வதிலும், செலவு செய்வதிலும் மற்றவர்களைவிட முந்திக்கொள்பவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.



சிலர் தமது கொள்கை கோட்பாட்டில் பிரச்சாரப் பயணத்தில் நிலைத்து நிற்காமல் அடிக்கடி இடறி விழுந்து கொண்டிருப்பார்கள். ஆனால் சத்தியப் பாதையில் உள்ளோர் குறைவாகவும், அசத்தியப் பாதையில் இருப்போர் அதிகமாகவும் இருப்பதை எண்ணி பின் வாங்காமல் தொடர்ந்து பயணிப்பவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.



சிலர் தமது செயல்களுக்கு உடனடியாகக் கிடைக்கும் உலக இலாபங்களை மட்டுமே பிரதிபலனாக எதிர்பார்ப்பார்கள். எவர் தமது செயல்களுக்கு மனிதர்களிடம் எதிர்பாராமல் மறுமையில் அல்லாஹ் வழங்கும் பிரதிபலன்களை மட்டுமே எதிர்பார்த்துச் செயல்படுபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.



Wednesday, 21 March 2012

புற்றுநோய்

எனக்கு கென்சர் வருவதடற்கு வாய்ப்பே இல்லை.நான் சரியான டயட்டில் தான் இருக்கிறேன் எனக்கு ஏன் கென்சர் வர வேண்டும்? என்று கூட நினைக்கலாம், அனைவருக்கும் கேன்சர் நோயை உண்டாக்கும் செல்கள் இருக்கதான் செய்யும். அது சிலரை இல்ல இப்ப பலரை நிறையவே தாக்கி கொண்டு இருக்கிறது. அனைவருமே இதில் விழிப்புணர்வுடன் இருக்கவும். 40 வயதை கடக்கும் போது புற்றுநோய்க்கான முழு பரிசோதனை எடுத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் ஒருவரை புற்றுதாக்கிவிட்டால் பரம்பரை பரம்பரையாக வரவும் வாய்ப்பிருக்கு. ஆகையால் கூடுதல் கனவம் கொள்ளுங்கள் வாயில் பிளந்து பிளந்து கொப்புளங்கள். இருந்தாலும் கவனம் கொள்ளவேண்டும். வயிற்றில் புண் இருந்தால் தான் வாயில் கொப்புளம் வரும். அதுவும் நாளடைவில் கேன்சர் கட்டியாக மாற வாய்ப்பிருக்கு. தலை வலியோ, வயிற்று புண், வயிற்று வலி , நெஞ்ரிச்சல், வாயு பிரச்சனை இதுபோல் இரண்டு முன்று மாதத்துக்கு மேல் சரியாகாமல் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை சந்திக்கவும். ஏதும் தீராத வயிற்று வலி , வாய் புண் கொப்புளங்கள், நீண்ட நாள் வலியில்லாமல் ஆறாத கட்டி மற்றும் புண்கள் இருந்தால் அடிக்கடி மயக்கமாக இருந்தாலும் என்ஸ்கோபி மற்றும் மெமோகிராம் டெஸ்ட்போன்ற மருத்துவர் சொல்லும் சிகிச்சைகளை முறையாக எடுத்து கொள்ளுங்கள் கரிஞ்ச தீஞ்ச உணவும் கேன்ஸர் வருவதற்கு ஒரு காரணமாம். அதிக வெப்பத்தில் (க்ரில், பார்பெக்யூ, எண்ணெயை கொதிக்கவைத்து பொரிப்பது, அடுப்பு எப்பவும் பெரிய தீயில் வைத்துச் சமைப்பது...போன்றதும் கேன்ஸருக்குக் காரணம்... கவனமாக தீயின் தனலை சமையலுக்கு ஏற்றவாறு வைத்து சமைக்கவும்., சமைக்கும் போது அதிக புகை போக அதை நுகர்ந்துகொண்டு சமைக்காதீர்கள் காற்றோட்டமாக ஜன்னலை திறந்து வைத்துகொள்ளுங்கள் அல்லது எக்ஜாஸ்ட் பேன் போட்டு கொள்ளுங்கள். தற்போது புடவை கட்டினாலும் கேன்சர் வருகின்றது என்று தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. ரொம்ப இருக்கமாக அழுத்தி டைட்டாக பெட்டிகோட் அணிவதை தவிர்த்து கொள்ளுங்கள். புண்ணாகி அதுவே கேன்சர் கட்டிகளாக மாற வாய்ப்பிருக்கு. புற்றுநோய் பாதிக்கபட்டவர்கள் இப்ப கீமோ, ரேடியேஷன், ஆப்ரேஷன் என செய்து இருந்தால் பொலியுஷன் நிறைந்த இடத்துக்கு போகாதீர்கள், அது உங்களுக்கு அலர்ஜியை உண்டாக்கும். அதே போல் சமைக்கும் போது அதிக புகையில் நிற்காதீர்கள். நிறைய ஆட்கள் இருக்கும் இடத்திற்கு போகாதீர்கள்.ஊதுபத்தி, சாம்ராணி புகை இருக்கும் இடத்தில் அந்த புகையை நுகர்ந்து கொண்டு இருக்காதீர்கள். தன்னம்பிக்கையோடு தைரியமாக முறையாக சிகிச்சையை எடுத்து கொள்ளுங்கள். என்னுடைய மிக மிக முக்கியமான அட்வைஸ் என்னவென்றால், Mobile phones பாவிப்பதை குறைத்துக்கொள்ளுஙகள். Battery low ஆகிய சந்தர்ப்பத்தில் Mobile phones பாவிக்க வேண்டாம்.

Friday, 9 March 2012

சிறுநீரக செயலிழப்பு, கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி),சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக



நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS)(கழுத்து,முழங்கை,முன்கை மணிக்கட்டு,கீழ்முதுகு வலி,முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி),சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது.இதை வாத நோய்கள் என்பார்கள்.

பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார். நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன்.அதை விளக்கிக் கூறவும் கேட்டேன்.அவரால் விளக்க முடியவில்லை.ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.

அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாகஅறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXIGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார்.
பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும்(முன்பே சரநூலில் கூறியிருக்கிறேன் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும்,தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.
அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது,இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது).எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.
சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.
இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது,மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.
விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.
மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது.
இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையான இது போன்ற விடயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Monday, 30 January 2012

கியாமத் நாளின் அடையாளங்கள்


உலகம் எப்போது அழிக்கப்டும் என்பதை இறைவன் மட்டுமே அறிவான். 
நபிமார்களோ வானவர்களோ அந்த நாள் எப்போது என்பதை அறிய முடி
யாது. ஆயினும் அந்த நாள் நெருங்கும் போது ஏற்படும் அடையாளங்கள் 
சிலவற்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துச் சென்ற
னர். அந்த அடையாளங்களை இந்த நூல் கீழ்க்காணும் தலைப்புகளில் 
தொகுத்துச் சொல்கிறது.
*சிறிய அடையாளங்கள் 
*மகளின் தயவில் தாய்  
*பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்  
*குடிசைகள் கோபுரமாகும் 
*விபச்சாரமும்  மதுப்பழக்கமும் பெருகும்    
*தகுதியற்றவர்களிடம் பொறுப்பு  
*பாலை வனம் சோலை வனமாகும் 
*காலம் சுருங்குதல் 
*கொலைகள் பெருகுதல் 
*நில அதிர்வுகளும் பூகம்பங்களும் அதிகரித்தல்   
*பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
*நெருக்கமான கடை வீதிகள் 
*பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல் 
*ஆடை அணிந்தும் நிர்வாணம் 
*உயிரற்ற பொருட்கள் பேசுவது 
*பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல் 
*தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல் 
*பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல் 
*சாவதற்கு ஆசைப்படுதல் 
*இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள் 
*முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்   
*இது வரை நிகழாத அடையாளங்கள் 
*யூதர்களுடன் மாபெரும் யுத்தம் 
*கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல் 
*யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல் 
*கஹ்தான் இன மன்னரின் ஆட்சி 
*அல்ஜஹ்ஜாஹ் மன்னர் 
*எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர் 
*செல்வம் பெருகும் 
*மாபெரும் யுத்தம் 
*பைத்துல் முகத்தஸ் வெற்றி 
*மதீனா தூய்மையடைதல் 
*அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை 
*மாபெரும் பத்து அடையாளங்கள் 
*புகை மூட்டம்  
*தஜ்ஜால் 
*ஈஸா நபியின் வருகை 
*யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை 
*அதிசயப் பிராணி
*மேற்கில் சூரியன் உதிப்பது 
*மூன்று பூகம்பங்கள் 
*பெரு நெருப்பு 
*ஈஸா நபியின் வருகை 
 
கியாமத் நாளின் அடையாளங்கள் 
 முஸ்லிம்கள் ஆறு விஷயங்களைக் கட்டாயம் நம்ப வேண்டும். 

 
1)அல்லாஹ்வை நம்ப வேண்டும் 
2)வானவர்களை நம்ப வேண்டும். 
3)வேதங்களை நம்ப வேண்டும் 
4)தூதர்களை நம்ப வேண்டும். 
5)இறுதி நாளை நம்ப வேண்டும். 
6)விதியை நம்ப வேண்டும். 

Friday, 30 December 2011

கோபம் என்றால் என்ன..?



கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.

►நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது...

►நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது...

►நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது..

►எதிர்பார்த்தது கிடைக்காத போது ...இப்படி பல காரணங்கள் உள்ளன.

மனிதன் உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும்.

கோபத்தின் விளைவுகள்:

►வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும்.

►மனஇருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும்.

►சரியாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது.

►பொதுவாக வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது.

இவ்வாறு கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.

இஸ்லாம் பார்வையில் கோபம்:

முஹமது நபி(ஸல்) கூறுகிறார்கள், மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.புஹாரி :6114 அறிவிப்பாளர் :அபூ ஹுரைரா (ரலி)

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் “கோபம் ஷைத்தானியப் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றான்.
நெருப்பு, நீரால் மட்டுமே அணைகின்றது. எனவே, உங்களில் ஒருவருக்கும் கோபம் வந்துவிட்டால் அவர் ஒளு செய்து கொள்ளட்டும்.(அபூதாவூத்) அறிவிப்பாளர் : அத்தியா அஸ் ஸஅதி.

கோபத்தை கட்டுப்படுத்துதல்:

நபி (ஸல்) அவர்கள் அருகில் இரண்டு பேர் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டார்கள். அப்போது நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டிருந்தோம். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்து விட்டிருக்கக் கோபத்துடன் தம் தோழரைத் திட்டிக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும். ‘அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்’ (சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்பதே அச்சொல்லாகும்” என்று கூறினார்கள். எனவே, மக்கள் அம்மனிதரிடம், நபி (ஸல்) அவர்கள் சொல்வதை நீர் செவியேற்கவில்லையா? என்று கூறினார். அந்த மனிதர், ‘நான் பைத்தியக்காரன் அல்லன்” என்றார்.
புஹாரி :6115 ஸூலைமான் பின் ஸூரத் (ரலி).

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர், “எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள் ” என்று கேட்டுக்கொண்டார். (அந்த மனிதர் அநேகமாக சீக்கிரம் கோபத்திற்குள்ளாகும் இயல்பு கொண்டவராக இருந்தார்.) அதற்கு அண்ணலார், “கோபம் கொள்ளாதீர் ” என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், “எனக்கு அறிவுரை கூறுங்கள்! ”என்று மீண்டும் மீண்டும் (பலமுறை) கேட்டுக் கொண்டார். அண்ணலார் ஒவ்வொரு முறையும் “நீர் கோபம் கொள்ளாதீர்! ” என்றே பதில் தந்தார்கள். (புகாரி)அறிவிப்பாளர் : அபூஹுரைரா


கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன.சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால்பாதிக்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. ஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம்.

மனிதத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்து - பாராட்டி - உதவி செய்து வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும்

Tuesday, 27 December 2011

ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா?


ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடு பட முடியவில்லையா? மூளை சரியாக செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.
காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.
ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம்
மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.
மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.
மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.
அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.
மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.
மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.
ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன.
எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.
பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.
‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது.
மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும் இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்.

My Blog List