Search This Blog

Wednesday, 28 September 2011

புகை நமக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு.

மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் வழி முறைகளை இஸ்லாம் ஒரு சந்தர்ப்பத்திலும் அனுமதித்தது கிடையாது. இன்று நமக்கு மத்தியில் வாழும் மனிதர்களில் பலர் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் விதமாக புகைப் பிடிக்கும் தீய காரியத்தில் ஈடுபடுவதை நாம் காண் முன்னே கண்டு வருகிறோம்.

புகை பிடிக்கவில்லை என்றால் ஏதோ தங்கள் கவுரவம் பாதிக்கப்பட்டதாக இவர்கள் நினைக்கிறார்கள். புகைப் பிடிப்பவன் தான் மேலானவன் என்பதைப் போலும் புகை பிடிக்கத் தெரியவில்லை அல்லது பிடிப்பதில்லை என்ற வட்டத்தில் யாராவது இருந்தால் அவர்கள் நாகரீகம் தெரியாதவர்கள் என்பதைப் போலும் தான் இந்த சமுதாயம் அவர்களை நோக்குகிறது.

ஆனால் இஸ்லாம் இப்படிப்பட்ட தீய நாகரீகங்களை ஒரு போதும் அனுமதிப்பதில்லை.

இறைவன் தனது திருமறைக் குர்ஆனில் இப்படிக் குறிப்பிடுகிறான்.

உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! (அல்குர்ஆன் 4:29)

உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்!  (அல்குர்ஆன் 2:195)

புகைத்தல் என்பது மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் மாபாதகச் செயல்பாடாகும்.
 

My Blog List