எனக்கு கென்சர் வருவதடற்கு வாய்ப்பே இல்லை.நான் சரியான டயட்டில் தான்
இருக்கிறேன் எனக்கு ஏன் கென்சர் வர வேண்டும்? என்று கூட நினைக்கலாம்,
அனைவருக்கும் கேன்சர் நோயை உண்டாக்கும் செல்கள் இருக்கதான் செய்யும். அது
சிலரை இல்ல இப்ப பலரை நிறையவே தாக்கி கொண்டு இருக்கிறது. அனைவருமே இதில்
விழிப்புணர்வுடன் இருக்கவும். 40 வயதை கடக்கும்
போது புற்றுநோய்க்கான முழு பரிசோதனை எடுத்து கொள்வது நல்லது.
குடும்பத்தில் ஒருவரை புற்றுதாக்கிவிட்டால் பரம்பரை பரம்பரையாக வரவும்
வாய்ப்பிருக்கு. ஆகையால் கூடுதல் கனவம் கொள்ளுங்கள் வாயில் பிளந்து
பிளந்து கொப்புளங்கள். இருந்தாலும் கவனம் கொள்ளவேண்டும். வயிற்றில் புண்
இருந்தால் தான் வாயில் கொப்புளம் வரும். அதுவும் நாளடைவில் கேன்சர்
கட்டியாக மாற வாய்ப்பிருக்கு. தலை வலியோ, வயிற்று புண், வயிற்று வலி ,
நெஞ்ரிச்சல், வாயு பிரச்சனை இதுபோல் இரண்டு முன்று மாதத்துக்கு மேல்
சரியாகாமல் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை சந்திக்கவும். ஏதும் தீராத
வயிற்று வலி , வாய் புண் கொப்புளங்கள், நீண்ட நாள் வலியில்லாமல் ஆறாத கட்டி
மற்றும் புண்கள் இருந்தால் அடிக்கடி மயக்கமாக இருந்தாலும் என்ஸ்கோபி
மற்றும் மெமோகிராம் டெஸ்ட்போன்ற மருத்துவர் சொல்லும் சிகிச்சைகளை முறையாக
எடுத்து கொள்ளுங்கள் கரிஞ்ச தீஞ்ச உணவும் கேன்ஸர் வருவதற்கு ஒரு
காரணமாம். அதிக வெப்பத்தில் (க்ரில், பார்பெக்யூ, எண்ணெயை கொதிக்கவைத்து
பொரிப்பது, அடுப்பு எப்பவும் பெரிய தீயில் வைத்துச் சமைப்பது...போன்றதும்
கேன்ஸருக்குக் காரணம்... கவனமாக தீயின் தனலை சமையலுக்கு ஏற்றவாறு வைத்து
சமைக்கவும்., சமைக்கும் போது அதிக புகை போக அதை நுகர்ந்துகொண்டு
சமைக்காதீர்கள் காற்றோட்டமாக ஜன்னலை திறந்து வைத்துகொள்ளுங்கள் அல்லது
எக்ஜாஸ்ட் பேன் போட்டு கொள்ளுங்கள். தற்போது புடவை கட்டினாலும் கேன்சர்
வருகின்றது என்று தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. ரொம்ப இருக்கமாக
அழுத்தி டைட்டாக பெட்டிகோட் அணிவதை தவிர்த்து கொள்ளுங்கள். புண்ணாகி அதுவே
கேன்சர் கட்டிகளாக மாற வாய்ப்பிருக்கு. புற்றுநோய் பாதிக்கபட்டவர்கள் இப்ப
கீமோ, ரேடியேஷன், ஆப்ரேஷன் என செய்து இருந்தால் பொலியுஷன் நிறைந்த
இடத்துக்கு போகாதீர்கள், அது உங்களுக்கு அலர்ஜியை உண்டாக்கும். அதே போல்
சமைக்கும் போது அதிக புகையில் நிற்காதீர்கள். நிறைய ஆட்கள் இருக்கும்
இடத்திற்கு போகாதீர்கள்.ஊதுபத்தி, சாம்ராணி புகை இருக்கும் இடத்தில் அந்த
புகையை நுகர்ந்து கொண்டு இருக்காதீர்கள். தன்னம்பிக்கையோடு தைரியமாக
முறையாக சிகிச்சையை எடுத்து கொள்ளுங்கள். என்னுடைய மிக மிக முக்கியமான
அட்வைஸ் என்னவென்றால், Mobile phones பாவிப்பதை குறைத்துக்கொள்ளுஙகள்.
Battery low ஆகிய சந்தர்ப்பத்தில் Mobile phones பாவிக்க வேண்டாம்.
கருத்து வேறுபாடென்னும் கறையான்கள் வந்து உங்கள் புரிந்துணர்வை சீரழிக்கும்! மிகவும் புத்தியுடன் நடந்துகொள்ளுங்கள்!
Wednesday, 21 March 2012
Friday, 9 March 2012
சிறுநீரக செயலிழப்பு, கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி),சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக
பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார். நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன்.அதை விளக்கிக் கூறவும் கேட்டேன்.அவரால் விளக்க முடியவில்லை.ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.
அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாகஅறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXIGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார்.
பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும்(முன்பே சரநூலில் கூறியிருக்கிறேன் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும்,தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.
அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது,இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது).எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.
சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.
இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது,மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.
விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.
மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது.
இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையான இது போன்ற விடயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
Subscribe to:
Posts (Atom)
My Blog List
-
-
’தொடு’ திரை - காட்சி# 1 சூர்யா தன் அறையில் துணையில்லாத ஒற்றை காதல் பறவை வளர்க்கிறான். தொடுதிரையில் காதற்கிளிகளை உயிர்ப்பித்து கீச்சு கீச்சென பேசி சிறகடிக்கச் செய்கின...6 years ago
-
An update to the Blogger post editor to help with mixed content - Back in September, we announced that HTTPS support was coming to blogspot.com, making it possible for you to encrypt connections to your blog; since then,...9 years ago
-
ஒரு யுகமழித்த வழி... - இதே..... இரவாய்த்தான் இருக்கவேண்டும் குரைத்தலின் ஓசை கூடியும் குறைந்தும் பாதச்சுவட்டை அழித்தழித்தே கடக்க வேண்டியிருக்கிறது. அடர்ந்த கிளைகள் அடவெடுக்க முக...10 years ago
-
ஒளி ஏற்றும் தீபம் - தி .க .சி - எண்ணற்ற மனிதர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தவர் எங்கள் வாழ்வுக்கும் ஒளி ஏற்றி வைத்தார் என்பதில் எந்த வியப்பும் இல்லை .எங்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே தி ....11 years ago
-
பயணநாளில் ஒரு நாள் - பயணநாளில் ஒரு நாள் ----------------------------------- சிதம்பரம் அண்ணாமலை நகரில் இருக்கும் எனது நண்பர் இக்பாலை சந்திப்பதாக ஏற்பாடு. நண்பரை சந்தித்து வ...12 years ago