Search This Blog

Wednesday, 28 September 2011

Smoking

ஹஜ் சில காட்சிகள்

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை, இறைவன் உதவியால் இனிதே நிறைவேற்றிவிட்டு மக்கள் தங்கள் தாயகம் திரும்பிக் கொண்டிருப்பார்கள். அதன் சில காட்சிகள் உங்களுக்காக.



ஹாஜிகளின் வசதிக்காக இந்த வருடம் முதல் தொடங்கப்பட்ட இரயில் போக்குவரத்து




அவசர சூழ்நிலைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்



உறவுகளைப் பிரிந்து இஹ்ராம் அணிந்த நிலையில் இறையில்லம் நோக்கி பயண‌மாகும் ஹாஜிகள்



ஹாஜிகளை வரவேற்க தயாரான மக்கா நகரம்



ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்திறங்கும் ஹாஜிகள்



ஹாஜிகளால் நிரம்பி வழியும் ஹரம் ஷரீஃப்



தவாஃப் செய்யும் ஹாஜிகள் (ஹஜ் சமயமாக இருப்பதால் கஃஅபாவின் திரை சற்று தூக்கி கட்டப்பட்டுள்ளது)



ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடும் ஹாஜிகள்



மகாமு இப்ராஹீம் (இப்ராஹீம் (அலை)அவர்கள் நின்ற இடம்)




நூர் மலையின் உச்சியிலிருந்து இரவு நேர மக்கமா நகரின் தோற்றம்




வயதானவர்களுக்காகவும் உடல் ஊனமுற்றோருக்காகவும் காத்திருக்கும் பிரத்யேக‌ பேருந்துகள்



ஸஃபா, மர்வாவுக்கிடையிலான தொங்கோட்டம்



பிரிக்கப்பட்டுள்ள பல பாதைகள் வழியாகவும் (எட்டாவது நாள்) மினாவுக்கு புறப்பட்டு செல்லும் ஹாஜிகள்



மினாவில் வந்து சேர்ந்துக் கொண்டிருக்கும் ஹாஜிகள்



மினாவில் தங்கி ஓய்வெடுக்கும் ஹாஜிகள்




ஒன்பதாவது நாள் (சூரிய உதய‌த்திற்கு பிறகு) சாரை சாரையாக அரஃபா திடல் நோக்கி செல்லும் ஹாஜிகள்



கூட்ட‌த்தில் தடைப்பட்டு நிற்கும் மக்களுக்கு உணவு, தண்ணீர் கொடுத்து உதவும் அணியினர்



அரஃபா மைதானத்தில் கூடியுள்ள மக்கள் வெள்ளத்தின் ஒரு பகுதியினர்



அரஃபாவில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் ஹாஜிகள்



அரஃபாவிலுள்ள நமீரா பள்ளி நிரம்பியதால் பள்ளிக்கு வெளியிலும் தொழும் ஹாஜிகள் கூட்டத்தின் ஒரு பகுதி



(அரஃபா திடலில்) சூரியன் அஸ்தமிக்கும் வரை தங்கள் இரட்சகனிடம் கையேந்தி நிற்கும் ஹாஜிகள்



அரஃபாவிலிருந்து புறப்பட்டு முஸ்தலிஃபா செல்லும் ஹாஜிகள் 





ஜம்ரத்களுக்கு கல் எறியும் ஹாஜிகள்




குர்பானி கொடுத்த பிறகு மொட்டைப் போடும் ஹாஜிகள்




நான்கு பக்கங்கள் கொண்ட ராட்சச கடிகாரமும் மினாரவின் மேல் பகுதியும்



மஸ்ஜிதுன் நபவியின் வெளிப்பகு

வெளிநாட்டு வாழ்க்கை

யாரைத்தான் விட்டது இந்த இக்கரைப்பச்சை . .
இந்த நாட்டுக்கு வந்தவனுக்கோ
அக்கரை பச்சை . . . !

மறக்காமல் மேற்கொள்ளும்
தொலைபேசி அழைப்பு . . .
சொந்த பந்தங்களின் பரிதவிப்பு . .
விசா இல்லையா என விசாரிப்பு . . .
எண்ணிக்கை முடிந்தாலும்
எம் எண்ணங்கள் முடிவதில்லை . . . !

அள்ளிப் பூசிக்கொண்ட
நறுமணம் வாசனை தூக்குகிறது . . .
இந்த வீணாய்ப் போன
வாழ்வின் ஏக்கம் தெரியாமல் . . . !

எமது உறக்கமோ இறக்கமோ
பந்தமோ பாசமோ
விற்கப்படுகிறது வெளிநாட்டுக்காரன்
கம்பனிக்கு . . .
மாத இறுதியில்
இந்த காசு கொண்டு மீட்க முடியாத
துக்கம் மட்டும் அப்படியே இருக்கிறது . . . !

எதிர் கால இலட்சியங்களை
4 மணி நேர விமானப் பயணத்தில்
தொலைத்து விட்டு . . .
கானல் நீர் என்று
தெரிந்த பின்பும்
நீச்சலடிக்க நினைக்கின்றோம் . . . !

வெள்ளிக்கிழமை தான்
நிறுத்துகிறது . . .
இயந்திரம்போல் மாறிவிட்ட
இந்த வெளிநாட்டு வாழ்வை
சனிக்கிழமை வந்து விட்டால் . . .
சனியனும் வருகிறது
எம் நிம்மதி தொலைக்க . . . !

வீட்டில் போதும் என்றளவுக்கு
உறக்கம் கொண்ட நாட்கள்
இந்த அலாரம்
மணியோசை கேட்கும் போது
அடி நெஞ்சில்
அனலாய் கொதிக்கிறது . . .

அன்பான அம்மா
உயிரான நண்பர்கள்
என் ஊரின் குட்டிச்சுவர்
என் கிரிக்கட் மைதானம் . . .
எல்லாமே ஓர் இரவுக்
கனவினில் வந்து
காணாமல் போகிறது . . .


இவைகளை நினைத்து பார்க்கும் போதெல்லாம்
குடும்பச்சுமை வீட்டுக்கஷ்டம் எல்லாமே வந்து . . .
எம் கண்களை நனைத்து விடுகிறது . . .

பிறந்ததில் இருந்தே
ஒன்றாய் வளர்ந்த நண்பனின் திருமணத்தில்
மாப்பிள்ளைக்கு டை கட்டுதல் . . .
கூடி நின்று கிண்டலடித்து
செமையாய் வாங்கிக் கொண்ட
சம்பவங்கள் . . .
கல்யான சப்ளை நேரத்து பரபரப்பு . . .
பெண்வீட்டில் மரியாதை
குறைவு என்று
வீண் பிடிவாதம் . . .
பெண் கூட்டம் தூர இருந்து
எமக்கு கொடுக்கும் ஓரப்பார்வை . . .
நான் தான் ஹீரோ என்று
என்னும் அந்த
காதல் பருவம் . . .
ஒளிந்து ஒளிந்து ஜன்னல்வலியே
நாம் கண்ட மணமகள் மினாரா . . . !

இவையெல்லாம் கிடைக்காமல்
சம்பிரதாய அழைப்புக்காக
சங்கடத்தோடு . . .
தொலைபேசி வாழ்த்தினூடே
தொலைந்துவிடுகிறது
எம் அயல் தேசத்தில் எம் வாழ்வு . . . !

கோடி கோடியாய்
சம்பாதிதாலும்
நாங்களெல்லாம் இந்த
அயல் நாட்டு அடிமைகள் . . .
தொலைபேசியிலும் ஈ மெயிலிலும்
வருகின்ற
நண்பர்களின் உறவுகளின்
மரணச்செய்திகளுக்கு . . .
இந்த அராபிக்கடல் மட்டுமே ஆறுதல் . . .

உயிரைத்தாண்டி பழகியவர்களெல்லாம் . . .
ஒரு துளி கண்ணீரில்
கரைந்து விடுகிறார்களே . . .
இந்த பாலாய்ப்போன
வெளிநாட்டு
வாழ்க்கயில் . . . !

இங்கு வருவதட்காக
இழந்ததையும்
வந்ததனால் பெற்றதையும்
கூட்டிக் கழித்துப்
பார்த்தால் . . .
எஞ்சுவது
இழப்பு மட்டும் தான் . . . !

கிள்ளாச்சொல்லி
தொலைபேசியில்
குழந்தை அழும் சத்தம் கேட்கிறோம் . .
உள்ளுக்குள்ளே நாம்
அழும் சத்தம்
யாருக்காவது கேட்கிறதா ?

விடுமுறையில் ஊருக்கு வரும் போது
வளர்ந்து விட்ட சின்னஞ்சிறுசுகள் . . .
மாறிப்போன கலாச்சாரம் . . .
நெருங்கியவர்களின் மறைவு
புதிய முகங்களின் பிறப்பு . . .
எனது ஊரை எனக்கே
புரிந்து கொள்ளமுடியாத சூல் நிலை . . .
இப்படி
எல்லா மாற்றங்களையும் கண்டு . . .

மீண்டும் வெளிநாடே வேண்டாம்
என அடம்பிடிக்கும் மனதிடம்
கடனும் கஷ்டமும் வந்து
ஆறுதல் சொல்லி
மீண்டும் அனுப்பி விடுகிறது . . .
இந்த வெளிநாட்டுக்கு . . .

Sunday, 25 September 2011

நீ இந்த உலகை விட்டுப் பிரிந்து செல்வது உறுதி

இந்த உலகம் நமது முக்கிய குறிக்கோள் அல்ல!

இவ்வுலகில் எவ்வளவுதான் ஆடம்பரமாக வாழ்ந்தாலும் – எவர் உதவியும் உனக்குத் தேவையில்லாமல் இருந்தாலும் என்றோ ஒருநாள் நீ இந்த உலகை விட்டுப் பிரிந்து செல்வது மட்டும் உறுதி.

உலகத்தை அனுபவித்தாய். உன்னை படைத்தவனை நினைக்கவில்லையே! அவனுக்காக உன்சிரம் பணியவில்லையே! அவன் பள்ளி நோக்கி உன் கால்கள் செல்லவில்லையே! அவனைப் பயந்து உன் விழிகள் அழவில்லையே! அவன் பாதையில் உன் பணத்தை செலவு செய்யவில்லையே! நீ உனக்காகவே உலகில் அழாதபோது, உனக்காகப் பிறர் அழுவார்கள் என்று நினைக்கின்றாயா? உனக்கென நீ இறைவனிடம் பிரார்த்திக்காதபோது பிறர் உனக்காக பிரார்த்திப்பார்கள் என்று எண்ணுகின்றாயா?

உன்னை எல்லோரும் முஸ்லிம் என்கின்றார்கள்தானே! ஆனால் உண்மையில் அல்லாஹ்விடத்தில் நீ முஸ்லிம்தானா? தொழாதவன் காஃபிர் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்களே! அப்படியானால் நீயும்....?!
Kaba

(அல்லாஹ்வை ) நம்பியோருக்கு அவர்களின் இதயங்கள் அவனை அஞ்சிப் பயந்து நினைவு கூர்ந்திட இன்னும் நேரம் வரவில்லையா? தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்ட எனது அடியார்களே!..நீங்கள் அல்லாஹ்வின் அருளை (மன்னிப்பை) விட்டும் நிராசையாகி விடவேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்போனும், கிருபையுள்ளாவனுமாவான். (குர்ஆன் – அல்ஹதீத்: 53)

My Blog List